Advertisment

மாவலி பதில்கள்!

ss

அன்னூரார், பொன்விழி.

தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.4000 என்று பிரச்சாரத்தில் ராகுல் கூறியிருந்தது பற்றி?

Advertisment

அது இனி முதல்வர் ரேவந்த் ரெட்டியின் தலைவலி. உணர்ச்சிவசப்பட்டு 4000 ரூபாய் அறிவித்துவிட்டோமே… கொஞ்சம் குறைவாக அறிவித்திருக்க லாமோ என தடுமாறுவார். காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருப்பதால், வழக்க மாக ஒதுக்கும் தொகையைவிட மத்தியிலிருக்கும் பா.ஜ.க. அரசு குறைவாக நிதி ஒதுக்கும். பிரச்சாரத்தில் கூறியபடி 4000 தரச்சொல்லி மாநில பா.ஜ.க. நெருக்கும்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

அரசியல்வாதிகள் வெள்ளை நிற ஆடைகளை விரும்புவது ஏன்?

வேறென்ன, தங்கள் மீதிருக்கும் ஊழல், மதவாத, சாதியக் கறைகளைப் பின்னுக்குத் தள்ளி, அப்பழுக்கில்லாதவர்போல் பளிச்செனக் காட்டுவதால்தான்.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்,

இந்த மிக்ஜாம் புயல் அ.தி.மு.க. ஆட்சியில் வீசியிருந்தால்

அன்னூரார், பொன்விழி.

தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.4000 என்று பிரச்சாரத்தில் ராகுல் கூறியிருந்தது பற்றி?

Advertisment

அது இனி முதல்வர் ரேவந்த் ரெட்டியின் தலைவலி. உணர்ச்சிவசப்பட்டு 4000 ரூபாய் அறிவித்துவிட்டோமே… கொஞ்சம் குறைவாக அறிவித்திருக்க லாமோ என தடுமாறுவார். காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருப்பதால், வழக்க மாக ஒதுக்கும் தொகையைவிட மத்தியிலிருக்கும் பா.ஜ.க. அரசு குறைவாக நிதி ஒதுக்கும். பிரச்சாரத்தில் கூறியபடி 4000 தரச்சொல்லி மாநில பா.ஜ.க. நெருக்கும்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

அரசியல்வாதிகள் வெள்ளை நிற ஆடைகளை விரும்புவது ஏன்?

வேறென்ன, தங்கள் மீதிருக்கும் ஊழல், மதவாத, சாதியக் கறைகளைப் பின்னுக்குத் தள்ளி, அப்பழுக்கில்லாதவர்போல் பளிச்செனக் காட்டுவதால்தான்.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்,

இந்த மிக்ஜாம் புயல் அ.தி.மு.க. ஆட்சியில் வீசியிருந்தால் சென்னைவாழ் மக்களுக்கு ஆபத்து ஏற்படாவண்ணம் பாதுகாத்திருப்போம் என்கிறாரே..... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

Advertisment

மக்களின் மறதிதான் அரசியல்வாதி களின் மூலதனம். அத்தனை சீக்கிரமாக தமிழர்கள் 2015 வெள்ளத்தை மறந்திருப் பார்கள் என்று நம்புகிறார் இல்லையா ஜெயக்குமார்? 2015 வெள்ளம், 2016-ல் வர்தா புயல் இதிலெல்லாம் இருந்து அ.தி.மு.க. அரசு மக்களைக் காப்பாற்றியதா? இப்போது மட்டும் எப்படி காப்பாற்றியிருப்பாராம்? எந்த ஆட்சியாக இருந்தாலும் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறார்கள். அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்க்கவே செய்கின்றன. இந்த அரசைவிடவும் கூடுதலாக 1000 நிவாரண நிதி வழங்கியிருப்போம் என்று வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். நம்பும்படியாக இருக்கும்.

mm

சி. கார்த்திகேயன், சாத்தூர்

தற்போது பி.சி.சி.ஐ. தான் பணக்கார அமைப்பாமே?

தற்போது மட்டுமல்ல, இந்தியாவில் வெகுகாலமாக பி.சி.சி.ஐ.தான் பணக்கார அமைப்பு. இன்று அதன் சொத்து மதிப்பு 18,700 கோடி. ஆனாலும் பல மாநிலங்களில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியங்கள், அந்த மாநில அரசுக்குக் கட்டணப் பாக்கி வைத்துள்ளன. உதாரணத்துக்கு, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயணன் சிங் மைதானம் பல மாதங்கள் மின்கட்டணம் கட்டாததால் அதன் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது. பிறகு உலகக் கோப்பையை முன்னிட்டு அதற்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டது. நமது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம், தமிழக அரசுக்குச் செலுத்தவேண்டிய குத்தகைப் பாக்கி ரூ.2081 கோடி. குத்தகை இவ்வளவு வர வாய்ப்பேயில்லை என ஸ்டேடியம் குத்தகையைக் கட்ட மறுக்கிறது. இப்படி அரசுக்குச் சேரவேண்டிய பணத்தில் மஞ்சள் குளித்தால் சொத்து சேரத்தான் செய்யும்.

மல்லிகா அன்பழகன், சென்னை-78

சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் "பெரியாரின் போர்க்களங்கள்" என்ற புத்தகம் வெளியிட்டதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதே?

பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் இரா.சுப்பிரமணி. இவர் சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள், அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றைத் தொகுத்து "பெரியாரின் போர்க்களங்கள்' என்ற தலைப்பில் நூல் வெளியிட்டார். இதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. புத்தகம் வெளியிடும் முன் முறையாக அனுமதி பெறவில்லையெனச் சொல்லி மெமோ கொடுத்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெரியாரின் பேரையே அவைக்குறிப்பிலிருந்து நீக்கும் அரசுகள் இருப்பதால், இதனையும் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. சுப்பிரமணிக்கு தமிழக அரசு துணைநிற்பதுடன், சட்டரீதியிலான உதவிகளையும் வழங்கவேண்டும். எதிர்க்கட்சிகள், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், அதனைப் பின்னிருந்து இயக்கும் சக்திகளுக்கும் எதிராக வலுவான போராட்டங்களை ஒருங்கிணைக்கவேண்டும்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ராவுக்கு ஆதரவாக போராடிய, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ்அலி அக்கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளாரே..?

நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ்அலியை, டெல்லி பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி இழிவாகப் பேசியிருந்தார். டேனிஷுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் மஹூவா. இப்போது மொய்த்ரா வுக்கு ஆதரவாக எதிர்ப்புத் தெரிவித்ததற்கு டேனிஷ், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட் டார் எனக் கூறி நீக்கம் செய் திருக்கிறது பகுஜன் சமாஜ். கட்சி உறுப் பினரை, ஒரு எம்.பி.யை மதிக்காத கட்சியில் இருப்பதைவிட அந்தக் கட்சியிலிருந்து விலகி யிருப்பதுதான் டேனிஷ் அலிக்கு நல்லது.

nkn161223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe