Advertisment

மாவலி பதில்கள்! 07.08.24

s

பா. முருகன், புளியரை

டெல்லி மழையில் புதிய பாராளுமன்றக் கட்டடம் ஒழுகுகிறதாமே?

mm

ஆமாம். சமீபத்திய கடும் மழைக்கு புதிய பாராளுமன்றக் கட்டடத்தின் ஒரு அறையின் மேற்கூரை ஒழுக, அதன்கீழ் வாளி வைக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. பாராளுமன்றத்துக்குச் செல்லும் நடைபாதைகளில் முட்டியளவுக்கு நீர் தேங்கியது சர்ச்சையாகியிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “வெளியே வினாத்தாள் கசிவு. உள்ளே மழைநீர் கசிவு’என கேலி செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisment

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம். சட்டம் ஒழுங்கு மோசமாகிறது என வானதி கூறியிருப்பது பற்றி?

Advertisment

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மழை

பா. முருகன், புளியரை

டெல்லி மழையில் புதிய பாராளுமன்றக் கட்டடம் ஒழுகுகிறதாமே?

mm

ஆமாம். சமீபத்திய கடும் மழைக்கு புதிய பாராளுமன்றக் கட்டடத்தின் ஒரு அறையின் மேற்கூரை ஒழுக, அதன்கீழ் வாளி வைக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. பாராளுமன்றத்துக்குச் செல்லும் நடைபாதைகளில் முட்டியளவுக்கு நீர் தேங்கியது சர்ச்சையாகியிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “வெளியே வினாத்தாள் கசிவு. உள்ளே மழைநீர் கசிவு’என கேலி செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisment

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம். சட்டம் ஒழுங்கு மோசமாகிறது என வானதி கூறியிருப்பது பற்றி?

Advertisment

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மழை பெய்வ தில்லை, தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெள்ளம் வருகிறது, இதுபோல நிறைய பேசப்படுவதுண்டு. இதை ஆங்கிலத்தில் மித் என்பார்கள். சில அரசியல் கொலைகள் நடந்திருக்கின்றன. முதல்வர் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தவேண்டும் என்றால் சரி. உத்தரப்பிரதேசத்தில் கன்வர் யாத்திரை சென்ற ஊர்வலத்தின் மீது தெரியாமல் மொகித் என்ற இ-ரிக்சா ஓட்டுநர் உரசியதற்காக முரட் டுத்தனமாக அடித்துத் தூக்கிபோட்டுச் சென்றிருக்கிறார் கள். இதில் அவர் இறந்துவிட, மாரடைப்பால் இறந்ததாக போலீஸ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அவரது தங்கை நீலம் ஊடகங்களைச் சந்தித்துப் பேச, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வானதியின் அளவுகோலில், தமிழகத்தில் நிலவுவது சட்டம்-ஒழுங்கின்மை என்றால், உத்தரப் பிரதேசத்தில் நிலவுவது சட்டம் ஒழுங்கு படுகொலை.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்.. ஜன் சுராஜ் என்ற பெயரில் தனி அரசியல் கட்சி தொடங்கப் போகிறாராமே..?

தொடங்கட்டும். அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்துச் சேர்த்த ஆயிரக்கணக்கான கோடி பிரசாந்த் கிஷோரிடம் இருக்கிறது. அதைச் செலவழிக்க வேண்டாமா!

வாசுதேவன், பெங்களூரு

உடனுக்கு உடன் வேலை செய்வது, தள்ளிப் போடுவது. எது பெட்டர்..?

செய்யப்போவது நல்ல காரியமாக இருந்தால், நம் முன்னேற்றத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால், வாங்கிய கடனை அடைப்பதாக இருந்தால் உடனுக்குடன் செய்துவிடுங்கள். பிறர் குடி கெடுக்கும் காரியங்களை, தீமை பயக்கும் விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை, வெட்டிப் பொழுதுபோக்குவது தொடர்பான விஷயங்களை முடிந்தவரை தள்ளிப்போடுங்கள்.

ஆர். மகேஷ்குமார், கோவில்பட்டி

வயநாடு, இமாச்சலப்பிரதேசம்?

இயற்கையின் கோர ஆட்டம்! வயநாட்டில் நிலச்சரிவு, இமாச்சலப்பிரதேசத்தில் மேகவெடிப்பு! உலகம் முழுவதுமே கடும் மழைப்பொழிவு என்பது இயல்பான விஷயமாகி வருகிறது. முன்பு மழைக்காலம் என்பது மாதம் முழுவதும் நீடிக்கும் விஷயம். ஒரே சீராக மழை பொழிந்துகொண்டிருக்கும். பொழிந்த நீர் வடிந்து, புதிய மழை பொழியும். இப்போதைய மழை ஒரே நேரத்தில் 20 செ.மீ., 30 செ.மீ., 50 செ.மீ என்று பெய்யும்போது தாங்கமுடியாமல் போய்விடுகிறது. ஆனால் இந்தச் சீர்குலைவுகளுக்குப் பின்னால், மனிதக் கரங்களே இருக்கிறது. புவி வெப்பமயமாதல் என்பது ஒன்றும் ஒரே நாளில் வந்ததில்லை. விதைத்ததை அறுவடை செய்துதான் ஆகவேண்டும்! தாமதமாகவாவது மனிதர்கள் விழித்துக் கொள்ளவேண்டும்!

ச.அமிர்தா, கே.கே.நகர், சென்னை

ரத்த தானத்தைவிட உயர்ந்தது எது?

ரத்த தானத்தைவிட உயர்ந்ததா... இல்லையா என அளவீடு செய்வதில் ஆர்வமில்லை. அதேயளவுக்கு முக்கியமானது தாய்ப்பால் தானம். சரிவர தாய்ப்பால் அருந்தாத குழந்தைகள் நிமோனியா, வயிற்றுப்போக்கு, உடல்நலமின் மையால் இறக்கின்றன. இந்த வருடம் மட்டும் அப்படி 6 லட்சம் குழந்தை கள் உயிரிழந்துள்ளன. இதனால் தாராளமாக தாய்ப்பால் சுரக்கும் அன்னையர்கள் தாய்ப்பால் தானம் செய்ய ஊக்குவிக்கப்படுவது உலக அளவில் பேஷ னாகி வருகிறது. இந்தப் பால், தாயை இழந்த குழந்தைகள், தாய்ப்பால் சுரக்காத அன் னையின் குழந்தைகளுக்கு புகட்டப்படுகின்றன.

nkn070824
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe