Advertisment

மாவலி பதில்கள்!

ss

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

அமெரிக்காவில் நடை பெறவுள்ள அதிபர் தேர்தலில் சீனாவின் குறுக்கீடு மற்றும் கருத்து திணிப்புக்கான ஆதாரங்கள் உள்ளன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதே?

Advertisment

இதற்கு முன்பு ட்ரம்ப் வெற்றிபெற்ற தேர்தலில், ரஷ்யா பின்னணியிலிருந்து குறுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது. தற்போது சீனா. உலக அளவில் யார் பெரியவர் என்ற சண்டை நடக்கும் போது இதுபோன்ற அத்து மீறல்கள் நடப்பது சாத்தி யம்தான். அமெரிக்கா, உலகின் பிற நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் தனக்குச் சாதகமான நபர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கோடு எந்த இடை யூறும் செய்ததே கிடையாதா என்ன? பிறருக்கு என்ன செய்கிறீர்களோ, அதுதான் உங்களுக்கும் நடக்கும்.

Advertisment

mm

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

உ.பி. பல்கலைக்கழகத் தேர்வில் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்' என எழுதிய மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கி யது

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

அமெரிக்காவில் நடை பெறவுள்ள அதிபர் தேர்தலில் சீனாவின் குறுக்கீடு மற்றும் கருத்து திணிப்புக்கான ஆதாரங்கள் உள்ளன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதே?

Advertisment

இதற்கு முன்பு ட்ரம்ப் வெற்றிபெற்ற தேர்தலில், ரஷ்யா பின்னணியிலிருந்து குறுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது. தற்போது சீனா. உலக அளவில் யார் பெரியவர் என்ற சண்டை நடக்கும் போது இதுபோன்ற அத்து மீறல்கள் நடப்பது சாத்தி யம்தான். அமெரிக்கா, உலகின் பிற நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் தனக்குச் சாதகமான நபர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கோடு எந்த இடை யூறும் செய்ததே கிடையாதா என்ன? பிறருக்கு என்ன செய்கிறீர்களோ, அதுதான் உங்களுக்கும் நடக்கும்.

Advertisment

mm

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

உ.பி. பல்கலைக்கழகத் தேர்வில் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்' என எழுதிய மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கி யது பற்றி?

கிட்டத்தட்ட உ.பி.யில் ஜனநாயக அரசுக்குப் பதில் அறிவிக்கப்படாத இந்துத்துவ அரசுதான் நடைபெறுகிறது. கோவில் காவலர்களுக்குக்கூட சீருடையைத் தவிர்த்து காவி உடை, வேட்டி, சேலை வழங்கி பரிசோதிப்பது என அங்கு நடக்கும் சேட்டைகள் அதிகம். ஒருவர் சட்டமீறல், அத்துமீறல் செய்தால் அவரை நீதிமன்ற விசாரணைக்கு இழுப்பதற்குப் பதில் நேரே புல்டோசரைக் கொண்டுபோய் அவரது வீட்டை இடிக்கும் அதிகாரத்தை மாநில அரசு கையிலெடுத் துக்கொள்கிறது. அதைக் கேள்வியெழுப்பும் துணிச்சல் உச்சநீதிமன்றத்துக்குக்கூட இல்லை. இத்தகைய ஆட்சியில் அதிகாரிகளும் இந்துத்துவ மனப்போக்குக்கு உட்படும்போது விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் எழுதுபவர்கள் வெற்றிபெறுவார்கள். ஜெய்ஸ்ரீராம் எழுதி விடைத்தாளுடன் கரன்சி களை பின்செய்பவர்கள் முதல் மதிப்பெண் பெறுவார்கள். கல்வியும், பகுத்தறிவும் காணாமல் போகும்.

ச.மிருணாளினி, சென்னை

திருமண ஜோடிகளுக்கான விடுப்பு நாட்கள் சீனாவில் அதிகரிக்கப்பட்டிருக்கிறதாமே?

மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே போகிறதென கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியது சீனா. இப்போது சீனா முழுவதும் பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது. இப்படியே தொடர்ந்தால் முப்பது வருடங்களுக்குப் பின் சீனாவின் மக்கள்தொகை கடுமையாகச் சரிந்துவிடும். இளையவர்களின் எண்ணிக்கையை விட வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும். முன்பெல்லாம் திருமணம் என்றால் 3-லிருந்து 5 நாட்கள்தான் விடுப்பு கிடைக்கும். தற்போது சில மாகாணங்களில் ஒரு வாரம் வரை விடுப்புத் தருகிறார்கள். இன்னும் சில மாகா ணங்களில், தேனிலவு போய் கொண்டாடிவிட்டு வாங்க என சம்பளப் பிடித்தமில்லாமல் ஒரு மாதமே லீவு தருகிறார்களாம். அரசின் தாராளத்தால் இளம் ஜோடிகள் குஷியாகி யிருக்கிறார்கள்.

கே.விஷ்ணுகுமார், புளியங்குடி

யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம் என்றிருக்கிறாரே சிதம்பரம்?

மோடி, தன்னால்தான் இந்தியா மூன்றாவது பெரிய ஜி.டி.பி.யைக் கொண்ட நாடாக வளர்ந்தது என்று கூறுவதற்குப் பதிலடி தந்திருக்கிறார் சிதம்பரம். 2004-ல் இந்தியா இந்த ஜி.டி.பி. அளவீட்டின்படி 12-வது இடத்தில் இருந்தது. 2014-ல் 7-வது இடத்தில். 2024-ல் 5-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. விரைவில் 3-வது இடத்துக்கும் முன்னேறும் என்றிருக்கிறார். தனிநபர் வருமானம் அதிகரிப்பதே மக்கள் வளமாக இருப்பதற்கான உண்மையான அளவீடாகும் என்கிறார் சிதம்பரம். சுருக்கமாக, அதானியின் வருமானம் அதிகரிப்பதல்ல, சாதாரணரின் வருமானம் அதிகரிப்பதே சாதனை என்றிருக்கிறார்.

ப.ராஜேந்திரன், வீரவநல்லூர்

ஆம் ஆத்மியின் பிரச்சாரப் பாடல் தடைசெய்யப்பட்டுள்ளதே?

ஆமாம், ‘"கைவிலங்குக்கு வாக்குகளால் பதிலடி தருவோம்'’ எனும் அர்த்தத்தில் பா.ஜ.க.வை விமர்சித்து ஆம் ஆத்மி பாடல் வெளியிட்டது. அதற்கு தேர் தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் வளங்களெல்லாம் கூடுதலாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிற இஸ்லாமியர்களுக்கு போய்ச்சேர்கிறது எனப் பேசுவதற்கெல்லாம் தடை விதிக்க மறுக்கும் தேர்தல் ஆணையம், சாதாரண வரி களைக் கொண்ட பாடலுக்கு தடைவிதிப்பதை மேலிருந்து பார்த்து, டி.என். சேஷன் தலையில் அடித்துக்கொள்வார்.

எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்

கும்பகர்ணன் 6 மாதம் தூங்கி.. 6 மாதம் விழித்திருந்தார்.. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டியோ மக்களுக்கு எதுவும் செய்யாமல் கடந்த 5 ஆண்டுகாலமாக தூக்கத்திலேயே இருந் துள்ளார் என்ற ஒய்.எஸ்.ஷர்மிளாவின் பேச்சு?

பதவி ஆசை எதையும் பேசவைக்கும். பதிலுக்கு ஜெகன்மோகன்ரெட்டி இதைவிட தூக்கலான பதிலடியைத் தந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. கண்ணதாசன் இருந்திருந்தால், "அண்ணன் என்னடா… தங்கை என்னடா… தேர்தல் பிரச்சார மேடையிலே'’ என பாட்டெழுதி யிருந்தாலும் எழுதியிருப்பார்.

˜

nkn040524
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe