Advertisment

மாவலி பதில்கள்!

ss

சோம.தேவராசன், கும்பகோணம்

கமலை, விஜய் முந்துவாரா?

mm

வயதில் என்றால் சாத்தியமே யில்லை. வசூலில் என்றால், இருவரது சூப்பர் ஹிட் படங்களின் கலெக்சன் லிஸ்ட் பார்த்தால் தெரிந்துவிடும். அரசியலில் என்றால், அந்த 2026 தேர்தல் ரிசல்ட் வரட்டும் பார்த்துச் சொல்கிறேன். உடனே தெரியவேண்டுமென்றால், இரண்டு பேரும் கட்சி ஆரம்பித்த சரியான நேரம், நாள் விவரங்களுடன் நல்ல ஜோசியரை அணுகவும்!

நதியாரமேஷ், ஈரோடு

பால ராமரைப் படுத்தக்கூடாது... அவருக்கு தினசரி ஒரு மணி நேரம் ஓய்வளிக்கவேண்டும் என்ற குரல் எழுந்துள்ளதே...

ஆன்மிகமாகப் பார்த்தாலும் காக்கும் கடவுள் விஷ்ணு. விஷ்ணுவின் அம்சம்தான் ராமர். அவர் ஒரு கணம் கண்ணயர்ந்தாலும் நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிடும். அதனால் பால ராமர் என்று சொல்லி ஓய்வுகேட்பது பொருத்தமாகப் படவில்லை. அறிவியல்பூர்வமாகப் பார்த்தாலும், அது கடவுள் உருவில் வடிக்கப்

சோம.தேவராசன், கும்பகோணம்

கமலை, விஜய் முந்துவாரா?

mm

வயதில் என்றால் சாத்தியமே யில்லை. வசூலில் என்றால், இருவரது சூப்பர் ஹிட் படங்களின் கலெக்சன் லிஸ்ட் பார்த்தால் தெரிந்துவிடும். அரசியலில் என்றால், அந்த 2026 தேர்தல் ரிசல்ட் வரட்டும் பார்த்துச் சொல்கிறேன். உடனே தெரியவேண்டுமென்றால், இரண்டு பேரும் கட்சி ஆரம்பித்த சரியான நேரம், நாள் விவரங்களுடன் நல்ல ஜோசியரை அணுகவும்!

நதியாரமேஷ், ஈரோடு

பால ராமரைப் படுத்தக்கூடாது... அவருக்கு தினசரி ஒரு மணி நேரம் ஓய்வளிக்கவேண்டும் என்ற குரல் எழுந்துள்ளதே...

ஆன்மிகமாகப் பார்த்தாலும் காக்கும் கடவுள் விஷ்ணு. விஷ்ணுவின் அம்சம்தான் ராமர். அவர் ஒரு கணம் கண்ணயர்ந்தாலும் நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிடும். அதனால் பால ராமர் என்று சொல்லி ஓய்வுகேட்பது பொருத்தமாகப் படவில்லை. அறிவியல்பூர்வமாகப் பார்த்தாலும், அது கடவுள் உருவில் வடிக்கப்பட்ட சிலை. அதற்கு ஓய்வு தேவையென்பது வேடிக்கையாகப் படுகிறது. அர்ச்சகருக்கு ஓய்வு வேண்டுமென்றால் நேரடியாகக் கேட்டுப் பெற்று ஓய்வெடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே!

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

அரசியலை விட்டுப்போவதும்.. திரும்ப வருவதும் என் உரிமை என்கிறாரே.. தமிழருவி மணியன்?

யார் இல்லையென்றது. அதேபோல அரசியலில் ஒருவரையோ, ஒரு தரப்பையோ ஆதரித்து ஒருவர் பேசவரும்போது, எதிரணியில் உள்ளவர்கள் விமர்சிக்கவும் மீம்கள் போடவும்தான் செய்வார்கள். அதுவும் நவீனகால விமர்சன யுக்தியான மீம்கள் மோடி, ராகுல், ஸ்டாலின், எடப்பாடி என எவரையும் நொடியில் எள்ளி நகையாடிவிடுகிறது. அத்தகைய விமர்சனங்களையும் மீம்களையும் கண்டு புண்படாத வலிமையான மனமிருந்தால் தமிழருவி மணியன் அரசியலை விட்டுப் போவதும் வருவதுமாக தன் உரிமையை தொடர்ச்சியாக நிலைநாட்டிக்கொண்டே இருக்கலாம்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர் -45

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் ஏன்?

அரசியல் என்பதே கோஷ்டி சேர்ப்பது. அதிலும் காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளுக்குப் பெயர் போனது. எப்போதும் ஒரு தலைவர் வரும்போது, அவருக்கு எதி ரான கோஷ்டிகள் உருவாகி கை கோர்த்துச் செயல்படும். தொடர்ச்சி யாக தலைவருக்கு எதிரான புகார்கள் தலைமைக்கு அனுப்பப்படும். மாங் காயின்மீது ஆயிரம் கல் வீசப்படும் போது, ஒரு கல் அதை வீழ்த்திவிடும் இல்லையா! அந்தக் கல் ஜோதிமணி வீசியதா… செல்வப் பெருந்தகை வீசியதா,… கார்த்தி சிதம்பரம் வீசியதா… என நம் விருப்பத்துக்கு யூகம் செய்து மகிழலாம். தலைமை மாற்றம் தமி ழகத்தில் காங்கிரஸை எத்தனை தூரம் வலிமைப் படுத்துகிற தென பார்க்கலாம்,!

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

பா.ஜ.க.வின் வெற்றியை அயல்நாடு களும் ஒப்புக்கொண்டுள்ளன என்கிறாரே பிரதமர் மோடி?

நாளைக்கு அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் ஜெயித்து அதிபர் இருக்கையில் அமர்கிறார் என வைத்துக்கொள்வோம். எனக்குப் பிடிக்கவில்லை… நான் பைடனுடன்தான் பேசுவேன் என்று எந்த நாட்டு அதிபரும் சொல்லமுடியாது. அதேதான் இந்திய விஷயத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மற்றபடி தனிப்பட்ட பா.ஜ.க.வின் எந்த வெற்றியை… எந்த நாட்டு அதிபர் அல்லது பிரதமர் ஒப்புக் கொண்டு பேசினார்? என் காதுகளுக்கு எதுவும் எட்டவில்லை.

வாசுதேவன், பெங்களூரு

கல்லூரியில் கற்றுத் தரும் பாடம், அனுபவம் போதிக்கும் பாடம்… ஒப்பிடுக?

கல்லூரியில் கற்றுத் தரும் பாடங்கள் பலவற்றை நாம் நாட்கள் செல்லும்போது மறந்துவிடுவோம். ஆனால் அனுபவம் போதிக்கும் பாடத்தை நாம் அத்தனை எளிதில் மறப்பதில்லை. அனுபவம் பிரம்பு எடுப்பதில்லை, வீட்டுப் பாடம் தருவதில்லை, இம்போஸிசன் கொடுப்பதில்லை. ஆனால் அனுபவத்தைப் போல நல்ல வாத்தியார் உலகெங்கும் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்று விற்பனை செய்யும் கடைக்காரர்கள், அவர்கள் மட்டும் ஏன் தங்கம் வாங்குவதில்லை?

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 22 காரட் தங்கம் 1 கிராம் 5200 ரூபாய். இந்த வருடம் 5,785 ரூபாய். ஒருவர் தோராய மாக 10 கிராம் தங்கம் வாங்குவதாக வைத்துக்கொள் வோம். அவருக்கு ஓராண்டில் 5,800 ரூபாய் ஆதாயம். இந்த மாதிரி முதலீட்டு நோக்கில் அட்சய திருதியைக்கோ, வேறெந்த நாளிலோ முதலீடு செய்தால் சரி. மற்றபடி கையில் காசு இல்லாத கணவரை நெருக்கி, வட்டிக்குக் கடன் வாங்க வைத்து தங்கமோ, ஆபரணமோ வாங்கிச் சேர்ப்பதால் எந்த ஆதாயமும் இல்லை. மற்றபடி கடைக்காரர்தான் விற்பனைக்காக 5 கிலோ, 10 கிலோ தங்கம் வாங்குகிறாரே. பிடிவாதக் கார மனைவி, மகள் இருந்தால், அவரும் அட்சய திருதியைக்குத் தனியாக தங்கம் வாங்கித்தான் ஆகவேண்டும்.

Advertisment
nkn240224
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe