ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்
146 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு சத்தமில்லாமல் மூன்று முக்கிய மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்ற, ஜனாதிபதியும் ஒப்புதல் கொடுத்துவிட்டாரே...?
ஜனாதிபதிகளுக்கு ரப்பர் ஸ்டாம்ப் என ஒரு பட்டப் பெயர் உண்டு. ஆளும் கட்சி சொல்வதற்கெல்லாம் மறுக்காமல் ஒப்புதலளித்து அனுமதிப்பதால் எதிர்க்கட்சி கள் இப்படி விமர்சிப்பதுண்டு. புதிய ஜனாதிபதி, தானும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என நிரூபித்திருக்கிறார்.
வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு
இந்தியாவை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் பூமியாக உலக நாடுகள் காண்கின்றன என பிரதமர் பேசியிருக்கிறாரே?
அந்த வாய்ப்புகளிலிருந்து உலக நாடுகள் மட்டும் ஆதாயமடையாமலும், குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகள் மட்டும் பலனடையாமலும் பார்த்துக்கொண்டு, அதன் பலன் இந்திய மக்கள் அனைவரையும் சென்றடையும்படி செய்வதுதான் இந்தியப் பிரதமரின் பொறுப்பு. அதைப் பற்றி எதாவது பேசியிருக்கிறாரா?
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
ராகுல்காந்தி மீண்டும் நடைபயணம் செல்லவிருப்பது எதைக் காட்டுகிறது?
ராகுல்காந்தியின் பயணம் காங் கிரஸுக்கும், ராகுலுக்கும் இந்தியா முழுவதுயும் செல்வாக்கையும் விளம் பரத்தையும் தேடித்தந்தது உண்மை தான். இந்திய பொதுத்தேர்தல் நெருங் கும் நேரத்தில் காங்கிரஸ் வெல்வதற்கான வியூகங்களையும், இந்தியா கூட்டணியில் ஆங்காங்கே தட்டுப்படும் சுணக்கங்களைக் களைந்து கூட்டணியைப் பலப்படுத்துவதற்கான வேலைகளிலும் மும்முரம் காட்டுவது இன்னும் முக்கியமான வியூகமாயிருக்கும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
யாருக்கெல்லாம் உதவ வேண்டும்? யாருக் கெல்லாம் உதவக்கூடாது?
அது நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதைப் பொறுத்தது. பெரும்பாலானவர்கள் மொய்க்குப் பதில் மொய் என்பதைப் போல தங்களுக்கு உதவியவர்களுக்கு உதவுவார்கள். மற்றவர்களைக் கண்டுகொள்ளமாட் டார்கள். உதவுவதை மட்டுமே இலக்காகக் கொண்டவர் கள் யாருக்குத் தேவையிருக்கிறது என்பதைப் பார்த்து உதவுவார்களே தவிர, அவர்கள் நல்லவர்களா- கெட்டவர்களா, பதிலுக்குச் செய்வார்களா என்பதையெல்லாம் பார்க்கமாட்டார்கள்.
என்.இளங்கோவன், மயிலாடுதுறை
ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று பொதுமக்கள் அயோத்திக்கு வரவேண்டாம் என்று பிரதமர் மோடி கூறுகிறாரே?
ராமர் கோவில் திறப்பு விழாவைத்தான் தேர்தல் ஆதாயத்துக்கு மோடியும் பா.ஜ.க.வும் நம்பியிருக்கிறது. கும்பாபிஷேகம் போன்ற விழாவுக்கு உத்தரப்பிரதேசத்தில் பெருங்கூட்டம் திரளும். தமிழகத்தில் கும்பகோணம் மகாமகக் கூட்டத்திலே 60 பேர் பலியானார்கள். கும்பாபிஷேகக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் சிக்கி, ஏதாவது விபரீதம் நடந்து அது தங்கள் தேர்தல் ஆதாய எதிர்பார்ப்புக்குப் பின்னடைவாகிவிடக்கூடாது என்று திட்டமிடுகிறார்கள். ஒன்றும் கவலைப்படாதீர்கள், கும்பாபிஷேகத்துக்குப் பின் சில மாதங்களுக்கு இலவச ரயில், இலவச தரிசனம் என பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்வார்கள். ராமரை அரியணை ஏற்றிவிட்டு, ஜனநாயகத்தை வனவாசத்துக்கு அனுப்பிவிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி
வருகின்ற ஜனவரி 2024 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களை யாரும் வாங்கவேண்டாம் என்று இமாச்சலப் பிரதேச மக்களுக்கு உத்தரவிட்டுள்ளாரே அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுகு?
சுற்றுச்சூழலை ஊக்குவிக்க, அரசுத் துறைகள் இனி வாங்கும் வாகனங்கள் மின்-வாகனங்களாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கும் மின்- வாகனங்களை ஊக்குவிக்க ஆலோசனையளித்துள்ளார். மற்றபடி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடையெதுவும் விதித்ததாக தகவல் இல்லை.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
நேர்மையான ரெயில்வே அதிகாரியை பணி இடமாற்றம் செய்திருப்பது குறித்து?
அஜய்போஸ் என்று சமூக ஆர்வலர், நரேந்திர மோடி செல்ஃபி போஸ்ட் அமைக்க ஆன செலவு குறித்து தெற்கு, வடக்கு, மேற்கு, மத்திய, வடமேற்கு ரயில்வே பிரிவு களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு எழுதிக் கேட்டிருந்தார். எல்லா ரயில்வே பிரிவுகளும் மௌனமாக இருக்க, மத்திய ரயில்வே பிரிவைச் சேர்ந்த தலைமை மக்கள் தொடர்பு அதி காரி சிவராஜ் மனஸ்புரே மட்டும் தகவல் அளித்திருந்தார். மத்திய ரயில்வே 20 நிரந்தர செல்பி பூத்து களும், 32 தற்காலிக பூத்துகளும் அமைத்திருப்பதாகவும், நிரந்தர பூத் ஒன்றுக்கு ரூ.6.25 லட்சமும், தற்கா லிக பூத் ஒன்றுக்கு ரூ.1.25 லட்சமும் செலவு எனக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, மத்திய ரயில்வே மட்டும் 1.65 கோடி செலவழித்திருக்கிறது. கடமையைச் செய்த அந்த அதிகாரி யை அவசர அவசரமாக பணியிட மாற்றம் செய்து, நேர்மையான அதிகாரிகளுக்கு என்ன பரிசு கிடைக்கும் என்பதை வெளிக் காட்டியிருக்கிறது மோடி அரசு.