Advertisment

மாவலி பதில்கள்!

mm

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

"கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான வழிதான் தேர்தல் பத்திரம்' என மோடி கூறியிருக்கிறாரே?

Advertisment

இந்தியப் பெரும்பான்மை மக்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன சொன்னாலும் நம்புகிறார்கள். பிறகு பெருச்சாளிக்கு கொம்பு முளைக்குமென அவர் சொல்லத்தான் செய்வார். மோடியை விடுங்கள், எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை அரசியல்வாதியிடம் வந்து கொட்டிக் கொடுக்க கார்ப்பரேட் முதலாளி என்ன பைத்தியக்காரனா? ஒன்று, அவர்கள் கொடுத்த காசைவிட பத்து இருபது மடங்கு சலுகை எதிர்பார்ப்பார்கள். இன்னொன்று வரி ஏய்ப்பு, தரக்குறைவு போன்றவற்றை மறைக்க நிதி கொடுப்பார்கள். அரசின் திட்டங்கள் தனக்கு கிடைப்பதற்காகவும், அரசு மானியங்களுக்காகவும் அள்ளித் தருவார்கள். இந்த ம

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

"கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான வழிதான் தேர்தல் பத்திரம்' என மோடி கூறியிருக்கிறாரே?

Advertisment

இந்தியப் பெரும்பான்மை மக்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன சொன்னாலும் நம்புகிறார்கள். பிறகு பெருச்சாளிக்கு கொம்பு முளைக்குமென அவர் சொல்லத்தான் செய்வார். மோடியை விடுங்கள், எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை அரசியல்வாதியிடம் வந்து கொட்டிக் கொடுக்க கார்ப்பரேட் முதலாளி என்ன பைத்தியக்காரனா? ஒன்று, அவர்கள் கொடுத்த காசைவிட பத்து இருபது மடங்கு சலுகை எதிர்பார்ப்பார்கள். இன்னொன்று வரி ஏய்ப்பு, தரக்குறைவு போன்றவற்றை மறைக்க நிதி கொடுப்பார்கள். அரசின் திட்டங்கள் தனக்கு கிடைப்பதற்காகவும், அரசு மானியங்களுக்காகவும் அள்ளித் தருவார்கள். இந்த மூன்று விஷயங்களுமே நடந்திருப்பதை முதுகெலும்புள்ள ஊடகங்கள் தேர்தல் பத்திர விவகாரங்கள் வெளிவந்ததும் ஆதாரத்துடன் மெய்ப்பித்துக் காட்டிவிட்டன. இதற்குப் பிறகும் கருப்புப் பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள்தான் வழியென மோடி பேசுகிறார் என்றால் மக்களை ஏமாளிகள் என நம் பிரதமர் நம்புகிறார் என்றுதான் அர்த்தம்.

Advertisment

ஆர்.பிச்சுமணி, ராஜபாளையம்

உத்தவ் தாக்கரே, "எங்கள் கட்சி, மோடியின் கல்விச் சான்று போன்று போலியானதல்ல'” என கூறியிருக்கிறாரே?

யுத்தத்தில் எது பலவீனமான இடமோ அங்கேதான் அடிப்பார்கள். துரியோதனனுக்கும் பீமனுக்கும் யுத்தம். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் துரியோதன னுக்கு தொடையில் ஒரு பலவீனம் உண்டு. அதை அறிந்து வைத்திருக்கும் கிருஷ்ணன், "போரின் நடுவில் அவன் தொடையில் கதாயுதத்தால் அடி' என குறிப்பால் உணர்த்துகிறார். பீமனும் அவ்வாறே துரியோதனன் கதையை முடிக்கிறான். உத்தவ் தாக்கரே மோடியின் பலவீனமான இடத்தை அறிந்து வைத்திருக்கிறார். அங்கே தாக்க முயல்கிறார்.

அன்னூரார், பொன்விழி

இந்தியாவில் மகான்கள், ஞானிகள், அறிஞர்கள் தோன்றியும் இன்னும் வல்லரசாகாமல் இருப்பது ஏன்?

மகான்கள், ஞானிகள் தோன்றிய நாடு வல்லரசாகுமென உங்களுக்கு யார் சொன்னது? அத்தகைய நாடு ஞானபூமியாகும். அறிஞர்கள் மிகுந்த நாடு செல்வ வளமும் அறிவு வளமும் மிக்க நாடாகும். இன்றைய தேதியில் ஒரு நாடு வல்லரசாக வேண்டுமென்றால் எவரையும் மிஞ்சும் செல்வ வளமும், ஆயுத பலமும் கொண்டிருக்கவேண்டும். அந்த நாட்டின் தலைவராக, கொஞ்சம் தலைக்கனமும் செருக்கும், மற்ற நாடுகளை தனக்குக் கீழானதாகப் பார்க்கும் ஒருவர் வேண்டும். அந்த இடத்தில் ஏற்கெனவே அமெரிக்கா, ரஷ்யா இருக்கின்றன. அதற்கு அடுத்த இடத்தில் சீனாவும், இந்தியாவும் வளர்ந்துவருகின்றன. இந்த இரு நாடுகளின் பலமும் பலவீனமும் அவற்றின் மக்கள் தொகை. ஒரே நேரத்தில் எல்லா நாடுகளும் தங்களை வல்லரசாகவும், தங்கள் நாட்டுக்கு .யாரும் ஈடு இணை இல்லையென நினைத்தால் உலகப் போர்தான் வரும். அதனால் இந்தியா வல்லரசாக உருவாவதைவிட, வல்லமைமிக்க, சமத்துவம் திகழும் நாடாகத் திகழ்ந்தாலே போதுமென்பது மாவலியின் அபிப்ராயம்.

mm

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

"எனக்கும் முதலமைச்சர் ஆகும் ஆசையுண்டு' என்று ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் கூறுவது எதைக் காட்டுகிறது?

அரசியலில் வட்டச் செயலாளர் வண்டு முருகன்களுக்கும் வெளியே சொல்லாத முதல்வர் கனவு இருக்கத்தான் செய்யும். பவன்கல்யாண் வெளிப்படையாகப் பேசுகிறார். லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்ட முன்னணி நடிகர் பவன்கல்யாண். தமிழ்நாட்டில் மட்டும் நடிகர்கள் அரசியலுக்கு வர வில்லையா? அவர்கள் முதல்வர் கனவில் இல்லையா? தமிழகத்தைப் போலவே ஆந்திரா விலும் நடிகராக இருந்து என்.டி.ராமராவ் முதல்வராக ஆகவில்லையா? சிரஞ்சீவி, ரோஜா, விஜயசாந்தி என எத்தனையோ பேர் அரசியலுக்குள் வந்திருக்கிறார்கள். ஆனால், முதல்வராக ஆசை மட்டும் போதாது. பவன்கல்யாணுக்கு சமர்த்து இருந்தால் முதல்வராக ஆகிக்கொள்ள வேண்டியதுதான்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

மொத்த வியாதிக்கும் ஒத்த மருந்து கூற முடியுமா?

சர்வரோக நிவாரணி என்று விளம்பரப்படுத்தலாம்,… காசு பார்க்கலாம். ஆனால் அப்படிப்பட்ட மருந்து எங்கேயும், எந்த மருத்துவத்திலும் கிடையாது. மரணம் மட்டுமே சர்வரோக நிவாரணி.

nkn240424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe