நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

வாழ்நாளில் கடன் வாங்காத மனிதன் யாரும் உண்டா?

வாய்ப்பே இல்லை. தந்தையிடமிருந்து வரும் 23 ஜீன்கள், தாயிடமிருந்து வரும் 23 ஜீன்கள் என 46 ஜீன்களின் இணைவிலென, நம் வாழ்வே கட னில்தான் தொடங்குகிறது. தவிரவும், தாய்- தந்தை அளித்த அந்தக் கடனை நாம் திருப்பிச் செலுத்தவே முடியாது. நாம் நம் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து, பெற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கு நமது ஜீன்களைக் கொடுத்து இன்னொரு உயிரைக் கடனாளியாக்கிவிட்டு நமது கடனை நேர்செய்து கொள்ளலாம். தத்துவக் கேள்வி கேட்கவில்லை என நீங்கள் ஆட்சேபனை தெரிவித்தால், உங்களது வாழ்க்கையில் வரும் வருவாயை திட்டமிட்டு முறையாகச் செலவிட்டால், கடன் வாங்காமலே வாழ்க்கை நடத்த வாய்ப்புள்ளது. முந்தைய தலைமுறையில் இப்படித்தான் காலம்தள்ளினர். ஆனால், உலக நாடுகளே கடனில் காலம் தள்ளும் இந்தத் தலைமுறையில் மக்களும் கடன் அட்டை, நிதி நிறுவனங்களில் கடன் என... கடனிலேயே வாழ்க்கையைத் தள்ளும் புதிய சூழலுக்குப் பழக்கமாகி வருகிறார்கள்..

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

Advertisment

தமிழகத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட முக்கிய காரணம் எடப்பாடியாரா? அண்ணாமலையா?

பட்டிமன்றம் நடத்துவதற்குத் தோதான தலைப்பாக இருக்கிறது. என்னை நடுவராக அமர்த்தினால் இரு தரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு இருவருமே காரணம்தான் என்றாலும், நான்கு முனைப் போட்டிக்கு முக்கியக் காரணம் அ.தி.மு.க.வையும் அக்கட்சி முக்கியஸ்தர்களையும் அண்ணாமலை அலட்சியமாகவும் ஏளனமாகவும் அணுகிய விதமே என்று தீர்ப்புச் சொல்வேன்.

தா.விநாயகம், ராணிப்பேட்டை

Advertisment

தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல வியூகம் என்று கமல்ஹாசன் கூறியிருப்பதை பற்றி?

தி.மு.க. பக்கம் கூட்டணி சேர்ந்திருப்பதால், அவர்களது எதுகை, மோனை மேடைப் பேச்சை கடன்வாங்கிப் பேசியிருக்கிறார் போலிருக்கிறது. எங்கே போய்விடப் போகிறார் கமல், சட்டமன்றத் தேர்தலில் என்ன வியூகம் வகுக்கிறார், அதில் என்ன விளைவு வருகிறது என பார்க்கத்தானே போகிறோம்!

எம்.சண்முகம், கொங்கணாபுரம்

2024 பாராளுமன்றத் தேர்தல் களநிலவரம் எப்படி உள்ளது?

ஏப்ரல் -மே மாதங்களைப் போலவே கள நிலவரமும் சூடாகவே இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சார அனல் அடிக்கிறது. கடந்த 2 பாராளுமன்றத் தேர்தல்களைப் போல் அல்லாமல், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகத் திரண் டிருப்பதால், அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையத்தையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு என்னென்னவோ செய்கிறது பா.ஜ.க. பஞ்சாப், ஒடிசா, தமிழ்நாடு என பல இடங்களில் பா.ஜ.க.வுக்கு இந்த முறை கூட்டணி ஒர்க் அவுட் ஆகவில்லை. தாராளமாக கைவசமிருக்கும் நிதி, அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்டத்தைத் தன்வசம் திருப்பிவிடலாம் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. இந்தியாவை ஜனநாயகப் பாதையிலிருந்து திருப்பி தறிகெட்டு ஓட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வை ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறக்கிவிடலாமென்று எதிர்க்கட்சி கள் மல்லுக்கட்டுகின்றன. இம்முறையும் மோடி வித்தை செல் லுபடியாகுமா என்பதை இப்போதே சொல்லமுடியவில்லை.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

அ.தி.மு.க. கூட்டணி ராசியான கூட்டணி என்று தே.மு.தி.க. தலைவி பிரேமலதா பெருமை பேசியுள்ளாரே?

கேட்டதற்கு நெருக்கமாக தொகுதிகளும் மற்றவையும் கிடைத்தால் அது ராசியான கூட்டணிதானே. கொடுத்ததில் பாதி தொகுதிகளை ஜெயித்தாலே எடப்பாடியும்கூட தே.மு.தி.க. ராசியான கூட்டணி என்று பாராட்டு வார். அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தைரிய மாக கூடுதல் தொகுதிகளைக் கேட்கலாம். அதற் கான வேலையில் கட்சிக்காரர்களை முனைப்பாக இறங்கச் செய்வதற்கான வேலைகளில் அண்ணியார் மும்முரம் காட்டட்டும். தவிரவும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துதான் தே.மு.தி.க. எதிர்க்கட்சி யாக சட்டமன்றத்தில் அமர்ந்தது. பழசை நினைத்துப்பார்த்து, அந்த சென்டிமெண்டில் பேசியிருக்கலாம்.

ஏ.சந்திரா, சென்னை-5

சமீபத்தில் கேட்ட வித்தியாச மான தத்துவப் பேச்சு என்ன?

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சுதான். ஆர்.எஸ்.எஸ். மீதான தன் விசுவாசத்தை வெளிக்காட்ட, "முன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர் என இருக்கலாம். கட்சித் தொண்டனில் முன்னாள் என்பதே கிடையாது. அவன் எப்போதும் கட்சித் தொண்டன்தான். நானும் அத்தகைய சுயம்சேவக் தொண்டன்தான்'' என்றிருக்கிறார். எதை எதிர்பார்த்து மனிதர் இந்த அடிப்போடுகிறார்னு தெரியலையே!

அ.யாழினிபர்வதம், சென்னை-78.

"ஆட்சிக்கு வந்தால் தரமான மதுபானங்கள் வழங்குவேன்' என்ற முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திர பாபுநாயுடுவின் அறிவிப்பு பற்றி?

ss

ஆட்சியாளர்கள் "குடிமக்கள்' மீது அக்கறை செலுத்தவேண்டும் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டாரோ… என்னவோ!