Advertisment

மாவலி பதில்கள்!

ss

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

மத்திய பா.ஜ.க. அரசின் கடந்த 10 ஆண்டுகள் ஏழைகளுக்காக அர்ப் பணிக்கப் பட்டிருக்கிறது என்கிறாரே பிரதமர்...

Advertisment

ஆமாம், அதானி, அம்பானி, வேதாந்தாவின் உரிமையாளர்கள் போன்ற ஏழைகளுக்கும், வருடத்துக்கு 8 லட்சம் சம்பாதிக்கிற அல்லது 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கிற பொருளா தாரத்தில் பின்தங்கிய மேல் ஜாதி ஏழைகளுக்கும், ராம நவமி, அனுமன் ஜெயந்தி தினங்களில் சிறுபான்மை யினரின ஆலயம், குடியிருப்புகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று மதரீதியான கோஷங்களை எழுப்பி கலவரத்தை எழுப்புபவர் களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்கிறவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ரத்த சோகையில் இருப்பவர்கள், தாதுக்கள், கனிம வளங்கள் இருக்கும் இடங்களில் ஆண்டாண்டு காலமாய் குடியிருந்து துரத்தப்

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

மத்திய பா.ஜ.க. அரசின் கடந்த 10 ஆண்டுகள் ஏழைகளுக்காக அர்ப் பணிக்கப் பட்டிருக்கிறது என்கிறாரே பிரதமர்...

Advertisment

ஆமாம், அதானி, அம்பானி, வேதாந்தாவின் உரிமையாளர்கள் போன்ற ஏழைகளுக்கும், வருடத்துக்கு 8 லட்சம் சம்பாதிக்கிற அல்லது 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கிற பொருளா தாரத்தில் பின்தங்கிய மேல் ஜாதி ஏழைகளுக்கும், ராம நவமி, அனுமன் ஜெயந்தி தினங்களில் சிறுபான்மை யினரின ஆலயம், குடியிருப்புகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று மதரீதியான கோஷங்களை எழுப்பி கலவரத்தை எழுப்புபவர் களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்கிறவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ரத்த சோகையில் இருப்பவர்கள், தாதுக்கள், கனிம வளங்கள் இருக்கும் இடங்களில் ஆண்டாண்டு காலமாய் குடியிருந்து துரத்தப்பட்டவர்கள், மணிப்பூர் கலவரங்கள் மாதிரியான பிரச்சனையால் முகாம்களுக்கு துரத்தப்பட்டவர்கள் எல்லாம் பா.ஜ.க. அரசின் அகராதிப்படி ஏழைகள் கிடையாது.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தென்கொரிய படத்தைப் பார்த்ததற்காக வடகொரியா இரண்டு சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பது குறித்து?

சர்வாதிகாரிகள் மூடர்கள், பிடிவாதக்காரர் கள், குறை அறிவுக்காரர்கள். அவர்களின் செயல்பாடுகளுக்கு தர்க்கத்தை எதிர்பார்ப்பதைப் போல் மடத்தனம் வேறில்லை. ஒன்று, அவர்கள் போட்டதுதான் சட்டம் என ஏற்றுக்கொண்டு சத்தமில்லாமல் வாழ்ந்துவிடவேண்டும். இல்லை, உயிரே போனாலும் இதுபோன்ற சர்வாதிகாரத்தை ஏற்கமாட்டேன் என போராடி சிறைக்கோ, தூக்குக்கோ போய் வாழ்க்கையைத் தியாகம் செய்துவிடவேண்டும். படம் பார்த்ததற்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையா என அனத்திக்கொண்டிருப்பதெல்லாம் வீண்.

Advertisment

ff

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

ஆந்திராவில் ரூ. 405 கோடி செலவில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை கட்டப்பட்டுள்ளதே..?

சட்ட மேதைதான். பெருந் தலைவர்தான். ஆனால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோடி செலவுகளில் சிலை வைப்பதெல்லாம் வீண். அது அம்பேத்கருக் கானாலும் சரி…., வல்லபபாய் படேலுக் கானாலும் சரி. இரண்டொரு கோடியில் அருமையான சிலையை அமைத்துவிடலாம். சிலையை வைப்பவர்கள், அவர் சிந்தனையை பாடமாக வைப்பதிலோ, மக்க ளிடம் கொண்டுசேர்ப்பதிலோ பெரிய அக்கறை காட்டமாட் டார்கள். நாம் அவருக்கு மரியாதை செலுத்த விரும்பினால் அவர் எழுதிய புத்தகங்களை வாசித்து, அவர் முன்னிறுத்த விரும்பிய சிந்தனையைப் புரிந்துகொள்ள வும், முடியுமெனில் அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுமே முதன்மையானது.

அ. யாழினிபர்வதம், சென்னை 78

அயோத்தி கோயில் விவகாரத்தை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கை பா.ஜ.க. "ராம துரோகி' என்று சொன்னது பற்றி…?

சொல்ல முடியாது. அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தில் ராம துரோகிகளுக்கு வழங்கவேண்டிய தண்டனைகள் பற்றி புதிய சட்டமியற்றினாலும் இயற்றலாம். நாடு போய்க்கொண்டிருக்கும் நிலைமை அப்படி.

ஆ. ராமகிருஷ்ணன், தாம்பரம்

சமீபத்தில் வியப்பை ஏற்படுத் திய நிகழ்வு எது?

கிறித்தவ மதத்தில் பாவமற்ற வர்களுக்கு அல்லது மோட்சம் சென்றவர்களாகக் கருதப்பட்டவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும். 2019-ஆம் ஆண்டில் இலங்கையின் 3 தேவாலயங்கள் உள்பட பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் தேவாலயங்களுக்கு வந்திருந்த 273 பேர் பலியாகியிருந்தனர். தற்போது கத்தோலிக்க பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித், இந்த 273 பேரையும் புனிதர்களாக அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அறி வித்துள்ளார். (இதில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேரும் அடக்கம்) கிறிஸ்துவை நம்பி தேவாலயத்துக்கு வந்து இறந்ததனால் அவர்கள் அனைவருமே மோட்சத்துக்குச் சென்றதாகக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மரணத்துக்கு,… அதுவும் தேவாலய வளாக மரணத்துக்கு பாவத்தைக் கழுவும் சக்தியுண்டு என்ற செய்தி வியப்பை ஏற்படுத்தியது.

ப. முருகன், சாத்தூர்

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெ. நகைகளை தமிழக அரசிடம் வழங்க கர்நாடக அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?

வேறென்ன செய்ய வேண்டும்? அது ஜெ.வுக்குச் சொந்தமானதுதானே. வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டதாகக் கூறி தீர்ப்பு எப்போதோ வந்த நிலையில், நகைகள் எப்போதோ தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போதாவது வந்திருக்கிறதே. 7 கிலோவுக்கும் அதிகமான தங்கம், 70 கிலோ வெள்ளி தமிழக அரசு கஜானாவின் வறட்சியை கொஞ்சமாவது போக்கும்.

nkn270124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe