Advertisment

மாவலி பதில்கள்

ss

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

"37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நக்கீரனின் சாதனை' என்று எந்த சம்பவத்தைக் கூறுவீர்கள்?

Advertisment

dd

ஒவ்வொரு இதழ் உருவாக்கத்தையும் சாதனைப் பயணமாக நினைத்துதான் ஆசிரியரும் மற்றவர்களும் பணியாற்றுகிறார்கள். ஆட்டோ சங்கர் தொடர், வீரப்பன் விவகாரம், ஜெ. அரசின் நெருக்குதலுக்கு எதிரான போராட்டம், நீதிமன்றத்தில் ஊடகத்துறையில் முன்னோடித் தீர்ப்புகளை வாங்கித் தந்தது, ஈஷா, நித்தியானந்தா, நிர் மலாதேவி விவகா ரம் என 37 ஆண்டு களில் பலப் பல சாதனைகளை நக்கீரன் சாதித் திருக்கிறது. வீரப்பன் விவகாரம் மகுடம் என்றால், மற்றவை அந்த மகுடத்தை அலங்கரிக்கும் நவரத்தினங்கள். ஆட்டோ சங்கர் விவகாரத்தில் நக்கீரன் உச்சநீதி மன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தின் விவரங்கள் கொலம்பிய பல்கலைக்கழகத்தின், "க்ளோபல் ஃப்ரீடம் ஆப் எக்ஸ்பிரஷன்' வலைத

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

"37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நக்கீரனின் சாதனை' என்று எந்த சம்பவத்தைக் கூறுவீர்கள்?

Advertisment

dd

ஒவ்வொரு இதழ் உருவாக்கத்தையும் சாதனைப் பயணமாக நினைத்துதான் ஆசிரியரும் மற்றவர்களும் பணியாற்றுகிறார்கள். ஆட்டோ சங்கர் தொடர், வீரப்பன் விவகாரம், ஜெ. அரசின் நெருக்குதலுக்கு எதிரான போராட்டம், நீதிமன்றத்தில் ஊடகத்துறையில் முன்னோடித் தீர்ப்புகளை வாங்கித் தந்தது, ஈஷா, நித்தியானந்தா, நிர் மலாதேவி விவகா ரம் என 37 ஆண்டு களில் பலப் பல சாதனைகளை நக்கீரன் சாதித் திருக்கிறது. வீரப்பன் விவகாரம் மகுடம் என்றால், மற்றவை அந்த மகுடத்தை அலங்கரிக்கும் நவரத்தினங்கள். ஆட்டோ சங்கர் விவகாரத்தில் நக்கீரன் உச்சநீதி மன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தின் விவரங்கள் கொலம்பிய பல்கலைக்கழகத்தின், "க்ளோபல் ஃப்ரீடம் ஆப் எக்ஸ்பிரஷன்' வலைத்தளத்திலேயே இடம்பெற்றுள்ளதும் ஒரு முக்கிய சாதனைதான்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

இஸ்ரேலுக்கு -அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரானுக்கு -ரஷியா, சைனா ஆதரவளிக்கிறார்களே, இந்தியா யாருக்கு ஆதரவு?

பழைய இந்தியாவாக இருந்தால் எந்தத் தரப்பையும் எடுக்காமல் நடுநிலை வகித்திருக்கும். குழந்தைகள், பெண்கள் என்ற பேதம் பார்க்காமல் குண்டு வீசிய விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருக்கும். மோடி அரசு வந்தபின், தொடர்ச்சியாக இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட் டையே இந்தியா எடுத்துவருகிறது. பதிலுக்கு இஸ்ரேலும் இந்திய அரசுக்கு பெகாசஸ் உளவு மென்பொருள், ஆயுதங்கள் உள்ளிட்ட விவகாரங் களில் உதவிவருகிறது. போர் பாதிப்புடைய இஸ்ரேல் பகுதிகளில், பாதுகாப்பு பற்றிய கவலை யின்றி, கட்டட வேலைகளுக்கு இந்திய மக்களை அனுப்பிவைக்கிறது. மொத்தத்தில் கடந்த பத்தாண்டுகளில் ஈரானுடன் சுமுக உறவு பேணப்பட்டாலும், இஸ்ரேல் ஆதரவு நிலைப் பாட்டில்தான் இந்தியா இருக்கிறது.

என். இளங்கோவன், மயிலாடுதுறை

இராவணன் பாலம் இல்லாமல் சீதையை தூக்கிச் சென்றான், ஆனால் ராமர் பாலம் அமைத்து இலங்கையிலிருந்து சீதையை மீட்டுவந்தார். அப்படியானால் யார் பலசாலி?

கம்பராமாயணம், ராமன் -ராவணன் இருவரில் யார் பலசாலி என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டதல்ல. இதெல்லாம் வலுவற்ற தர்க்கம். அந்தப் பாலம் போடப்பட்டது வானரப் படைகள் செல்வதற்காக. புராணத்தில் யார் பலசாலி என பட்டிமன்றத்தில் தரப்பு எடுத்து வாதாடுவதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதை வைத்து பொதுமக்கள் தரப்பு எடுத்து அடித்துக்கொண்டால் நன்றாக இருக்காது. ஆயிரம் சிறப்பிருந்தும் பிறர் மனை விருப்பால் ராவணன் வீழ்ந்தான். ஆயிரம் சிறப்பிருந்தும் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு ராமனும் அவப்பெயர் பெற்றான்.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

சொந்தமாக பயணம் செய்ய ஒரு கார்கூட இல்லை.... 16 லட்சம் கடன் சுமையிலும் தவிக்கிறேன் என்று தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கிறாரே உள்துறை அமைச்சர் அமித்ஷா?

கையசைத்தால் ஹெலிகாப்டர்களும், விமானங்களும் அமித் ஷாவை ஏற்றிச் செல்ல தயாராய் இருக்கும்போது அவர் கார் இல்லாததைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும். அமித்ஷாவின் மகன் தொடங்கிய கம்பெனியின் மதிப்பு பண மதிப்பிழப்பு காலத்தில் ஒரேயாண்டில் 16,000 மடங்கு உயர்ந்தது. அந்த மர்மம் இதுவரை தீரவில்லை. 2022-ல் 5 ஆண்டுக்கான ஐ.பி.எல். லீக் உரிமை 48,390 கோடிக்கு விற்கப்பட்டது. தற்போது கோடிகளில் புரளும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, அமித்ஷாவின் மகன். மாவலிக்கு எப்போதோ காது குத்தியாகிவிட்டது. கார் இல்லை… சைக்கிள் இல்லை என்ற சீன்களையெல்லாம் நம்புவதற்கு தயாரில்லை.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

காஷ்மீரில் 3 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடாதது ஏன்..?

காஷ்மீரிலுள்ள அனந்த்நாக் லிரஜோரி, ஸ்ரீநகர், பாரமுல்லா தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடவில்லை. 2019-ல் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பா.ஜ. ரத்து செய்தது. குடிமக்களையும் அரசியல் வாதிகளையும் பல மாதங்களுக்கு ராணுவக் காவ லில் வைத்தது. அங்கு இருக்கும் கொதிநிலை வெளியே தெரியக்கூடாதென இன்டர்நெட் வசதியை கட் செய்தது. பத்திரிகையாளர்கள் கெடுபிடிக்கு உள்ளாக்கப்பட்டனர். மாநில தேர்தலையே ஆண்டுக்கணக்கில் நடத்தாமல் இருக்கிறது. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய் அங்கு மக்களிடம் வாக்குக் கேட்கமுடியும். அதனால் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில் மட்டும் போட்டியிடுகிறது. மற்ற இடங்களில் யாருக்காவது ஆதரவு தந்துவிட்டு தன் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறது.

Advertisment
nkn270424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe