Advertisment

மாவலி பதில்கள்!

mm

ச.சைதன்யா, தென்காசி

உலக அளவிலுள்ள நாடுகளில் எந்த நாட்டு அதிபர் அல்லது பிரதமர் சிறந்தவர் என மாவலி நினைக்கிறார்?

Advertisment

இந்திய பிரதமரைச் சொன்னால் அது உண்மையான மதிப்பீடுகளைப் பொருட்படுத்தாமல் சுயநலமாகப் பதிலளித்ததாகப் பொருள்படும். பிற நாட்டு பிரதமர்களைச் சொன்னால், இந்தியாவை குறைமதிப்புக்கு உட்படுத்தியதாக ஆகும். தவிர, இதில் வேறொரு சிக்கலும் இருக்கிறது. ஆங்கிலத்தையும் தாய்மொழியையும் தவிர வேறு மொழி தெரியாத ஒருவர், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று பதிலளிப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? இந்தியா, அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், உலக அளவில் பெயர்பெற்ற அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா இப்படியாக 10 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் தாண்டி பிறரது பெயரோ, அவர்கள் என்ன ச

ச.சைதன்யா, தென்காசி

உலக அளவிலுள்ள நாடுகளில் எந்த நாட்டு அதிபர் அல்லது பிரதமர் சிறந்தவர் என மாவலி நினைக்கிறார்?

Advertisment

இந்திய பிரதமரைச் சொன்னால் அது உண்மையான மதிப்பீடுகளைப் பொருட்படுத்தாமல் சுயநலமாகப் பதிலளித்ததாகப் பொருள்படும். பிற நாட்டு பிரதமர்களைச் சொன்னால், இந்தியாவை குறைமதிப்புக்கு உட்படுத்தியதாக ஆகும். தவிர, இதில் வேறொரு சிக்கலும் இருக்கிறது. ஆங்கிலத்தையும் தாய்மொழியையும் தவிர வேறு மொழி தெரியாத ஒருவர், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று பதிலளிப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? இந்தியா, அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், உலக அளவில் பெயர்பெற்ற அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா இப்படியாக 10 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் தாண்டி பிறரது பெயரோ, அவர்கள் என்ன சாதித்தார்கள் என்பதோ மாவலிக்குத் தெரியாது. பிறகெப்படி இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது?

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

பெண்களைக் கவரும்வண்ணம் ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கும் "மகாலட்சுமி திட்டம்' என்ற ஒன்றை தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியுள்ளதே?

வாக்காளர்களைக் கவர கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிப்பதில் தவறில்லை. ஜெயித்து ஆட்சியில் வந்து அமரும்போது அதுவே பெரிய நிதிச்சுமையாக முதுகில் கனக்கும். நிறைவேற்றத் தவறினால் எதிர்க்கட்சிகளால் குத்திக் காட்டப்படும். அடுத்த ஆட்சியில் நம் மீதான விமர்சனமாக மாறும். அனைத்தையும் பரிசீலித்து தேர்தல் அறிக்கைகளை வகுப்பது நல்லது.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

Advertisment

இந்திய நாட்டின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்கிறாரே கங்கணா ரனாவத்?

mm

மறைகழண்ட பைத்தியங்கள் ஒருவிதம். காரியக்கார பைத்தியங்கள் ஒருவிதம். இதில் இரண்டாவது கேட்டகிரியில் வருபவர் கங்கணா. காங்கிரஸில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரு பிரிவு உண்டு. சுபாஷ் சந்திரபோஸை தீவிரவாதப் பிரிவில் வரும் சுதந்திரப் போராட்ட வீரர் என்பது ஒருவிதம். வெளிநாட்டில் இருக்கும்போது இந்தியாவின் பிரதமராக சுபாஷ் தன்னை அறிவித்துக்கொண்டார். அவரே இந்தியாவின் முதல் பிரதமர் என குதர்க்கம் பேசுவது ஒருவிதம். கங்கணா பேசுவது குதர்க்கம். முற்றிய இந்துத்துவ வியாதியால் மூளையின் ஆரோக்கிய செல்கள் பாதிக்கப்பட்டவர்கள் இப்படிப் பிதற்றுவது இயல்புதான். அதை யெல்லாம் நாம் பொருட்படுத்தக்கூடாது.

அன்னூரார், பொன்விழி

பதவி சுகம் இல்லாமல் வாழமுடியாதா அரசியல்வாதி களால்?

மீன்களுக்கு நீரைப் போன்றது, பெரும் பாலான அரசியல் வாதிகளுக்கு பதவி சுகம். மீன்களால் நீருக்கு வெளியே வசிக்க முடியுமா?

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

"நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன கோவை வேட்பாளருக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும்' என்கிறாரே செல்லூர் ராஜு..?

கலவரம் என்று குறிப்பிட்டிருந்தால் அதில் யதார்த்தம் இருக்கிறது. அவர் எச்சில் மழை யைக் குறிப்பிட்டிருப் பார்,… செல்லூர் ராஜு வேறெதை யாவது புரிந்து கொண்டிருப்பார்.

ப.கவிதா, திருச்சி.

ஒரே மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.4,440 உயர்ந்துள்ளதே?

ஜூவல்லர்ஸ் கடைக்காரர்களைப் பாருங்கள்... குஷி யாய் இருப்பார்கள். சவரன்களில் தங்கம் வைத்திருப்பவர் களுக்கு உற்சாகமாக இருக்கும். பெண் ணைப் பெற்றவர் களும் சாமானியர் களும் வருத்தமாக இருப்பார்கள். தங்கம் விலை உயர்வைக் குறித்து தனி மனிதனாக நாம் செய்வதற்கு எதுவுமில்லை. ஆனால், திருமணத்துக்கு வரதட்சணையாக ஐம்பது, நூறு பவுன்களில் போடுபவர்களும் வாங்குபவர்களும் இந்த வழக்கத்தை மாற்ற முயற்சிசெய்வது நல்லது. இந்தியத் திருமணங்களில் நகை போடும் வழக்கத்தை முற்றிலும் நிறுத்தினாலே, தங்கம் விலை அதிரடியாக ஆயிரக்கணக்கில் இறங்கு மென்பது நிச்சயம்.

வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி

தாங்கள் இருக்கும் கூட்டணியைப் பொறுத்து அரசியல்வாதிகளால் எப்படி மாறி மாறிப் பேச முடிகிறது?

"கலகலப்பு' படத்தில் சந்தானம், விமலிடம் “"ஆரம்பத்துல நானும் தான் நம்பலை. நம்புனாத்தான் சாப் பாடுன்னு தாத்தா சொல் லிட்டார். அப்புறம் நான் நம்பிட்டேன்'” என்று சொல்வார். அதுபோல, அடுத்த கட்சி தாவியதும், மாற்றிப் பேச தயக்கமாகத்தான் இருக்கும். மாற்றிப் பேசினால்தான் எதிர்காலம்…. இல்லையென்றால் குடிக்கும் கஞ்சிக்கும் கேடு வந்துவிடும் என்ற யதார்த்தம் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்தது'ன்னு”பாட்டே பாட வைத்துவிடும்.

nkn130424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe