எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு
பிரதமர் மோடியின் பொய்களால் வரலாறு மாறி விடாது என்று ராகுல் காந்தி கூறுவது குறித்து?
ராகுல் சொல்வதும் உண்மைதான். மோடி யின் பொய்கள் உள் நாட்டில் மட்டுமே எடுபடும் என்பது உண்மைதான். ஆனால் வேறொரு விஷயத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். மகாபாரதப் போரில் துரி யோதனன் தரப்பு வெற்றிபெற்றி ருந்தால் நமக்கு வேறொரு மகாபாரதக் கதை படிக்கக் கிடைத்திருக்கும் என்றொரு வாதம் உண்டு. பாண்டவர்கள் ஜெயித்தார்கள். அதனால் பாண்டவர் தரப்பை நியாயப்படுத்தும் வாதங்கள் மகாபாரதக் கதையில் அதிகரித்தது. மோடி தொடர்வெற்றிகள் பெற்றால், அவர் தரப்பை நியாயப்படுத்தும் வரலாற்றாசிரியர்கள், ஆதாயவாதிகள் உருவாகி, தொடர்ந்து வரலாறு மாற்றம்பெறும். அதைத் தவிர்ப்பதற் காகவாவது ராகுலும் இந்தியா கூட்டணியும் இன்னும் உழைக்கவேண்டும்.
அயன்புரம் த.சத்தியநாராயணன்
தி.மு.க.- அ.தி.மு.க. இடையே ரகசியக் கூட்டணி என்று எல்.முருகன் கூறுகிறாரே?
தி.மு.க. பிரச்சார மேடைகளில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே ரகசியக் கூட்டணி என்று பேசும்போது, அவர்கள் பதிலுக்கு தி.மு.க.- அ.தி.மு.க. இடையே ரகசியக் கூட்டணி என்று பேசக்கூடாதா என்ன! பிரச் சாரத்தில் பேசப்படும் விஷயத்தை மக்கள் நம்பவேண்டும். அல்லது மக்கள் நம்பும்படி எந்த விஷயத்தையும் பிரச்சாரம் செய்யும் திறன் பேசுபவருக்கு இருக்கவேண்டும். அதுமட்டும்தான் ஒரே தேவை!
இரா.முனியராஜ், புல்லங்குடி
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைத் தால் மாநிலத்தில் குறைந்த விலையில் தரமான மது விற்கப் படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி சொல்லியிருக்கிறாரே?
மது விற்பனை சட்டபூர்வமாக அனுமதிக்கப் படும் என்றால், அந்த மதுவை தரமானதாக, விலை மலிவானதாக தருவேன் என வாக்குறுதியளிப்பது மட்டும் சட்டவிரோதமானதாக மாறிவிடுமா! சந்திரபாபு நாயுடுவின் வாக்குறுதி மட்டுமீறியது, குடிமக்கள் நலத்தை கருத்தில்கொள்ளாதது என ஆந்திர மக்கள் நினைத்தால் தங்கள் வாக்குகளால் தக்க பதிலளிப்பார்கள்.
பூ.மாறன், மணலி
57 ஆண்டு கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்கிறாரே அன்புமணி ராமதாஸ்?
எந்தப் பயனும் இல்லாமல்தான் 57 ஆண்டுகளாக தேசியக் கட்சிகளைத் தவிர்த்துவிட்டு மாநிலக் கட்சிகளையே திரும்பத் திரும்ப ஆட்சியில் அமர்த்துகிறார் களா மக்கள்?
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியைத் தடுப்பதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டுவிட்டதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சொல்வது பற்றி?
பிரசாந்த் கிஷோர், கட்சிகளை தேர்தலில் வெற்றிபெற புரமோட் செய்யும் நவீன பிஸினஸுக்குச் சொந்தக்காரர். 2014 தேர்தல் வரும்முன்பே இளைஞர்களை வைத்து விவாத நிகழ்வு என்ற பெயரில் மோடியை புரமோட் செய்தவர். பின்பு அதே தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பல கோடி பணம் பெற்றுக்கொண்டு தேர்தல் வியூகம் வகுத்து பா.ஜ.க.வை தேர்தலில் வெற்றிபெறச் செய்தவர். அதன்பிறகு பா.ஜ.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுக்காவிட்டாலும் உள்ளுக்குள் அவர் பா.ஜ.க. ஆதரவாளர்தான். இந்த தேர்தலில் அவர் வியூகம் வகுப்பதற்குப் பதில் காங்கிரஸை டி-புரமோட் செய்யும் கருத்துகளை ஊடகங்களில் விதைத்து இந்தியா கூட்டணிக்கு எதிராகச் செயலாற்றுகிறார். இதற்காக நேரடியாக இல்லாவிட்டாலும் பா.ஜ.க.விடமிருந்து உரிய ஆதாயங்களைப் பெறுவார். அதனால் அவரது கருத்தைப் பொருட்படுத்தவேண்டியதில்லை.
அன்னூரார், பொன்விழி.
தன் சொந்த குடும்பத்தைவிட்டு அரசியல் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள் எப்படி?
திருமணம் செய்யாமல், குடும்பம் அது இதுவென்று இல்லாமல் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்களுக்கு உதாரணமாக காமராஜர், ஜெயலலிதா, வாஜ்பாய், மோடியைச் சொல்லலா மென்றால் மிச்சமுள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகளும் குடும்பம், குழந்தைகளோடு அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள்தானே. அதனால் குடும்பமில்லாததற்கும் அரசியல் வெற்றிக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதுவது வெறும் பிரமை மட்டும்தான்.