மாவலி பதில்கள்! (29-05-2024)

sonia gandhi

mavali

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

ரகசியங்களை யாரிடம் முதலில் சொல்லக்கூடாது?

ரகசியம் என்றாலே யாரிடமும் சொல்லக்கூடாது. முதலில், இரண்டாவது என்று வகைப்படுத்தவெல்லாம் தேவையில்லை. பெண்களிடம் ரகசியத்தைச் சொல்லக்கூடாதென ஒரு மரபான நம்பிக்கையிருக்கிறது. அதில் எந்த உண்மையும் இல்லை. ஆண்,பெண் இரு தரப்பிலும் ரகசியத்தைப் பேணக்கூடியவர்களும் இருக்கிறார்கள். யாரும் அறியாத உண்மை தனக்குத் தெரியும் என்ற மிதப்பில் ரகசியத்தை உளறிவிடக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.

ம.பாலு, கொளத்தூர்

"நான் பார்த்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' என்று ட்வீட் செய்திருக்கிறாரே முன்னாள் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு?

ட்வீட் செய்த வேகத்திலே போட்ட பதிவை அகற்றியிருக்கிறாரே செல்லூர் ராஜூ. எங்கிருந்து வந்த நெருக்கடியோ!

என். இளங்கோவன், மயிலாடுதுறை

மோடியின் வாரி

mavali

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

ரகசியங்களை யாரிடம் முதலில் சொல்லக்கூடாது?

ரகசியம் என்றாலே யாரிடமும் சொல்லக்கூடாது. முதலில், இரண்டாவது என்று வகைப்படுத்தவெல்லாம் தேவையில்லை. பெண்களிடம் ரகசியத்தைச் சொல்லக்கூடாதென ஒரு மரபான நம்பிக்கையிருக்கிறது. அதில் எந்த உண்மையும் இல்லை. ஆண்,பெண் இரு தரப்பிலும் ரகசியத்தைப் பேணக்கூடியவர்களும் இருக்கிறார்கள். யாரும் அறியாத உண்மை தனக்குத் தெரியும் என்ற மிதப்பில் ரகசியத்தை உளறிவிடக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.

ம.பாலு, கொளத்தூர்

"நான் பார்த்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' என்று ட்வீட் செய்திருக்கிறாரே முன்னாள் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு?

ட்வீட் செய்த வேகத்திலே போட்ட பதிவை அகற்றியிருக்கிறாரே செல்லூர் ராஜூ. எங்கிருந்து வந்த நெருக்கடியோ!

என். இளங்கோவன், மயிலாடுதுறை

மோடியின் வாரிசு அமித்ஷா எனக் கூறுகிறாரே கெஜ்ரிவால்...?

அது தேர்தல் பேச்சு. அடுத்த வாரிசு யாரென்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் ஆர்.எஸ்.எஸ்.ஸிடம்தான் இருக்கிறது. வரிசையில் யோகியும் இருக்கிறார். அமித்ஷாவும் செல்லப் பிள்ளைதான். ஆர்.எஸ்.எஸ். மட்டத்திலுள்ள பெருந்தலைகளில் இருவரில் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர் ஜெயிப்பார். ஆனால், தற்போதைக்கு ஆட்டத்தை விட்டு விலகும் எண்ணம் மோடிக்கு இல்லை.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

மக்கள் தொகை பெருக்கத்தால் நாடு முன்னேறுமா?

நிச்சயம் முன்னேறாது. நாட்டின் முன்னேற்றத்துக்கு மக்கள் தொகை பெருக்கம் உதவி செய்யாது. ஆனால், நாட்டை ஆளும் தலைவர்கள், எது பிரச்சனையோ அதனையே வாய்ப்பாக மாற்றும் மூளையைக் கொண்டிருந்தால், மாற்றம் நிகழும். வளர்ந்த நாடுகளின் வேலைகளை குறைந்த ஊதியத்தில் செய்வதற்கு வாய்த்தபோது, வளரும் நாடுகளின் மக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். இதனால் இரு தரப்பும் பயனடைந்தது. தற்போது வேறொரு ட்ரெண்ட் ஓடுகிறது. பெரும்பாலான வேலைகளை ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு செய்ய ஆரம்பித்திருக்கிறது. கார்ப்பரேட்டுகள் இதைப் பெருமளவில் பயன்படுத்தி ஆட்குறைப்பைச் செய்துவருகிறார்கள். இந்த இக்கட்டி-ருந்து எப்படி விடுபடுவது, செயற்கை நுண்ணறிவை வைத்து வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்குவது என வளரும் நாடுகளின் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் யோசிக்கவேண்டிய காலகட்டமிது!

எஸ். கதிரேசன், பேர்ணாம்பட்டு.

பிரதமர் மோடி, இந்தி தெரியாத இத்தாலியர் இல்லையென்று சோனியா காந்தி பற்றி நடிகை கங்கணா கிண்டலடித்திருக்கிறாரே?

பிரதமருக்கு இந்தி தெரிந்து என்ன பயன்? அவருக்கு வேறு எத்தனையோ விஷயங்கள் தெரியவில்லையே. சாம்பிளுக்கு சொல்லவேண்டுமென்றால்… தேர்தல் பிரச்சாரத்தில் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது, தான் பேசிய ஒன்றையே அப்படி நான் பேசவேயில்லை என மறுப்பது, ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மக்கள்தான் சூப்பர் எனப் பேசிவிட்டு, உத்தரப்பிரதேசத்தில் போய் தென்னிந்தியர்கள் அவர்களை இழிவுபடுத்துகிறார்கள் என ஒரே தேச மக்களையே துருவப்படுத்துவது போன்றவற்றை அந்த இத்தா-யர் செய்யவில்லை அல்லவா!

மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"இலவசப் பேருந்து திட்டத்தால், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது' என்கிறாரே பிரதமர்?

எல்லாம் ஒரு விஷயத்தைப் பார்க்கும் கோணத்தில் இருக்கிறது. கூட்டம் நெரியுமென்பதால் டீலக்ஸ் பேருந்தில் செல்கிறவர்களே, இலவசப் பேருந்தில் ஏறத் தயங்குவார்கள். இதில், இலவசப் பேருந்தால் மெட்ரோ ரயி-ல் கூட்டம் குறைகிறதா? ரயில்வேயில், சீனியர் சிட்டிசன்களுக்கான சலுகையை ரத்து செய்து மிச்சம் பிடித்ததுபோல மாநில அரசுகளும் நடந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறாரோ… என்னவோ! மக்கள் நலன் முத-லும், ஆதாயம் இரண்டாவதாகவும் ஒரு பிரதமரின் மனதில் வரவேண்டும். இன்னும் சொல்லவேண்டும் என்றால், மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் பயணியர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட காசு பிடுங்கும் வந்தே பாரத், அமிர்த பாரத், அந்த்யோதயா வகை ரயில்கள் அதிகமாக அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளின் பாக்கெட்டுகள் பதம் பார்க்கப்பட்டன.

சா. முகம்மது அலிஜின்னா, கடையநல்லூர்

இத்தனை பெரிய இடைவெளியுடனான தேர்தல், நமக்கே ஆயாசமாக இருக்கிறதே…. அரசியல்வாதிகளுக்கு?

உங்களுக்குதான் அது தேர்தல். அவர்களுக்கு வாழ்வா,சாவா களம். பிரச்சாரத்தில் என்ன பேசுவது, எப்படி வியூகம் வகுப்பது, எதிர்க்கட்சிகளை எப்படி விஞ்சுவது என அவர்களுக்கு 24 மணி நேரமும் போதாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்
Subscribe