/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mavali-answers_2.jpg)
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
"ஜெயல-தா மூலம் முகவரி தேடாதீர்கள். வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்' என தமிழக பா.ஜ.க.வுக்கு உதயகுமார் சவால் விடுத்துள்ளாரே?
மரத்தை நட்டு வளர்த்துப் பலன் பெறுவது எளிதா?… எவரோ சிரமப்பட்டு வளர்த்த மரத்தில் கல் வீசி பழங்களைப் பொறுக்கிப் போவது எளிதா? இன்னும் சொல்லப்போனால், மரத்தையே உலுக்கி கிளை, இலைகளெல்லாம் உதிர, மரம் நட்டவனை வெறுங்கையோடு விட்டு, மொத்த பழத்தையும் அள்ளிக்கொள்ளக்கூட பா.ஜ.க.வுக்கு ஆசைதான். அதற்காக, ஜெ.வுக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸில் போ- உறுப்பினர் கார்டு தயாரித்தால்கூட ஆச்சரியமில்லை.
சங்கரராமன்.அ, மடிப்பாக்கம்
அட்டன்பரோ "காந்தி' படம் எடுக்கும்வரை, உலகம் காந்தியைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்கிறாரே மோடி?
கீழே இருக்கும் டைம் பத்திரிகையின் அட்டையைப் பாருங்கள். இது 1930#ல் வெளியான "டைம்' பத்திரிகை. ஒவ்வொர் ஆண்டும் அந்த ஆண்டுக்கான சிறந்த மனிதரைத் தேர்வுசெய்து "டைம்' பத்திரிகை கௌரவிக்கும். அப்படி 1930#லேயே கௌரவிக்கப்பட்டவர்தான் காந்தி. அடுத்தது, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதைக் கௌரவிக்க இந்திய அரசாங்கம் வெளியிட்ட விளம்பரத்தில்தான் இந்த "டைம்' பத்திரிகையின் படம் இடம்பெற்றுள்ளது. மூன்றாவதாக, "காந்தி' திரைப்படம் வெளியானது 1982. அதற்கு முன்பே இந்தியாவிலும், வெளியிலும் காந்தியைப் பற்றி நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. தவளை தன் வாயால் கெடும் என்பது பழமொழி. அந்த பழமொழியில் தவளை என்று வரும் இடத்தை மோடி என திருத்திவிடலாம்.
கே.செல்லையா, தூத்துக்குடி
எழுத்துப் பிழை என்பது அவ்வளவு பெரிய குற்றமா?
அதை நீங்கள் பீகார் அதிகாரிகளிடம் கேளுங்கள். பீகாரின் கல்வித் துறை அதிகாரிகள் பல அரசுப் பள்ளிகளில் ஆய்வு நடத்தியிருக்கின்றனர். அதில் பல ஆசிரியர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாதது தெரியவந்து மெமொ, சம்பளப் பிடித்தமெல்லாம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு கடிதம் அனுப்ப வேண்டுமல்லவா?… ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆசிரியர்களின் மோசமான செயல்பாடு என்பதைக் குறிக்க க்ஷஹக் ல்ங்ழ்ச்ர்ழ்ம்ஹய்ஸ்ரீங் என்ற வார்த்தையை டைப் செய்தவர் க்ஷங்க் ல்ங்ழ்ச்ர்ழ்ம்ஹய்ஸ்ரீங் என டைப் செய்துவிட்டார். எவனோ விவகாரம் பிடித்தவன் இந்தக் கடிதத்தை சமூக வலைத்தளத்தில் படம்பிடித்துப் போட்டுவிட்டான். நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் எழுத்துப் பிழை என்பது சின்ன விஷயமா,… பெரிய விஷயமா என்பதை.
எஸ்.நிக்கில்குமார், இராமேஸ்வரம்
திருமணம் தங்களது சாதனைகளுக்குத் தடையாகும் என்று சிலர் தவிர்த்துவிடுகின்றனரே?
எல்லோரும் திருமணம் முடிக்கும்போது, எங்கோ ஓரிருவர் திருமணம் முடிக்காதிருப்பதால் பாதகமில்லை.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
தமிழ்மொழியில் நீதியில்லாத நூல்களே கிடையாது. அதனால் நீதியின் மொழி என்றால் தமிழ் என்பேன்’என்கிறாரே உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ்?
வழக்கமாக, இது அரசியல்வாதியின் வசனமாகவல்லவா இருக்கும்! இப்போதென்ன நீதிபதி! பரவாயில்லை, நீதிபதிகள் சட்ட பரிபாலனத்தோடு, பழந்தமிழ் இலக்கியங்களையும் வாசித்து அதன் புகழ்பாடுகிறார்கள்... நல்ல விஷயம்தான்.
ஜெ.மணிகண்டன், வேலூர்
மாணவர்கள் என்ன படிக்கவேண்டுமென்பதை யார் முடிவுசெய்ய வேண்டும்? பெற்றோர்களா, அரசியல்வாதிகளா?
பல சமயங்களில் பெற்றோர்கள்தான் முடிவுசெய்கிறார்கள். பாடத் திட்டம் வகுக்கும்போது அரசியல் தலையீடுகள் மூலமாக, மறைமுகமாக மாணவர்கள் என்ன படிப்பது என்பதை அரசியல்வாதிகள் முடிவுசெய்துவிடுகிறார்கள். வெகு அபூர்வமாகவே, தான் என்ன படிக்கவேண்டும் என்பதை உணர்ந்து, அதையே படித்துமுடிக்கிற மாணவர்கள் இருக்கிறார்கள்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
தமிழ்நாடு அரசினுடையது தவறான கல்விக்கொள்கை என ஆளுநர் குறைசொல்கிறாரே?
சில நேரங்களில் நாய் வாலை நிமிர்த்த முடிவதில்லை. ஆளுநர் தன் அதிகார வரம்பை மீறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மத்தியில் ஆட்சி மாறினால் இத்தகைய காட்சிகளுக்கு முடிவு வரலாம்.
சி. கார்த்திகா, சிவகங்கை
கடந்த ஒரு மாதமாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறேன். என் உடல்நிலை குறித்து அக்கறை இருந்தால் மோடி போன் செய்து விசாரித்திருக்கலாம் என்கிறாரே பட்நாயக்?
அக்கறை இருந்தால் விசாரித்திருக்கமாட்டாரா?… இது தேர்தல் ஆதாயப் பேச்சுதானே. ஒரு பிரதமர் எந்தளவு தரைமட்டமாகப் பேசலாம் என்பதற்கு ஒ-ம்பிக்கில் பதக்கம் கொடுத்தால், மோடி தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-06-05/mavali-answers.jpg)