செந்தில்குமார். எம், சென்னை-78

ஏழாம் ஆண்டில் நுழையும் மக்கள் நீதி மய்யம் சாதித்தது என்ன?

பிறந்தவர்கள் எல்லாம் சாதனையாளர் களாகவா மறைகிறார்கள். அதுபோல் தொடங்கிய எல்லா கட்சிகளும் ஜொலிக்கவேண்டு மென்று இல்லை. ஒருவேளை இதுவரை சாதிக்காததை இனிமேல் சாதிக்கக்கூடும் என்று நம்பவேண்டியதுதான். அப்புறம் ஒரு பழமொழி இருக்கிறது… ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் பயணிக்கமுடியாது.

ss

Advertisment

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்-தேனி

மூத்த வழக்கறிஞர் பாலி.எஸ்.நாரிமன் மறைவு குறித்து...?

மறைந்த பாலி எஸ். நாரிமன் இந்திய உச்சநீதிமன்றத்தில் பல அரிய வழக்குகளில் திறமையாக வாதாடியவர். பார்சி இனத்தவர். இந்திராவின் காலகட்டத்தில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அப்போதைய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பொறுப்பிலிருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்தியாவின் நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க. அரசு தலையிட முயன்றதற்கு எதிரான வழக்கிலும் வாதிட்டு வென்றவர். போபால் யூனியன் கார்பைடு வழக்கில் அந்நிறுவனத்துக்கு ஆதரவாக வாதிட்டு, பிற்காலத்தில் அது தனது தவறான முடிவுகளில் ஒன்று என ஒப்புக்கொண்டவர். அரசியலமைப்பின் மனசாட்சி என பாராட்டப்படுமளவுக்கு நீதிமன்ற வட்டாரங்களில் பெயர் பெற்றவர். பத்ம பூஷன், பத்ம விபூஷன் என பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். நீதி தேவதையே தனது மூடப்பட்ட கண்களுக்குள் இவரது மறைவுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டி ருக்கும்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

ராகுல் பிரதமர் ஆனால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என செல்வப் பெருந்தகை கூறி இருப்பது பற்றி?

ராகுலோ… மோடியோ… அல்லது யாரோ ஒருவர் பிரதம ரானால்தான் இந்தியாவைக் காப்பாற்றமுடியும் என்பதில் மாவலிக்கு நம்பிக்கை இல்லை. இவர்கள் இல்லாமலும் இந்தியா சாதித் திருக்கிறது. நீடித்திருக்கிறது. ஒருவர் இந்தியாவின் பிரதமராக வந்து தன் அறிவுக்கூர்மையாலும், நிர்வாகத் திறனாலும் புதிய உயரங்களுக்கு நாட்டை இட்டுச்செல்ல முடியும். அப்படிச் சாதித்த இந்தியப் பிரதமர்களாக மாவலி பார்ப்பது ஜவஹர்கலால் நேரு, வி.பி.சிங், மன்மோகன் சிங். ஒரு மகத்தான சவால் ராகுல் முன் இருக்கிறது. அவர் சாதிக்கிறாரா என பார்க்கலாம்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

சாகும்வரை காங்கிரஸ்கார னாகவே இருப்பேன் என்கிறாரே கமல்நாத்..?

காசா, பணமா… வார்த்தைதானே. அரசியல்வாதி பேச்சு கட்சி மாறினா போச்சு! ஒருவர் கட்சி மாறுவதில் தவறில்லை. அது தன் மாநிலத்தின், நாட்டின் நன்மைக்காக இருக்கவேண்டும். தன் பெண்டு பிள்ளைகளின் நன்மைக்கு மட்டுமாக இருக்கக்கூடாது.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

நிறைய பேர் அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டுவருகிறார்களே?

அதற்கு மக்களாகிய நாமும் ஒரு காரணம்தானே. பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாகக் கொண்டு வருபவர்களை தொடர்ச்சியாக நாம் தோற்கடித்திருந்தால், இப்படி வரிசையாகக் கிளம்பி வந்திருக்கமாட்டார்கள்தானே!

ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு

ஒருவரை மனம்திருந்த வைப்பது வயோதிகமா?

கெட்ட பின்பு வரும் ஞானம் என்பதுதான் கண்ணதாசன் வரிகள். உடல் பலம், மன பலம், காசு பலம் எல்லாம் போனபின்னால், கண் தெரிய ஆரம்பிக்கிறது. இளமையின் பரபரப்பில் தெரியாததெல்லாம் முதுமையின் நிதானத்தில் தெரியவர, தன் தவறுகளைக் குறித்து வருந்த ஆரம்பிக்கிறான்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

திருப்பதியில் சிங்கத்துடன் செல்ஃபி எடுக்கமுயன்று வாலிபர் பலியான சம்பவம்?

அகந்தையும், அறிவீனமும் ஒருசேர மேற்கொள்ளப்பட்ட முயற்சி. மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டதால் சிங்கம் ஆபத்தில்லாத விலங்காகிவிடாது… வேட்டை விலங்குகளின் முன்னங்கால் விசையும், அதன் நகக்கூர்மையும் எத்தனை ஆபத்தானது தெரியுமா? அதுசரி, இத்தகைய ஆபத்தான விலங்குகளிடம் எளிதில் அணுகும்படிதான் மிருகக்காட்சிசாலைகள் இருக்கிறதா!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

தமிழக அரசின் கடனைப் பற்றி கவலைப்படும் இ.பி.எஸ்., மோடி அரசின் கடனைப் பற்றி ஏன் வாயே திறப்பதில்லை என்று தங்கம் தென்னரசு கேட்டிருக்கிறாரே...?

அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிடவேண்டிய இன் னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய தமிழகக் கடன் முழுக்க இந்த இரண்டரை ஆண்டில் வாங்கப்பட்டதல்ல. முந் தைய பத்தாண்டு அ.தி.மு.க.வின் கடனுடன் சேர்ந்ததுதான் இன் றைய கடன் தொகை. முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., எடப்பாடி ஆகிய மூவரும் இந்தக் கடனுக்குப் பதி லளிக்கவேண்டியவர்கள்தான். வாங்கத் தெரிந்த தலைவர்களுக்கு, அடைக்கவும் வழிவகை தெரிந்திருக்கவேண்டும்.