சி. கார்த்திகேயன், சாத்தூர்
"அரசியலுக்குப் பிறகு மோடி துறவி ஆகவேண்டும்' என்று சென்னை விவேகானந்தர் இல்ல நிர்வாகி கூறுவது பற்றி?
வாழ்வில் முதல்முறையாக தன் முன் மைக் நீட்டப்பட்டதில், தன்னிலையிழந்து ஏதோ சொல்லவேண்டுமென்பதற்காகப் பேசியிருப்பார். மோடியின் அரசியல் வாழ்க்கை முடிந்த பிறகு சினிமாவுக்கு வந்து கேன்ஸ், ஆஸ்கார் விருதுகளை வெல்லவேண்டும் என்று சொல்-யிருந்தாலாவது ஏதோ பொருத்தமாயிருந்திருக்கும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
பிரகாஷ்ராஜ் என்ன சாதித்துவிட்டார் விருது கொடுக்க என தமிழிசை கூறியிருக்கிறாரே?
என்ன சாதித்தால், எந்த இலக்கைத் தொட்டால் விருது கொடுக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தமிழிசை ஆலோசனை கொடுக்கவேண்டியதுதானே! கௌரி லங்கேஷ் மறைவுக்குப் பின் தொடர்ச்சியாக பா.ஜ.க.வை கடும் விமர்சனம் செய்தவர
சி. கார்த்திகேயன், சாத்தூர்
"அரசியலுக்குப் பிறகு மோடி துறவி ஆகவேண்டும்' என்று சென்னை விவேகானந்தர் இல்ல நிர்வாகி கூறுவது பற்றி?
வாழ்வில் முதல்முறையாக தன் முன் மைக் நீட்டப்பட்டதில், தன்னிலையிழந்து ஏதோ சொல்லவேண்டுமென்பதற்காகப் பேசியிருப்பார். மோடியின் அரசியல் வாழ்க்கை முடிந்த பிறகு சினிமாவுக்கு வந்து கேன்ஸ், ஆஸ்கார் விருதுகளை வெல்லவேண்டும் என்று சொல்-யிருந்தாலாவது ஏதோ பொருத்தமாயிருந்திருக்கும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
பிரகாஷ்ராஜ் என்ன சாதித்துவிட்டார் விருது கொடுக்க என தமிழிசை கூறியிருக்கிறாரே?
என்ன சாதித்தால், எந்த இலக்கைத் தொட்டால் விருது கொடுக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தமிழிசை ஆலோசனை கொடுக்கவேண்டியதுதானே! கௌரி லங்கேஷ் மறைவுக்குப் பின் தொடர்ச்சியாக பா.ஜ.க.வை கடும் விமர்சனம் செய்தவர் பிரகாஷ்ராஜ். பா.ஜ.க.வுக்கு எதிராக விமர்சனக் குரலே அபூர்வம் என்றிருந்த நிலையில், தன் தொழிலுக்கு பாதிப்பு வரலாம் என்றபோதும் தைரியமாகப் பேசினாரே அந்த ஒரு சாதனை போதாதா!
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
இனி தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் வழியாக ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுமாமே?
அதனால் மட்டும் காசு தராமல் நமக்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்துவிடவா போகிறது. கணினி வழிச் சான்றிதழ்கள் வந்தது... லஞ்சம் ஒழிந்ததா? லஞ்சத்தை ஒழிக்க புதிய வழியைக் கண்டறியும்போது, லஞ்சம் வாங்குபவர்களும் அதைப் பெற புதிய வழியைக் கண்டறிவார்கள். ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியில் சேருபவர்களுக்கு, இனிமேல் எளிதாக உரிமம் கிடைக்கும். மற்றவர்கள் கொஞ்சம் சிரமப்பட வேண்டிவரலாம். ஆட்சியி-ருக்கும் அரசியல் கட்சிகளுக்கு உரிய கவனிப்பு செய்யும் பயிற்சி நிறுவனங்களுக்கு மட்டும், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான அனுமதி கிடைக்கலாம்.
அன்னூரார், பொன்விழி
நடிகர் சங்கத்தில் தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்களிக்க அழைத்து வரப்படும் நாடக நடிகர்களை, அதன்பிறகு அவர்கள் கண்டுகொள்வதில்லையே ஏன்?
நாடக நடிகர்களை விடுங்கள். பொதுத் தேர்தல் நேரத்தில், மக்களை வாக்குறுதி மழையில் நனையவிட்டு, தோசை சுட்டு, டீ ஆற்றி, குவித்த கையுடன் வீடு வீடாய் ஏறி இறங்கும் கட்சிகள் அதன்பிறகு உங்களைக் கண்டுகொள்கிறதா என்ன!
ஜெ. மணிகண்டன், வேலூர்.
வாக்களித்து வந்தவுடன் பலரும் மீடியாவில் ஆள்காட்டி விரலை நீட்டி போஸ் கொடுக்கிறார்களே… அது ஏன்?
புதிதாக கம்மலோ, மூக்குத்தியோ போட்டவர்களின் அசைவுகளில், மற்றவர் பார்வையில் தங்கள் காதும், மூக்கும் தென்படவேண்டும் என்ற ஆர்வம் தட்டுப்படும். அதுபோல், ஓட்டுப் போட்டு வந்தவர்களும் தாங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டோம் என உலகுக்குச் சொல்ல பிரியப்படலாம். சர்ப் எக்சல் விளம்பரத்தில் மட்டுமல்ல, ஜனநாயகக் கடமையைச் செய்யும் விவகாரத்திலும் கறை நல்லதுதான்!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"பா.ஜ.க. 250-க்குக் குறைவாக வென்றால் பங்குச் சந்தை 20 சதவிகிதம் வரை சரியும்' என முதலீட்டு நிபுணர்கள் சொல்கிறார்களே?
பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலரும் பெரும் பணம் வைத்திருப்பவர்கள்தான். ஜனநாயக லாபத்துக்காக முதலீட்டில் நட்டம் வந்தால் பெரிய கேடு இல்லை. தவிரவும் இன்று சரியும் பங்குச் சந்தை, அடுத்த வாரத்தில் நிமிர்ந்துவிடும். ஒருநாள் இழந்த நட்டத்தை மறுநாள் எப்படி ஈட்டுவது என அவர்களுக்குத் தெரியும். கூடவே சரியும் சந்தையிலும் எப்படி லாபம் பார்ப்பதென்பதும் பங்குச் சந்தையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அறிவார்கள். எனவே அதைக் குறித்து நாம் பெரிதாய்க் கவலைப்படத் தேவையில்லை.
எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு
காங்கிரஸ் கட்சி, டைனோசர்களைப் போல் படிப்படியாக அழிந்துவிடும் என மத்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருப்பது குறித்து?
அது போன வாரம் பேசியதாக இருக்கும். இந்த வாரம் கேட்டுப் பாருங்கள் அந்தப் பதிலைக் கூறமாட்டார்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
கம்யூனிஸ்ட்களின் கோட்டையான கேரளாவில் பா.ஜ.க. முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளதே..?
கோட்டைகள் கட்டப்படும்போதே எதிர்காலத்தில் நொறுக்கப்படுவதற்கான நிச்சயத்தையும் கொண்டுள்ளது. இரண்டு தேர்தல்களாக பா.ஜ.க.வின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசம், இந்தமுறை சமாஜ்வாடி, காங்கிரஸôல் தகர்க்கப்படவில்லையா? கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸýம் இப்போதே சுதாரித்துக்கொள்ள வேண்டியதுதான்.