மாவலி பதில்கள்

ss

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

தமிழகமே கோடை வெயிலின் வெப்பத்தில் தத்தளிக்கும்போது முதல்வர் ஸ்டாலினுக்கு கொடைக்கானல் பயணம் தேவையில்லாத ஒன்றுதான் என்கிறாரே முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி?

சரிதான். அன்றைய முதல்வர் ஜெ. கொடநாடு போகும்போதும் இதுபோல் அக்கறையுடன் எடப்பாடி கேள்வியெழுப்பி னாரா? உயர்நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இரண்டொரு நாள் விடுமுறை எடுப்பதால் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. அவரின் இடத்திலிருந்து அதிகாரிகளும் அமைச்சர்களும் செயல்படு வார்கள். அவர்கள் திரும்பிவந்ததும் இன்னும் ஊக்கத்தோடு செயல்படுவார்கள். அரசின் குறைகளை விமர்சிக்க, எடப் பாடிக்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அற்ப விஷயங்களை எடுத்துக்கொள்வதால் அவருக்கும் எந்தப் பலனும் இல்லை. மக்களுக்கும் எந்தப் பலனும் இல்லை.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

10 ஆண்டுகளில் முதன்முறையாக அதானி, அம்ப

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

தமிழகமே கோடை வெயிலின் வெப்பத்தில் தத்தளிக்கும்போது முதல்வர் ஸ்டாலினுக்கு கொடைக்கானல் பயணம் தேவையில்லாத ஒன்றுதான் என்கிறாரே முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி?

சரிதான். அன்றைய முதல்வர் ஜெ. கொடநாடு போகும்போதும் இதுபோல் அக்கறையுடன் எடப்பாடி கேள்வியெழுப்பி னாரா? உயர்நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இரண்டொரு நாள் விடுமுறை எடுப்பதால் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. அவரின் இடத்திலிருந்து அதிகாரிகளும் அமைச்சர்களும் செயல்படு வார்கள். அவர்கள் திரும்பிவந்ததும் இன்னும் ஊக்கத்தோடு செயல்படுவார்கள். அரசின் குறைகளை விமர்சிக்க, எடப் பாடிக்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அற்ப விஷயங்களை எடுத்துக்கொள்வதால் அவருக்கும் எந்தப் பலனும் இல்லை. மக்களுக்கும் எந்தப் பலனும் இல்லை.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

10 ஆண்டுகளில் முதன்முறையாக அதானி, அம்பானியை விமர்சித்துப் பேசியுள் ளாரே மோடி..?

தேர்தலின் முடிவு என்னவாக இருந் தாலும், தேர்தலின் போக்கு பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி வெற்றி சாத்தியமில்லை எனக் காட்டுகிறது. ஒருவேளை காங்கிரஸ் வென்றால் என்ன செய்வது என அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக சில நிதியுதவிகள் போன்ற அக்கறை காட்டும் செய்திகள் நரேந்திரர் காதை எட்டிய தாகவும், அதனால்தான் இந்த எடக்குமடக்கான கேள்விகள் எனவும் செய்திகள் வருகிறது.

என்.இளங்கோவன், மயிலாடுதுறை

தான் பெறும் வாக்குகளுக்கு இணையாக மரங்கள் நடுவேன் எனக் கூறுகிறாரே மேற்கு வங்க திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் நடிகர் தேவ்..?

நல்ல வாக்குறுதிதான். மக்களவைத் தொகுதி என்பதால் வாக்குகள் லட்சங்களில் இருக்கும். வெறும் வாய்ஜாலமாக இல்லாமல், வெற்றிபெற்றதும் எத்தனை லட்சம் வாக்குகள் பெற்றாரோ அத்தனை மரங்களை நட்டு வளர்த்துக் காட்டினாரென்றால் நாட்டுக்கும் நல்லது. அவருக்கும் நல்லது. சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

அரசியல்வாதிகள் கொள்ளை அடித்த பணத்தை பொதுமக்களுக்கு திருப்பித் தருவேன் என்கிறாரே மோடி? சட்டத்தில் சாத்தியமா?

"சதுரங்க வேட்டை' படத்தில், ஒருத்தனை ஏமாற்றவேண்டும் என்றால் அவனது ஆசையைத் தூண்டனும் என நாயகன் வசனம்பேசுவார். அரசியல்வாதிகள் கொள்ளையடித்த பணத்தை அமலாக்கத் துறையோ, வருமான வரித்துறையோ கைப்பற்றி, அவர் மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டதும் என்ன ஆகும்? அந்தப் பணம் அரசுக்குத் தான் சொந்தமாகும். அரசுக்குச் சொந்தமான பணம், நாட்டு மக்கள் வளர்ச்சிக்கும் நாட்டுக்கும் தான் செலவிடப்படும். இதில் தனியாக பொதுமக்களுக்குத் திருப்பித் தர சட்ட ஆலோ சனை என்றால் என்ன அர்த்தம்? உங்கள் காதில் பூச்சுற்றுகிறார் என்று அர்த்தம்.

வாசுதேவன், பெங்களூரு

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் டீமில் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் இல்லாதது?

ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த சிறந்த வீரர்களும், இந்திய அணியில் இடம்பெறாதபோது அந்தந்த மாநிலத்துக்காரர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கும். தற்போதைய செயல்பாட்டின் அடிப்படையில் டி20 அணியில் நடராஜனைச் சேர்த்திருக்கலாம். ஆனால், பி.சி.சி.ஐ. தனியார் அமைப் பாக நீடிக்கும்வரை, அதில் வடமாநில உயர்ஜாதி யினரின் ஆதிக்கம் தொடரும்வரை, நாம் எதிர் பார்ப்பது நடப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

என் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடு, நான் உனக்கு இதைச் செய்கிறேன் என கடவுளிடம் சொல்வதும் ஒருவகையான லஞ்சம்தானே?ss

ஆமாம், ஒரு கோணத்தில் அதுவும் லஞ்சம்தான். அதற்காக நமது அமலாக்கத் துறையை அனுப்பி அவர்மேல் எதுவும் நடவடிக்கையா எடுக்கமுடியும்? ஆனால், எதையாவது கொடுத்தால் தான் பதிலுக்கு எதாவது தருவேன் என கடவுள் எப்போதாவது உங்களிடம் சொன்னாரா? எல்லாவற்றையும் நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். உங்கள் முடியை மழித்துக் கொடுக்கிறீர்கள். நாக்கில் அலகு குத்திக்கொள்கிறீர்கள். நெருப்பில் இறங்கி ஓடுகிறீர்கள். கடைசியில் கோரிக்கையை நிறைவேற்ற லஞ்சம் கேட்கிறார் என பழியும் சுமத்துகிறீர்கள்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

இந்தியா கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி நிகழும் 10, 15 மாநிலங்களில் ஆட்சி கவிழும் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன்கெரா பேசியுள்ளாரே?

மக்கள் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்தால், அது பா.ஜ.க. வைப் பழிவாங்குவதற்கு இல்லை. அவர்கள் செய்த தவறைச் செய்யாமல் நல்லாட்சி நடக்க வேண்டுமென்பதற்காகத்தான். பா.ஜ.க. ஆட்சியில் நடந்த தவறு களை வேண்டுமானால், விசாரணை அமைப்புகளின் துணையுடன் விசாரித்து தண்டனை வாங்கித் தரலாம். ஆட்சிக் கலைப்புகளில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும் அது தவறான செயல்பாடு.

nkn150524
இதையும் படியுங்கள்
Subscribe