Advertisment

மாவலி பதில்கள்!

11

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

தமிழகத்தில் 1500 ரேஷன் கடைகளில் மோடி செல்ஃபி பாயிண்ட் அமைக்க இருப்பது பற்றி?

Advertisment

இலவச அரிசித் திட்டத்தை இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இலவச அரிசித் திட் டத்தை மக்களிடம் விளம்பரப் படுத்த, மோடி உருவத்துடன் கூடிய செல்ஃபி பாயின்ட்டை தமிழகத் தின் 1500 ரேஷன் கடைகளில் அமைக்க மத்திய உணவுத்துறை திட்டமிட்டுள்ளது. அரிசிக்கு விளம்பரம் என்ற பெயரில் பா.ஜ. க.வின் பிரதம வேட்பாளருக்கு மத்திய உணவுத்துறையின் பெயரில், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரத் தொகை செலவிடப்படுகிறது. இலவச அரிசி பெறும் எந்த ஒரு குடும்பத்துக்கும் கிடைக்கும் ஆதாயத்தையும்விட பிரதமர் பெறும் ஆதாயம் அதிகம். கட்சிக்கு விளம்பரச் செலவு மிச்சம்… மக்கள் பையிலேயே காசையெடுத்து, மக்களிடம் ரீச் ஆவதற்கு விளம் பரம். அரை நூற்றாண்டுக் காலம் ஆட்சி செய்தும் காங்கி

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

தமிழகத்தில் 1500 ரேஷன் கடைகளில் மோடி செல்ஃபி பாயிண்ட் அமைக்க இருப்பது பற்றி?

Advertisment

இலவச அரிசித் திட்டத்தை இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இலவச அரிசித் திட் டத்தை மக்களிடம் விளம்பரப் படுத்த, மோடி உருவத்துடன் கூடிய செல்ஃபி பாயின்ட்டை தமிழகத் தின் 1500 ரேஷன் கடைகளில் அமைக்க மத்திய உணவுத்துறை திட்டமிட்டுள்ளது. அரிசிக்கு விளம்பரம் என்ற பெயரில் பா.ஜ. க.வின் பிரதம வேட்பாளருக்கு மத்திய உணவுத்துறையின் பெயரில், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரத் தொகை செலவிடப்படுகிறது. இலவச அரிசி பெறும் எந்த ஒரு குடும்பத்துக்கும் கிடைக்கும் ஆதாயத்தையும்விட பிரதமர் பெறும் ஆதாயம் அதிகம். கட்சிக்கு விளம்பரச் செலவு மிச்சம்… மக்கள் பையிலேயே காசையெடுத்து, மக்களிடம் ரீச் ஆவதற்கு விளம் பரம். அரை நூற்றாண்டுக் காலம் ஆட்சி செய்தும் காங்கிரஸுக்கு இந்த சாமர்த்தியம் கைவந்ததா?

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

"இந்திய நாட்டை நேசிப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை "சங்கிகள்' என்று சொல்வதில் பெருமைகொள்கிறோம்' என்று வானதி சீனிவாசன் பேசியுள்ளாரே?

33

Advertisment

சிலசமயம் சில வார்த்தைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் இருக்கும். சங்கிகள் என்றால் காந்தியைக் கொன்றவர்கள், ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர்கள், சமத்துவத்தை எதிர்ப்பவர்கள், மத வெறுப்பை வளர்ப்பவர்கள், பிரியாணி அண்டா திருடுபவர்கள், மூளையைப் பயன்படுத்த மறுப்பவர்கள், ஆபாசமாகப் பேசிவிட்டு அசட்டு விளக்கம் சொல்பவர்கள்...… என நீளும் பட்டியலில் வருபவர்கள். இத்தகையவர்களை நினைத்தால் நமக்குப் பெருமை வரவில்லை, பரிதாபம்தான் எழுகிறது.

செந்தில்குமார் எம்., சென்னை-78

கூட்டணி தர்மம் என்றால் என்ன..?

அடுத்த கூட்டணிக்குள் நுழைந்து வேவு பார்த்துவிட்டு, அங்கே என்னவெல்லாம் திட்டங்கள் போடப்படுகிறது என கவனித்துவிட்டு, கடைசி நொடியில் முந்தைய கூட்டணிக்கே ஓடிவிடுவதுதான் லேட்டஸ்ட் கூட்டணி தர்மம் போலிருக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டராக வேண்டியவர் அரசியல் தலைவராகி விட்டார். சண்டைக் காட்சிகளில் போடவேண்டிய பல்டிகளை யெல்லாம் அரசியல் களத்தில் போட்டுக்கொண்டிருக்கிறார்.

மா.சந்திரேசகர், மேட்டுமகாதானபுரம்

"பெரியாரையும் போற்றுவோம்... பெருமாளையும் போற்றுவோம்' என்கிறாரே முதல்வர்?

அது முதல்வரின் கூற்றல்ல. "பெரியாரையும் போற்றுவோம்… பெருமாளையும் போற்றுவோம்' என தமிழன் சொல்வதாகவும், அவன் பிற மதத்தினரையும் மதித்து நடப்பதாகவும் முதல்வர் சொல்கிறார். கலைஞர் காலகட்டத்தில் இருந்த அரசியல் சூழல் வேறு. அவரது புத்திக்கூர்மை வேறு. ஸ்டாலின் காலகட்டத்தில் இருக்கும் அரசியல் சூழல் வேறு. அவரது புத்திக்கூர்மை வேறு. நாங்களும் இந்து ஆதரவாளர்கள்தான் என்று சொல்லிக் கொண்டே, இந்துத்துவா போக்குக்கு இடம் தராமல் அரவணைத்துச் செல்வது முதல்வரின் ஸ்டைலாக இருக்கிறது.

ஆர். பிரகாஷ், நாமக்கல்

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் என்ற பெயரில் மென்போர்னோ வகையான காட்சித் துணுக்குகள் பெருகி வருகிறதே?

எங்கே தேவை இருக் கிறதோ,…அங்கே விநியோகம் உருவாகும். போர்னோ வலைத் தளங்களுக்கு வருகைதரும் நபர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சமூக வலைத்தள நிறுவனர்களுக்கு எட்டாமலா போய்விடும். தங்களிடம் ஒரு ப்ளாட்பார்ம் இருக்கிறது. அதில் கோடிக்கணக்கான நுகர்வோர்கள் இருக்கிறார்கள். எல்லையை மீறியும் மீறாமல் வீடியோக்களைப் போட்டு அவர்களுக்கு ருசி காட்டிவிட்டால், போர்னோ தளங்களுக்குச் செல்பவர்களில் கணிசமானவர்களை இங்கேயே கட்டி வைக்கலாமே என்ற வணிக யோசனைதான்.

ப.முத்துக்குமார், சிவகிரி

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவை, சீனாவுக்கு வருகை தரும்படி அந்நாடு அழைத்திருக்கிறதே?

mm

இந்தியாவை அதன் அண்டை நாடுகளுக்கு இடையி லான மோதல்களாலேயே ஸ்தம்பித்துப் போகும்படி நெருக்கடி நிலைக்கு உள்ளாக்குவது சீனாவின் ராஜதந்திர வியூகங்களில் ஒன்று. இயல்பாகவே இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆகாது. இந்திய ஆதரவு நிலையிலிருந்த நேபாளம், மாலத்தீவு போன்றவை முன்புபோல முழுக்க, முழுக்க இந்திய ஆதரவு நிலையில் இல்லை. இலங்கையும்கூட, இந்தியா ஒரு பெருந்தொகை நிதியளிக்கும் போது இந்தியாவுக்கு நெருக்கமாகவும், ஒரு பேருதவி கிடைக்கும்போது சீனாவுக்கு நெருக்கமாகவும் மாறும். இதில் மிச்சமிருப்பது பங்களாதேஷ் மட்டும்தான். பங்களாதேஷின் சுதந் திரத்தில் இந்தியா வின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதனை மறக்கச் செய்து சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வைத்துவிட் டால், எளிதாக இந்தியாவை முடக்கி விடலாம் என்பது சீனாவின் வியூகம். இந்த வியூகத்தை இந்தியா எப்படி முடக்குகிறது என் பதைப் பொறுத்து இந்தியாவின் எதிர்காலம் ஜொலிக்கும்.

nkn030224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe