Advertisment

மாவலி பதில்கள்

ss

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பல்லாயிரம் கோடி ஒதுக்கி, 10 ஆண்டாகியும் எந்த பலனும் இல்லாத கங்கை தூய்மை திட்டத்துக்கு மீண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதே ஆளும் பா.ஜ.க அரசு?

Advertisment

mm

எந்தப் பலனும் இல்லையென நீங்கள் எப்படிச் சொல்லலாம்? திட்டத்துக்கு ஒதுக்கிய பணம் கங்கையென உரியவர்களின் பாக்கெட்டிலும் சூட்கேஸிலும் பாய்ந்ததுதானே. தற்போதைய நிலவரப்படி உலகின் ஐந்தாவது அதிக மாசடைந்த நதி கங்கை. இத்தனைக்கும் இமயமலையிலிருந்து தூய பனிநீராக கீழிறங்கி வரும் நதியை ஆலைக் கழிவுகளாலும் அரசுகளின் பராமரிப்பின்மையாலும் இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம் என நான்கு மாநில மக்களின் தாகம் தீர

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பல்லாயிரம் கோடி ஒதுக்கி, 10 ஆண்டாகியும் எந்த பலனும் இல்லாத கங்கை தூய்மை திட்டத்துக்கு மீண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதே ஆளும் பா.ஜ.க அரசு?

Advertisment

mm

எந்தப் பலனும் இல்லையென நீங்கள் எப்படிச் சொல்லலாம்? திட்டத்துக்கு ஒதுக்கிய பணம் கங்கையென உரியவர்களின் பாக்கெட்டிலும் சூட்கேஸிலும் பாய்ந்ததுதானே. தற்போதைய நிலவரப்படி உலகின் ஐந்தாவது அதிக மாசடைந்த நதி கங்கை. இத்தனைக்கும் இமயமலையிலிருந்து தூய பனிநீராக கீழிறங்கி வரும் நதியை ஆலைக் கழிவுகளாலும் அரசுகளின் பராமரிப்பின்மையாலும் இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம் என நான்கு மாநில மக்களின் தாகம் தீர்க்கிறது. போதாதற்கு அண்டைநாடான பங்களாதேஷுக்கும் பலனளிக்கிறது. கங்கையைச் சுத்தப்படுத்தி, அதனைப் பருகும் கோடானுகோடி மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அம்மாவுக்கு வரும் பென்ஷ னை பிள்ளைகள் பிடுங்கித் தின்பதுபோல, கங்கையின் பேரில் திட்டம்போட்டு, அரசியல்வாதிகள் ஆதாயமடைகிறார்கள்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

நாட்டில் ஊழல் செய்வதில் சிறந்த தலைவர் சரத்பவார் என்கிறாரே அமித்ஷா?

மகாராஷ்டிரத்தில் கடந்த பத்தாண்டுகளாக சிவசேனா, பா.ஜ.க. கட்சிகள்தான் ஆட்சியில் உள்ளன. கடைசியாக சரத்பவார் முதல்வராக இருந்தது 1993- 95 காலகட்டத்தில். தேசிய வாத காங்கிரஸ் மீதும் சரத்பவார் மீதும் குற்றம்சாட்டும் பா.ஜ.க., ஒருகட்டத்தில் தேசியவாத காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணிக்குத் தயாரானபோது, அஜித்பவார் மீதான வழக்குகளை எல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டது. தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் அஜித்பவாருடன் கூட்டணி வைத்துக்கொண்டது. அமித்ஷாவைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ளவர்கள் எல்லாம் உத்தமபுத்திரர்கள். மற்றவர்கள் எல்லாம் ஊழல் பொறுக்கிகள்!

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

Advertisment

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிப ரானால் அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா..?

அரசியல் சிக்கலானது. சீனாவுடனான அமெரிக்காவின் முரண் தொடரும்வரை, யார் அமெரிக்க அதிபராயிருந்தாலும் இந்திய ஆதரவு நிலையையே எடுப்பார்கள். அதேசமயம், இந்தியாவை அதன் இடத்தில் வைக்க பாகிஸ்தானுக்கும் ஆதரவு அளிக்கும் அமெரிக்கா. தற்போது பாகிஸ்தானின் கூடுதல் சீனச் சாய்வால் நாம் அமெரிக்காவின் செல்லப்பிள்ளைதான். ஆனால், ருஷ்யாவுடனான நமது அணுக்கம், அதன் பலனை நமக்கு அளிக்காமல் தடுக்கும். கமலா ஹாரிஸ் அதிபரானால், இந்தியர்கள் சந்தோஷப்படலாம். மற்றபடி, அமெரிக்காவின் ராஜதந்திர நிலைப்பாட்டைத் தாண்டி கடுகளவு கூடுதல் நன்மைகூட எந்த அதிபராலும் இந்தியாவுக்குச் செய்துவிடமுடியாது.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

திருப்பத்தூர் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கணவரை போலீஸில் சிக்கவைத்த ஜான்சியின் செயல் எதைக் காட்டுகிறது?

சமூக அக்கறை என்பதைவிட, கணவன் கொடுமையிலிருந்து விடுபட இதுவொரு வழி என்றுதான் அந்த ஜான்சிராணி வாள் சுழற்றியிருக்கிறார். கஞ்சா போட்டு அடித்தாலும் கணவன் என்றிருக்காமல், போலீஸுக்கு போன் போட்டுவிட்டார்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

ஜெகன்மோகன் ரெட்டியை கடத்தல் காரர்களுடன் ஒப்பிட்டு நாயுடு பேசியிருப்பது குறித்து..?

ஒருவேளை ஜெகன்மோகன் ரெட்டிக்கு அடுத்த தேர்தலில் வாய்ப்புக் கிடைத்து ஆட்சிக்கு வந்தால் சந்திரபாபு நாயுடுவை கொள்ளைக்காரர் என்பார்.

கே. அந்தோணி, மதுரை.

இந்தியா டாப்பாக இருக்கும் ஒரு ஏரியாவைச் சொல்லுங்களேன்…?

உலகிலேயே பாம்புக் கடியால் அதிகளவில் உயிரிழப்புகள் நடக்கும் நாடு இந்தியாதானாம். இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் பேரை பாம்புகள் கடிக்கின்றன. அதில் 50,000 பேர் மருந்து கிடைக்காமலோ, சிகிச்சை பலனளிக்காமலோ இறந்துவிடுகிறார் கள். பாம்புக் கடியில், உலக அளவில் இந்தியா டாப் என்றால், இந்திய அளவில் பீஹார் டாப்.

nkn030824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe