Advertisment

மாவலி பதில்கள்!

ss

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

டாக்டரிடம் போயிட்டு வாரேன் என்று சொல்லலாமா?

இதென்ன துக்க வீட்டில் சொல்லிக்கொண்டு வரக்கூடாது என்பதுபோல் புது நடைமுறையா... அது உங்கள் சௌகரியம்தான். துக்க வீட்டில், டாக்டரிடம், ஜெயிலில், சண்டை நடக்கிற இடத்தில் என உங்கள் மனம் எந்த இடத்துக்கெல் லாம் திரும்ப வர அசௌகரியமாக உணர்கிறதோ... அங்கெல்லாம் சொல்லாமல் வந்துகொள்ளுங்கள். உங்களை யார் கேட்கப்போகிறார்? ஆனால் அத்தனைக்கும் பின்னால் இது மூடநம்பிக்கை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

Advertisment

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

கண்ணூர் மாவட்டத்தில் நடந்த பல அரசியல் கொலை களில் முதல்வர் பினராயி விஜய னுக்கு தொடர் புண்டு என்று கேரள கவர் னர் பகிரங்க மாக குற்றம் சாட்டியது பற்றி?

Advertisment

இப்போ தைக்கு ஆளுநர்கள் பரமசிவன் கழுத்துப் பாம்புகள். அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாம்,… செய்யலாம். பா.ஜ.க. இல்லாத மாநிலங்களில்

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

டாக்டரிடம் போயிட்டு வாரேன் என்று சொல்லலாமா?

இதென்ன துக்க வீட்டில் சொல்லிக்கொண்டு வரக்கூடாது என்பதுபோல் புது நடைமுறையா... அது உங்கள் சௌகரியம்தான். துக்க வீட்டில், டாக்டரிடம், ஜெயிலில், சண்டை நடக்கிற இடத்தில் என உங்கள் மனம் எந்த இடத்துக்கெல் லாம் திரும்ப வர அசௌகரியமாக உணர்கிறதோ... அங்கெல்லாம் சொல்லாமல் வந்துகொள்ளுங்கள். உங்களை யார் கேட்கப்போகிறார்? ஆனால் அத்தனைக்கும் பின்னால் இது மூடநம்பிக்கை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

Advertisment

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

கண்ணூர் மாவட்டத்தில் நடந்த பல அரசியல் கொலை களில் முதல்வர் பினராயி விஜய னுக்கு தொடர் புண்டு என்று கேரள கவர் னர் பகிரங்க மாக குற்றம் சாட்டியது பற்றி?

Advertisment

இப்போ தைக்கு ஆளுநர்கள் பரமசிவன் கழுத்துப் பாம்புகள். அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாம்,… செய்யலாம். பா.ஜ.க. இல்லாத மாநிலங்களில் தங்கள் பேச்சால் கலவரத்தைக்கூட உண்டாக்கலாம். கலிகாலம் மாதிரி இப்போது ஆளுநர்கள் காலம், பா.ஜ.க. ஆட்சியில்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் சூப்பர் முதல்வர்போல அதிகாரத் துஷ்பிரயோகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு மத்தியில் ஆட்சி மாறுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு வரும் புதிய ஆளுநர்கள், மாநிலத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களுக்கும் முதல்வர்தான் காரணம் என்று குற்றம் சாட்டினால் அவர்கள் பொறுத்துக்கொள்வார்களா?

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதே..?

ஏற்கெனவே மணிப்பூர், காஷ்மீரில் என்ன நடக்கிறது? மணிப்பூரில் கடந்த ஐந்து மாதங் களில் தொலைதொடர்பு, நெட்வொர்க் சேவை செயல்பட்ட நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம். உலக அளவில் இன்டர்நெட்டை முடக்குவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. அத்துமீறல்கள், கலவரம், அடக்குமுறை நடக்கும்போது சர்வதேச கவனத்துக்கு இத்தகைய செயல்கள் போவதைத் தடுக்க, பொதுமக்கள் பார்வைக்குப் போய் தன் அரசுமீதான எதிர் மறைப் பார்வைகள் எழுவதைத் தடுக்க இந்த சேவைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது அரசு. மேலும், வலதுசாரி கட்சிகள் உலக அளவில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துவருகின்றன. இத்தகைய கட்சிகள், ஜனநாயகத்தை பெயரளவுக்கு வைத்துக்கொண்டு, எதேச்சதிகாரத்தை உயர்த்திப் பிடிப்பதில் ஆர்வம்காட்டுகின்றன. அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களை கொத்துக்கொத்தாக சஸ்பெண்ட் செய்வது, ஜனநாயக விரோத மசோதாக்கள் நிறைவேற்றம் தவிர வேறென்ன நடக்கும் என நினைக்கிறீர்கள்?

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு தி.மு.க. என்கிற இயக்கம் காணாமல் போய்விடும்.... மாறாக, எடப்பாடியார் தலைமையிலான அ.தி.மு.க. மட்டுமே தமிழகத்தை நிரந்தரமாக ஆளும் சூழல் ஏற்படும் என்கிறாரே பூவை ஜெகன் மூர்த்தியார்?

கொடுக்கிற காசுக்கு மேல கூவுறானே என லிவிங்ஸ்டன் ஒரு படத்தில் சந்தோஷப்படுவார் இல்லையா?… அதுபோல ஜெகன்மூர்த்தியாரின் இந்த அறிக்கையைக் கேட்டு எடப்பாடி கொஞ்சம் சந்தோஷப்படுவார். அதைத் தவிர இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"மக்களவைக்கு அனுமதிச் சீட்டு கொடுத்த பா.ஜ. எம்.பி. உள்ளே, கேள்வி கேட்ட நாங்கள் வெளியே' என்று சு. வெங்கடேசன் பேசியுள்ளாரே?

பிரதமர் மோடிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பா.ஜ.க.வுக்கும் அகராதியில பிடிக்காத ஒரே வார்த்தை கேள்வி. அதை யாரு உங்களைக் கேட்கச் சொன்னது. கேள்வி, விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாய் பா.ஜ.க. மாறிவருகிறது என்பதை அக்கட்சியினர் எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்திவருகின்றனர்.

ss

இரா.வடிவேல், பூந்தமல்லி

பிரிஜ் பூஷன் சிங்கின் நண்பர் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரானதற்கு எதிர்வினையாக ஷாக்சி மாலிக், இனி மல்யுத்தமே வேண்டாம் என ஓய்வை அறிவித்திருக்கிறாரே?

தேசிய அவமானம். நாட்டுக்காக விளையாடி பல்வேறு தேசிய விருதுகளை யும், ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் முதல் பதக்கத்தையும் வென்ற ஒரு வீராங்கனை தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து இந்த முடிவை அறிவிக்கிறார். அவர் கட்சி சார்பானவரும் அல்ல. குற்றம்சாட்டப்பட்டவரோ பெண் வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்த தாக குற்றம்சாட்டப்படுபவர். மக்கள் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரே செல்வத்தைத் தேய்க்கும் படை என்பது வள்ளுவன் வாக்கு. ஒரு கட்சியின் செல்வம், மக்கள் செல்வாக்கும், அது பெறும் வெற்றிகளும்தான். ஜெயேஷ் படேல், சாந்திலால் சோலங்கி, கோவிந்த், பருமலானி, அஜித் ராம்வானி, வசந்த் பன்சாலி, விஜய் ஜோலி, குல்தீப் செங்கர், பிரிஜ்பூஷன் சிங் இவர்களெல்லாம் அந்தப் படையின் தளகர்த்தர்கள்.

nkn271223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe