Advertisment

மாவலி பதில்கள் (22.06.24)

sss

mavali answers

சி. கார்த்திகேயன், சாத்தூர்

அதற்குள் சந்திரபாபு நாயுடு ஆரம்பித்துவிட்டாரே?

இதற்கென்ன ஒரு ஜோசியரைப் பார்த்து நல்ல நாள் குறித்துக்கொடுக்கும்படியா கேட்கமுடியும்? கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் சந்திரபாபுவைக் குறிவைத்து சில நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். அதில் தேர்தலுக்குமுன் சந்திரபாபு நாயுடுவை சிறையிலடைத்துதும் அடக்கம். இப்போது மெகா மெஜாரிட்டியுடன் ஜெயித்திருக்கிறார் நாயுடு. ஆட்டத்தை ரிவர்ஸில் ஆடவேண்டியதுதான். ஆனால் தனிப்பட்ட பழிவாங்கல்களை மறந்து மக்களுக்கு நல்லது செய்தால், வரலாறும் மக்களும் மறக்கமாட்டார்கள். அந்தப் பெருந்தன்மையை நோக்கி நடப்பதற்கான வயது நாயுடுவுக்கு இருக்கிறது. செய்வாரா?

Advertisment

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

குஜராத்தில் முதலீடு செய்த அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு 70% மானியம் வழங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கு

mavali answers

சி. கார்த்திகேயன், சாத்தூர்

அதற்குள் சந்திரபாபு நாயுடு ஆரம்பித்துவிட்டாரே?

இதற்கென்ன ஒரு ஜோசியரைப் பார்த்து நல்ல நாள் குறித்துக்கொடுக்கும்படியா கேட்கமுடியும்? கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் சந்திரபாபுவைக் குறிவைத்து சில நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். அதில் தேர்தலுக்குமுன் சந்திரபாபு நாயுடுவை சிறையிலடைத்துதும் அடக்கம். இப்போது மெகா மெஜாரிட்டியுடன் ஜெயித்திருக்கிறார் நாயுடு. ஆட்டத்தை ரிவர்ஸில் ஆடவேண்டியதுதான். ஆனால் தனிப்பட்ட பழிவாங்கல்களை மறந்து மக்களுக்கு நல்லது செய்தால், வரலாறும் மக்களும் மறக்கமாட்டார்கள். அந்தப் பெருந்தன்மையை நோக்கி நடப்பதற்கான வயது நாயுடுவுக்கு இருக்கிறது. செய்வாரா?

Advertisment

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

குஜராத்தில் முதலீடு செய்த அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு 70% மானியம் வழங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் குமாரசாமி கூறுகிறாரே?

Advertisment

குஜராத்தில் அமைந்திருக்கும் சிப்ஸ் நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்துக்கு, அது உருவாக்கும் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் ரூ.3.2 கோடி மானியம் அளிக்கப்படுவதாகவும், அதை இங்குள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு அளித்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகுமே என முதலில் சேம்சைடு கோல்டு அடித்திருந்தார் எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி. தற்போது, இந்தியாவுக்கு செமி கன்டக்டர் துறை அத்தியாவசியமானது. நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு எடுத்தாளப்பட்டுவிட்டது என அவசரமாக ரிவர்ஸ் வாங்கியிருக்கிறார்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியே வெற்றிபெறும் என மதுரை ஆதீனம் கூறியிருக்கிறாரே?

வெற்றி பெறுவது எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ, ஆதீனம் தனது வேலையை விட்டுவிட்டு ஜோசியம், அருள்வாக்கு சொல்லும் வேலைகளில் கவனம் செலுத்துவதைக் கைவிடவேண்டும். அரசியல், லௌகிகம் வேண்டாம் என்றுதானே ஆன்மிகப் பாதையில் இறங்கியிருக்கிறார்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு

நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை, அ.தி.மு.க. புறக்கணிக்க முடிவுசெய்துள்ளது ஏன்?

ஓ.பி.எஸ்.ûஸப் புறந்தள்ளி முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரையிலான சட்டமன்ற, மக்களவை, பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் எதிலும் எடப்பாடி வெற்றியைக் கொண்டுவந்து குவிக்கவில்லை. தோல்வியின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டிக் கொள்வதைவிட, நாகரிகமாக ஒதுங்கிக்கொள்ளலாம் என ஆளும்கட்சி மீது பழியைப் போட்டு புறக்கணித்துள்ளார். வெற்றி ஆளும்கட்சிக்கென்றால் பரவாயில்லை. தப்பித் தவறி அங்கே பா.ம.க. ஸ்கோர் செய்தால், எடப்பாடி முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்வார்?

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

வயநாடு தொகுதியின் வாயிலாக நேரடி அரசியலில் முதன்முதலாக களமிறங்க உள்ளாரே பிரியங்கா காந்தி...?

ஆமாம், போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ரேபரேலியைத் தக்கவைக்க முடிவுசெய்திருக்கிறார் ராகுல். கைவிட்ட ஒரு தொகுதியில் தனது சகோதரி பிரியங்காவை நிறுத்துவதென்பது பொருத்தமான முடிவுதான்.

இந்திரா, வில்லிவாக்கம்

அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்க உரிமையளித்தால் மாவலியின் ஓட்டு யாருக்கு?

எனக்கெதற்கு அமெரிக்க ஓட்டுரிமை? இந்தியக் குடிமகன் என்பதில்தான் எனக்கு பெருமை. இந்தியத் தேர்தல் போன்றதல்ல அமெரிக்க தேர்தல். அங்கே இரு கட்சிகள்தான் தேர்தலில் நிற்கமுடியும். இரு கட்சி ஆட்சிமுறைதான் அங்கே. குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என்று இரண்டே கட்சிகள்தான். குடியரசுக் கட்சி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் ட்ரம்ப் மீது பாலியல் வழக்கு, தேர்தல் கலவர வழக்கு, அமெரிக்க ரகசிய ஆவணங்களை தனது இல்லத்துக்குக் கொண்டுசென்ற வழக்கு என தாறுமாறான வழக்குகள் இருக்கின்றன. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பைடனின் பிள்ளை மீதும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கு இருக்கிறது. இதுபோக இதுவரை ஒரேயொரு பெண் அதிபரைக்கூட தேர்ந்தெடுக்காத பிற்போக்கு மக்கள் என்ற பெயரும் அமெரிக்கர்களுக்கு உண்டு.

வி.சீயோன், மதுரை-2

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒரு போர் என மருத்துவர் ராமதாஸ் கூறுவதை ஏற்கிறீர்களா?

கட்சித் தொண்டர்கள் தீவிரமுடன் வேலைசெய்வதற்காகக் கூறியிருப்பார். உண்மையான போரில், இரு தரப்பிலும் ஆயுதப் பிரயோகமும் உயிர் பறித்தலும் நிகழும். தேர்தலில், பெரும்பாலும் வார்த்தைப் போர் மட்டும்தான். போரில் வெற்றி கொண்டவன் தோற்றவனை சிரச்சேதம் செய்துவிடுவான், சிறையில் தள்ளிவிடுவான். தேர்தலில் வெற்றிக்காக செலவிட்ட காசும், டெபாஸிட் தொகையும் போகும். ஆக, தேர்தல் போர் அல்ல… போர் மாதிரி!

nkn220624
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe