சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி
"நான் மக்களுக்கு இன்னும் நிறைய சேவைகள் செய்ய வேண்டும் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் விரும்புவதால் மீண்டும் மதுராவில் போட்டியிடுகிறேன்' என்கிறாரே ஹேமமாலினி?
ஹேமமாலினி, ஏற்கெனவே இத்தொகுதியில் பத்தாண்டுக் காலம் எம்.பி.யாக இருந்துவிட்டார். இன்னும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கிருஷ் ணன் விரும்புவதால் இத்தொகுதியில் போட்டியிடு வதாகக் கூறியுள்ளார். அது ஏன் ஓட்டுப் போடவேண்டிய மக்களை விட்டுவிட்டு தேர்தலில் நிற்கும் வேட்பாளரிடம் வந்து கிருஷ் ணன் சொன்னாரோ தெரியவில்லை? காங்கிரஸ் சார்பில், ஹேமமாலினிக்கு எதிராக குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர்சிங் போட்டி யிடுகிறார். இவர் இந்தியாவுக்காக வெண்கலம், வெள்ளி, தங்கம் என 13 சர்வதேச பதக்கங்களை வென்றவர். மதுரா மக்கள் யார் சேவை தேவையெனத் தீர்மானிக்கிறார்களென பா
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி
"நான் மக்களுக்கு இன்னும் நிறைய சேவைகள் செய்ய வேண்டும் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் விரும்புவதால் மீண்டும் மதுராவில் போட்டியிடுகிறேன்' என்கிறாரே ஹேமமாலினி?
ஹேமமாலினி, ஏற்கெனவே இத்தொகுதியில் பத்தாண்டுக் காலம் எம்.பி.யாக இருந்துவிட்டார். இன்னும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கிருஷ் ணன் விரும்புவதால் இத்தொகுதியில் போட்டியிடு வதாகக் கூறியுள்ளார். அது ஏன் ஓட்டுப் போடவேண்டிய மக்களை விட்டுவிட்டு தேர்தலில் நிற்கும் வேட்பாளரிடம் வந்து கிருஷ் ணன் சொன்னாரோ தெரியவில்லை? காங்கிரஸ் சார்பில், ஹேமமாலினிக்கு எதிராக குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர்சிங் போட்டி யிடுகிறார். இவர் இந்தியாவுக்காக வெண்கலம், வெள்ளி, தங்கம் என 13 சர்வதேச பதக்கங்களை வென்றவர். மதுரா மக்கள் யார் சேவை தேவையெனத் தீர்மானிக்கிறார்களென பார்ப்போம்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
"இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்' என ஐ.நா. கூறியிருப்பது பற்றி?
பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளில்கூட இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற போர் நிறுத்தப்படவேண்டுமென ஐ.நா. கத்திக்கொண்டே இருக்கிறது. யார் பொருட்படுத்தினார்கள்? குட்டியூண்டு நாடுகளின் விஷயத்தில் வேண்டு மானால் ஐ.நா.வின் குரலுக்கு மதிப்பிருக்கும். இந்திய வாக்காளர்கள் தாங்களே விழித்துக் கொண்டு தங்கள் உரிமையைப் பேணிக் கொண்டால்தான் உண்டு.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தேர்தல் நேரத்தில் சம்பளத்தை உயர்த்தியது மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளதே?
இத்திட்டத்துக்கு வருடவாரியாக ஒதுக்கப்பட்ட தொகை, 2020-21-ல் 1,09,000 கோடி, 2021-22-ல் 96,812 கோடி, 2022-23-ல் 89,000 கோடி, 2023-24-ல் 60,000 கோடி. எப்படி படிப்படியாக நிதி குறைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். தேர்தல் நேரத்தை மனதில்கொண்டு வீசப்படும் தூண்டிற்புழுதான் இந்த சம்பள உயர்வு. அதைக் கவ்வுவதா… விடுவதா என்பது உங்கள் விருப்பம்.
வாசுதேவன், பெங்களூரு
திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த நாள் வந்துவிடுகின்றதே?
காதலர் சேர்ந்திருக்கும்போது நேரம் வேகமாகச் செல்வதாக வும், பிரிந்திருக்கும்போது மிக மெதுவாகச் செல்வதாகவும் சங்கப் பாடல் ஒன்று உண்டு. பின் அதே கருத்தை கண்ணதாசன், வாலியெல்லாம் திரைப்பாடலில் கொண்டு வந்திருக்கிறார்கள். உங்களது நாள் வேகமாக ஓடுகிறதென்றால் அந்தநாள் சுவாரசியமாக, நம் விருப்பம்போல் இருக்கிறதென்று பொருள். செய்கின்ற வேலையை நேசிக்கிறீர்கள் என்று பொருள். அதற்கு ஏன் சலித்துக்கொள்கிறீர்கள். நாள் மெதுவாக நகரவேண்டுமானால் எதுவெல்லாம் உங்களுக்குப் பிடிக்காதோ அதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
"திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்' என்று பா.ம.க. தேர்தல் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது பற்றி?
இரண்டு வகையான திருமணம் இருக்கிறது. ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம், காதல் திருமணம். முதல்வகை திருமணம் எப்போதும் பெற்றோர் செய்துவைக்கும் திருமணம்தான். இரண்டாவதிலும் பலர் பெற்றோரின் சம்மதத்தை வாங்கி, திருமணம் செய்துகொள்கின்றனர். பெற்றோர் இறங்கியே வராதபோதுதான், பெற்றோர் சம்மதத்தைப் பொருட்படுத்தாது, சிந்திக்கவும் செயல்படவும் தக்க வயதை அடைந்துவிட்டார்கள் என்ற வகையில் இளைய தலைமுறை தன்விருப்பில் செயல்படுவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள் ளது. அதை ஒரு சட்டத்தின் துணைகொண்டு பறிப்பதற்கான விருப்பம்தான் பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை. சமூகத்தை சாதியத்துக்குள்ளும் பிற் போக்குக்குத்தனத்திலும் காலமெல்லாம் அடைத்து வைத்து, மனிதர்களை மந்தையாக வைத்திருப் பதற்கான விருப்பம் என்றும் சொல்லலாம்!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட பணம் அவர்களுக்குத் திரும்பக் கிடைப்பதை உறுதிசெய்ய இரவு பகலாக பணியாற்றிவருகிறேன்' என்ற மோடியின் பேச்சு?
பண மதிப்பிழப்பால் எந்தப் பணமும் ஏழைகளை வந்தடையவில்லை, ஸ்விஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பணமும் பத்தாண்டுகளில் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. பொருளாதாரம் செழிப் பாகி மக்கள் கையில் புதிதாக பணப்புழக்கம் வரவில்லை. மாறாக, அதானி, அம்பானியின் சொத்து மதிப்பு பலப் பல மடங்கு உயர்ந் திருப்பது வெளிப் படை. ஒருவேளை அவர் ஏழைகள் என்று அம்பானி, அதானி, ஜின் டால், டாட்டா வகையறாக் களைச் சொல் கிறார்போல!