மாவலி பதில்கள்!

mm

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

வெள்ளிக்கிழமை மட்டும் ராஜ்யசபாவில் கூடுதலாக வழங்கப்பட்டிருந்த 30 நிமிட இடைவேளை நேரம் குறைக்கப் பட்டுள்ளது குறித்து...

இந்துத்துவ கருத்துகளால் கண்களை கட்டிக்கொள்ளும் மூடர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? கிட்டத்தட்ட அறுபதுகளுக்கும் மேலான ஆண்டுகளாக இருக்கும் நடைமுறை. இதைப் பறித்ததால் அல்ப சந்தோஷத்தைத் தவிர வேறென்ன அடைந்தார்கள்?

வாசுதேவன், பெங்களூரு

ரயில்களில் ரூ.4 லட்சம் மதிப்பில்லான போர்வைகள், பெட்ஷீட்டுக்கள் திருட்டுப் போனதாக செய்தி வந்துள்ளதே?

இது மத்தியப்பிரதேசத்தின் போபால் பகுதியில் நடந்தது. ரயிலின் குளிர்சாதனப் பெட்டிகளில் கடந்த இரு மாதங்களில் ரூ.4 லட்சம் மதிப்பிலான போர்வைகள், தலையணைகள் திருடுபோயிருக்கின்றன. இதுகுறித்து விளக்க மளித்துள்ள ரயில்வ

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

வெள்ளிக்கிழமை மட்டும் ராஜ்யசபாவில் கூடுதலாக வழங்கப்பட்டிருந்த 30 நிமிட இடைவேளை நேரம் குறைக்கப் பட்டுள்ளது குறித்து...

இந்துத்துவ கருத்துகளால் கண்களை கட்டிக்கொள்ளும் மூடர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? கிட்டத்தட்ட அறுபதுகளுக்கும் மேலான ஆண்டுகளாக இருக்கும் நடைமுறை. இதைப் பறித்ததால் அல்ப சந்தோஷத்தைத் தவிர வேறென்ன அடைந்தார்கள்?

வாசுதேவன், பெங்களூரு

ரயில்களில் ரூ.4 லட்சம் மதிப்பில்லான போர்வைகள், பெட்ஷீட்டுக்கள் திருட்டுப் போனதாக செய்தி வந்துள்ளதே?

இது மத்தியப்பிரதேசத்தின் போபால் பகுதியில் நடந்தது. ரயிலின் குளிர்சாதனப் பெட்டிகளில் கடந்த இரு மாதங்களில் ரூ.4 லட்சம் மதிப்பிலான போர்வைகள், தலையணைகள் திருடுபோயிருக்கின்றன. இதுகுறித்து விளக்க மளித்துள்ள ரயில்வே, பல சமயங்களில் ரயிலில் பயணம்செய்யும் பயணிகளே இதுபோல போர்வை, தலையணைகளைக் கொண்டு போய்விடுகிறார்கள். சமயங்களில் திருடர்கள். இந்தத் திருடர்களுக்கு சிலசமயம் ரயில்வே பணியாளர்களும் உதவிசெய்வதுண்டு. 1503 போர்வைகள், 326 தலையணைகள், 189 விரிப்புகள் திருடுபோயுள்ள தாம்.

mm

பூ.மாறன், மணலி.

மழை வெள்ள நிவாரணம் வாங்கிய மக்கள் மனநிலையும், நிவாரணம் கிடைக்காத மக்களின் மனநிலையும் எப்படி இருக்கும்...?

வெள்ளம் தீவிரமாகப் பாதித்த இடங்களில் வீடெல் லாம் நீர்புகுந்துள்ளது. இதில் கார், இருசக்கர வாகனங்கள், கட்டில், சோபா, டி.வி., பாடப்புத்தகம் வரை சேதமடைந்துள்ளது. அதனால் 6000 நிவாரணம் என்பது ஆறுதல் மட்டுமே. 6000 யார் பையையும் நிறைக்கப் போவதில்லை. ஆனால் அதுவும் கிடைக்காமல் போனவர்கள், நாம் மட்டும் ஏன் விடுபட்டுப் போனோம் என ஏங்கவும், கோபம் கொள்ளவும் வாய்ப் புள்ளது. நிவாரணம் இறுதிப் புகலிடம், அறிவியல்பூர்வமான முன்னேற்பாடுகளைச் செய்து மழை, புயல் வெள்ளம் பாதிக்காமல் தடுப்பதுதான் அரசின் முதல் தேர்வாக இருக்கவேண்டும்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய பா.ஜ.க. செய்துவரும் அனைத்துப் பணி களிலும் காந்தியின் சித்தாந்தங்கள் நிறைந்துள்ளன' என்கிறாரே ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்?

காஷ்மீரின் சிறப்பு மாநில அந்தஸ்து பறிப்பிலா, ராமர் கோவில் கட்டுமானப் பணியிலா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திலா, அல்லது பண மதிப்பிழப்பிலா, சகட்டுமேனிக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யிலா? எதில் ராஜ்நாத்சிங் காந்திய சித்தாந்தத்தைக் கண்டார் என்பதை எல்லாருக்கும் புரியும்வண்ணம் தெளிவாக விளக்கவேண்டும்.

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

மனிதனின் உண்மையான சொத்து எது?

அது ஆளாளுக்கு மாறு படும். சிலருக்கு தன்னம்பிக்கை. சிலருக்கு நேர்மை. சிலருக்கு கரன்சி, தங்கம், நிலம். சிலருக்கு அதிகாரம். நமது உண்மையான சொத்து எதுவாக இருந்த போதிலும், அதை அனுபவிக்க ஆயுள் வேண்டும். ஆரோக் கியமும் ஆயுளும் இல்லாத பட்சத்தில் நமது கடைசிக் காலம் வரை நமது சொத்தை அனுபவிக்காமலே போய்விடவும் வாய்ப்பிருக்கிறது.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

2 ஆண்டுகளில் 35,000 மாணவர்கள் இந்தியா முழுக்க தற்கொலை செய்துகொண்டதாக மக்களவையில் தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளதே?

உண்மையிலே மத்தியிலிருக்கும் அரசும், மாநில அரசும் கவலைகொள்ள வேண்டிய செய்திதான் இது. மாணவர் களை நெருக்கும் விஷயம் எது கல்விச் சுமையா, பாடத்திட்டமா, கடினமான போட்டித் தேர்வு களா, பெற்றோரின் எதிர்பார்ப்பா எனக் கண்டறிந்து அவற்றை மாற்றுவதன் மூலம் மாண வர்களின் தற்கொலை மனப் பான்மையை மாற்ற முன்வர வேண்டும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"கண்ணுக்கு இடரென்றால் நொடிப்பொழுதில் காக்க வரும் கைபோன்றவர்கள் தூய்மைப் பணியாளர்கள்' என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதப்பட்டுள்ளாரே?

நல்ல விஷயம்தான். காக்க வரும் கைகளுக்கும், முதல்வர் கை கொடுத்து உதவவேண்டும். சுத்தம் செய்பவர்களுக்கு இலவச க்ளவுஸ்கள், சோப்புகள் வழங்கவேண்டும். கழிவுநீர்க் குழி, தொட்டிகளில் இறங்க விடாமல் எந்திரங்களைக் கொண்டுவந்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மாற்ற முன்வரவேண்டும். பிறர் எளிதில் செய்யத் தயங்கும் இந்த வேலையை வெறுமனே ஒப்பந்த வேலையாக இல்லாமல், அரசு வேலையாக மாற்றி, குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்த வேலையில் இறங்கும் நிலையை மாற்ற முன்வரவேண்டும் முதல்வர் ஸ்டாலின்.

nkn201223
இதையும் படியுங்கள்
Subscribe