அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

ஹிட்லரைத் தோற் கடித்தவர் ஸ்டாலின். அது போல மோடியைத் தோற்கடிக்க ஸ்டாலின் அவதாரம் எடுத்துள்ளார் என மனுஷ்ய புத்திரன் கூறியிருக்கிறாரே?

Advertisment

mm

ஹிட்லரைத் தோற் கடித்ததில் நேச நாடுகளின் கூட்டணிக்குத்தான் முதன் மையான பங்கைத் தரமுடி யும். அமெரிக்க அதிபருக்கோ, இங்கிலாந்து அதிபருக்கோ, ரஷ்ய அதிபருக்கோ அல்ல. அதுபோல இந்தியக் கூட்டணி முன்னிலைப்படுத்தப்பட வேண்டுமே தவிர தனிநபர்கள் அல்ல. வேண்டுமானால் கூட்டணியை அமைப்பதிலும், அதில் உறுதியுடன் நீடிப்பதிலும் ஸ்டாலின் உறுதியுடன் இருக்கிறார் என்று சொல்லலாம். அப்புறம் பகுத்தறிவு அரசியல் பேசும் தி.மு.க.வுக்கு அவதாரம் எடுத்துள்ளார் என்ற சொற்பிரயோகம் பொருத்தமற்றது. மிகமுக்கியமாக, தேர்தல் முடிந்து, முடிவைப் பார்த்தபின்பு இதுபோன்ற புகழ்மொழி களைப் பேசுவது பொருத்தமாக இருக்கும்.

பூ.மாறன், மணலி

சனாதனத்தை காக்க வந்தவர் அய்யா வைகுண்டர் என ஆர்.என். ரவி கூறியிருக் கிறாரே...?

விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு, விடிந்ததும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொல்லும் வகையறாவில் வருபவர்போல ஆளுநர்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

கடந்த 6 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடி யில் இருந்த 275 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளதே...?

இது புள்ளி விவரம் அல்ல... தேசிய அவ மானம். ஏற்கெனவே சமூகத்தில் பாதிக்கப்பட்டவர் கள்தான் நிவாரணம் தேடி காவல்துறையை நாடுகிறார்கள். அவர்களை காவல்துறையினரே மீண்டும் பாதிப்புக்குள்ளாக்குவதும், பாலியல் அத்துமீறல் நிகழ்த்துவதும் அறமும் அல்ல. சட்டத்தின் மீது அவர்களுக்கு மதிப்பு இருப்ப தாகவும் தெரியவில்லை. இத்தகைய குற்றங்களைச் செய்த சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கடுமையாகத் தண்டிப்பதும், தேவைப்பட்டால் பணியிலிருந்தே டிஸ்மிஸ் செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் துணி வுள்ள அரசு செய்யவேண்டிய நடவடிக்கையாகும்.

கோ.தியாகராஜன், கீழ்வேளூர்

நாவடக்கம், நாகரிகம் எது அத்தியாவசியம்?

இரண்டுமே அத்தியாவசியம்தான். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாகரிகம் நிலவும். மேற்கத்திய நாகரிகம் வேறு. கிழக்கத்திய நாகரிகம் வேறு. கிழக்கத்திய நாகரிகத்திலும் ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு பகுதிக்குமான நாகரிகம் வேறு. அனைத்து நாகரிகத்தையும் கற்றறிந்தவரென உலகத்தில் எவரும் இருக்கமுடி யாது. மாறாக, உலகின் எந்தப் பகுதியானாலும் நம்மிடம் நாவடக்கம் இல்லையெனில் அதற்கு ஒரே விளைவுதான். அதனால்தான் வள்ளுவர், "யாகவா ராயினும் நாகாக்க' என்றார்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

நிதிக்குழுவுடன் மாநிலங்கள் பேசி நிதியுதவியைப் பெறவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறாரே?

அதெல்லாம் சும்மா உலுஉலுலாயி பதில். மாநிலங்கள் வருடக்கணக்கில் போய்ப் பேசி நிலையை விளக்கினாலும், ஒன்றிய அரசிடமிருந்தோ, நிதியமைச்சரிடமிருந்தோ, உரிய உத்தரவோ தலையாட்டலோ இல்லாமல் 5 பைசாவைக் கூட குழு அதிகரித்துத் தந்துவிடாது.

இரா. முனியராஜ், புல்லங்குடி

ஜாதி, மத அடிப்படையில் வாக்குச் சேக ரிக்கக்கூடாது என்ற தேர்தல் ஆணைய அறிவிப் பின்படி தேர்தல் நடத்துவது சாத்தியமா?

இங்கே வேட்பாளர்கள் நியமனமும், கூட் டணி அமைக்கப்படுவதுமே ஜாதியக் கணக்குகளின் அடிப்படையில்தான். திட்டமிட்டதைவிட விரைவாக கோவில் பணி நிறைவுக்கு முன்பே ராமர் கோவில் திறக்கப்பட்டதே மத அடிப்படையிலான வாக்குகளைத் திரட்டத்தான். தேர்தல் ஆணையம் மட்டும், தான் சொன்னபடி மத அடிப்படையி லான பேச்சுகளுக்காக வேட்பாளருக்கு தண்டனை விதிக்குமெனில் பா.ஜ.க.வின் பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தால் கண்டிக்கவும் தண்டிக்கவும் படுவார்கள். 60 நாடுகளுக்கு 2024-ல் தேர்தல் நடைபெறும் நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், தேர்தலில் அனைவருடைய அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதிசெய்வதற்கான வெளிப்படையான சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்று பேசியது சர்ச்சையாகியிருக்கிறது.

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்தை பேனரில் அடித்து தேர்தல் பிரச் சாரத்தை பா.ஜ.க. செய்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸை நசுக்கி ஒருபக்கம் தள்ளிவிட்டுத்தான் அவர்கள் போட்டியிடவேண்டிய தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட்டுக்கொண்டிருக்கிறது. தொகுதியைப் பிடுங்கியவர்களுக்கு தலைவரைப் பிடுங்குவது பெரிய சிரமமா? ஒருபக்கம் திராவிடக் கட்சிகளை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வது, மறுபக்கம் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு ஏங்குவது, மறைமுகமாக கூட்டணிக்கு நெருக்குவது. எம்.ஜி.ஆரையும். ஜெயலலிதாவையும் ஊழல் பேர்வழிகள் என விமர்சிப்பது, மறுபக்கம் அவர்கள் படங்களை பேனர், போஸ்டரில் போட்டு வாக்கு சேகரிப்பது. வெட்கப்பட்டா விழுற ஓட்டும் போயிடும் பாஸ் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் பா.ஜ.க.வினர்