Advertisment

மாவலி பதில்கள்!

ss

த.சத்தியநாராயணன், அயன்புரம்

கோயில் உண்டியல், அர்ச்சகர் தட்டு எதில் போடும் காணிக்கை கடவுளிடம் சேரும்?

Advertisment

இரண்டுமே கடவுளிடம் சேராது. முதலாவது கோவில் நிர்வாகத்திடம் சேரும். இரண்டாவது அர்ச்சகர் பையில் சேரும். கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள், தங்குமிடங்கள், அன்னதானங்கள் போன்றவற் றைச் செய்து தரக்கூடியது. அர்ச்சகர், சாமி கழுத்தில் போட்ட மாலை, சந்தனம், திருநீறு, சாமிக்கு மிக அருகிலே அழைத்துச்சென்று தரிசனம் போன்ற வசதிகளை செய்துதரக் கூடியவர். உங்களுக்கு எந்த வசதி முக்கியமெனப் படுகிறதோ அதற்கேற்ப, அந்தந்த இடத்தில் காணிக்கை போடுங்கள். இரண்டு இடங்களிலும் காணிக்கை போடா விட்டாலும் எந்தக் குறைவும் வந்துவிடாது.

மதிராஜாதிலகர், சின்னபுங்கனேரி

எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தேர்தல் நேரத்தில் மக்கள் மயங்கிவிடுகிறார்களே?

இந்திய ம

த.சத்தியநாராயணன், அயன்புரம்

கோயில் உண்டியல், அர்ச்சகர் தட்டு எதில் போடும் காணிக்கை கடவுளிடம் சேரும்?

Advertisment

இரண்டுமே கடவுளிடம் சேராது. முதலாவது கோவில் நிர்வாகத்திடம் சேரும். இரண்டாவது அர்ச்சகர் பையில் சேரும். கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள், தங்குமிடங்கள், அன்னதானங்கள் போன்றவற் றைச் செய்து தரக்கூடியது. அர்ச்சகர், சாமி கழுத்தில் போட்ட மாலை, சந்தனம், திருநீறு, சாமிக்கு மிக அருகிலே அழைத்துச்சென்று தரிசனம் போன்ற வசதிகளை செய்துதரக் கூடியவர். உங்களுக்கு எந்த வசதி முக்கியமெனப் படுகிறதோ அதற்கேற்ப, அந்தந்த இடத்தில் காணிக்கை போடுங்கள். இரண்டு இடங்களிலும் காணிக்கை போடா விட்டாலும் எந்தக் குறைவும் வந்துவிடாது.

மதிராஜாதிலகர், சின்னபுங்கனேரி

எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தேர்தல் நேரத்தில் மக்கள் மயங்கிவிடுகிறார்களே?

இந்திய மக்கள் பைனான்ஸ் கம்பெனிகள், மோசடி நிறுவனங் கள், ஆன்லைன் மோசடிகளிலேயே ஏமாந்துவிடு பவர்கள், ஏமாற்று வித்தையில் மாஸ்டர் டிகிரி, டாக்டரேட் முடித்த அரசியல்வாதிகளிடம் ஏமாறாமல் இருப்பது சாத்தியமா? பிறர் ஏற்படுத்தும் விழிப்புணர்வு என்பது கட்டுச்சோறு மாதிரி. சீக்கிரமே தீர்ந்துவிடும். சொந்தமாக அடையும் விழிப்புணர்வு தான் காலத்துக்கும் நீடிக்கும்.

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

Advertisment

சில சினிமா நடிகர், நடிகைகள் காதல் காட்சிகளில் பின்னியெடுக்கிறார்கள். ஆனால் நிஜவாழ்க்கையில் திருமண வயதைத் தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரண்டுபிடிக்கிறார்களே அது ஏன்?

திரைக்கு வெளியே நடிக்காமல் இருப் பதற்காக அவர்களைப் பாராட்டவேண்டும். நடிப்பில் சொதப்பி நிஜத்தில் அசத்துபவர்கள் இருக்கிறார்கள். நிஜத்தில் அசத்தி நடிப்பில் சொதப்புபவர்கள் இருக்கிறார்கள். இரண்டிலுமே அசத்துபவர்கள் இருக்கிறார்கள். இரண்டிலுமே சொதப்புபவர்கள் இருக்கிறார்கள். இது அவரவர் பலம்- பலவீனம் சார்ந்தது. அதில் நாமென்ன கருத்துச் சொல்லிவிடமுடியும். அதுசரி உங்கள் கரிசனம் எந்த நடிகர்- நடிகைக்கானது?

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்55

பழநி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது.. என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதே?

நல்ல விஷயம்தான். எத்தனை தூரத்துக்கு பின்பற்றுகிறார்கள் என பார்க்கலாம். பழனி கோயில் வீதிகள், நாளுக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கக் கூடியவை. லாபம் பார்த்தவர்கள் அத்தனை எளிதில் இணங்கிவிடுவார்களா!

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

பா.ஜ.க. 562 கோடி பெற்றுக்கொண்டு என்னை லண்டனுக்கு வழியனுப்பி வைத்தார்கள் என நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் கூறியிருப்பது பற்றி?

உண்மையில் நீரவ் மோடி அப்படியெதுவும் லண்டன் நீதிமன்றத்தில் கூறவில்லை. சமூக வலைத் தளங்களில் வரும் செய்திகளில் பெரும்பாலானவை வதந்திகள். அதை யாராவது ஒருவர் நம்பிப் பதிவிட, பிறர் அதை பார்வேர்ட் செய்ய, விரைவில் வைரல் ஆகிவிடும். மிகப்பெரிய ஒரு தொகையை ஏய்த்துவிட்டு இந்தியாவை விட்டுத் தப்பவேண்டு மெனில் அரசியல் மற்றும் அதிகாரிகளின் தயவு தேவைதான். பெருந்தொகைகள் கார்ப்பரேட்களுக்கு கடனாக ஒதுக்கப்படும் போதும், தள்ளுபடி யாகும்போதும் அத னால் லாபமடையும் அரசியல் கட்சிகள் இருக்கவே செய்யும். ஆனால், அதை இப் படி பட்டவர்த்தன மாகவெல்லாம் நீதி மன்றத்தில் அத்தனை எளிதில் போட்டு டைக்க மாட்டார்கள். அத்தகைய ஸ்டேட்மெண்ட் அவருக்கே தீங்காக முடியும்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

பிரதமர் மோடியை விமர்சித்த மூன்று மாலத்தீவு மந்திரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளார்களே?

சில அரசியல் விஷயங்களை அரசியல் ரீதியாகவே கையாளவேண்டும். இந்த விஷயத்தில் இருநாட்டு அதிகாரிகளும் டிப்ளமேட்டிக் நடவடிக்கைகளை மேற்கொண்டு உறவைச் சீர்படுத்த விட்டிருக்கவேண்டும். மாறாக, பா.ஜ.க. அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களிடமிருந்து பெரிய சீற்றம் வெளிப்பட்டது. மிகச்சிறிய தீவு மாலத்தீவு. அவர்களுக்கு சுற்றுலாவை விட்டால் வேறு வருவாயே கிடையாது. இந்தியாவிலிருந்து யாரும் மாலத்தீவு சுற்றுலா செல்லக்கூடாது என்பதுபோன்ற மலிவான அரசியல் குரல்கள் எழுந்த நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் சீனா சென்றிருக்கிறார். இவர் ஏற்கெனவே சீன ஆதரவு நிலைப்பாடு உள்ளவர். சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சீனாவுக் கும் மாலத்தீவுக்கும் இடையே 20 ஒப்பந் தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஏற்கெனவே நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் சீன ஆதரவுடன் உள்ள நிலையில், நம் நட்பு நிலைப்பாட்டிலிருந்து மேலும் ஒரு நாட்டை இழந்திருக்கிறோம்.

nkn170124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe