பூ.மாறன், மணலி
அரசுப் பள்ளியில் படித்தவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரமுடியும் என விதி கொண்டுவந்தால் என்ன...?
அப்படியெல்லாம் விதி கொண்டுவர முடியாது. அது ஜனநாயக விரோதமாக அமையும். அரசுப் பள்ளியில் படித்தால்தான் அரசு வேலை, அரசுப் பள்ளியில் படித்தால்தான், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம், அரசுப் பள்ளியில் படித் தால்தான் ஆட்சி நிர்வாகப் பணிகளுக்குத் தேர்வு என்பதெல்லாம் நடைமுறைக்கு உதவாத விஷயம். அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர்களை நியமித்து, அங்கு பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க வழி செய்தாலே போதும். மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர முடியாமல் போவதற்குக் காரணம், லட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி மையத்தில் படிப்பவர்கள் மட்டுமே அதில் தேர்ச்சி பெற முடியுமென்ற நிலையிருப்பதே.
ரா.ராஜ்மோகன், முட்டியூர்
அ.தி.மு.க.வில் சேர 20 கோடி ரூபாய் பேரம் பேசினார்கள். எடப்பாடி தனித்துவமான தலைவர் இல்லையென்பதால், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் சரண்டராகிவிட்டேன்... என்கிறாரே, திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா?
"கரகாட்டக்காரன்' படத்தில் கோவை சரளா, “"என்னை திருவாரூர் பார்ட்டில கூப்பிட்டாக, காரைக்குடி பார்ட்டில கூப்பிட்டாக, அதை யெல்லாம் விட்டுட்டு கெரகம் இங்க இருக்கேன்' என்று சொல்வதும், அதற்கு கவுண்டமணி, “"என்னடி கலர் கலரா ரீல் சுத்துற? அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக, ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக'’என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதியாக உத்திரபிரதேசத்திற்கு 13,088 கோடி அறிவித்த ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு 2,976 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது குறித்து..?
ஆமாம்... நியாயமில்லைதான். கேட்டால் மாநிலத்தின் பரப்பளவையும் மக்கள்தொகையை யும் காட்டி நியாயப்படுத்தும் ஒன்றிய அரசு. தற் போது மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கும் முறை எதனெதன் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது என் பது தெரியவில்லை. நிச்சயமாக, மத்தியில் ஆட்சியி லிருக்கும் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய மாநிலங் கள், வேண்டாத மாநிலங்கள் என்ற பேதத்தை வெளி யில் காட்டாமல் பின்பற்றுகின்றன. மாநிலத்தின் அளவும், மக்கள் தொகையும் கணக்கில் கொள்ளப் படுவதுபோலவே சுகாதாரம், கல்வி, தொழில்முன் னேற்றம் இவற்றில் முன்னணியிலிருக்கும் மாநிலங் களுக்கு அதன் அடிப்படையில் புள்ளிகள் அளித்து, அதைப் பாராட்டி கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். அப் படிப் பங்கிடுவதுதான் நியாயமானதாக இருக்கும். அதுவரை நன்றாகச் செயல்படும் மாநிலங்களுக்கு குறைந்த நிதிகிடைப்பது தொடரவே செய்யும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
காங்கிரஸ் 92 முறை ஆட்சியைக் கலைத்துள் ளது. ஆனால் மோடி ஆட்சியில் ஒருமுறையாவது எங்காவது ஆட்சிக் கலைப்பு நடந்ததுண்டா! என்ற அண்ணாமலையின் கேள்விக்கு பதில் என்ன?
அரசியலமைப்புச் சட்டம் 356-வது பிரிவின் கீழ் ஆட்சியைக் கலைப்பதற்கு எதிராக உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியபின் ஒன்றிய அரசு இந்தப் பிரிவைப் பயன்படுத்துவதை நிறுத்தியது. அதனால் பா.ஜ.க. தற்சமயம் வேறு நடைமுறைகளைப் பின் பற்றி வருகிறது. ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் கணிசமான பேரை விலைக்கு வாங்கி, தன் பக்கம் இழுத்து பா.ஜ.க. ஆட்சியைக் கொண்டுவந்துவிடு கிறது. கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ் டிரா உட்பட பல மாநிலங்களில் நடந்தது எல்லாம் அண்ணாமலைக்கு நினைவில் இல்லையா! அவர்கள் படுத்துக்கொண்டு போர்த்தினார்கள், இவர்கள் போர்த்திக்கொண்டே படுக்கிறார்கள்.
எம். செந்தில்குமார், நெசப்பாக்கம்
பாராளுமன்றத்தில் மக்கள் நீதி மையத்தின் குரல் கேட்கவேண்டும் என்கிறாரே கமல்?
கேட்கட்டும். யார் வேண்டாமென்றது. அதற்கு களத்தில் இறங்கி மக்கள் பணிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும், உங்கள் பிரச்சனைகளுக்கு நாங்கள் தீர்வுபெற்றுத் தருவோம் என மக்கள் நீதி மையம் களத்தில் இறங்கிச் செயல்படவேண்டும். அந்த நம்பிக்கையை இழந்து கமல் மீண்டும் முழுநேர நடிகராகிவிட்டார். கூட்டணியில் பங்குபெறுவதன் மூலம் தனக்கென ஒன்றோ, இரண்டோ எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்
டாக்டர், பொறியாளர், போலீஸ் இவர்கள் எல் லாம் தன் பிள்ளைகளை வாரிசுகளாக்கும்போது அரசியல்வாதி மட்டும் தன் மகனை அரசியல் வாதியாக்கினால், வாரிசு அரசியல் என ஏன் கூறுகிறார்கள்?
அதுவும் இதுவும் ஒன்றா? டாக்டர், பொறியாளர், போலீஸெல்லாம் தங்கள் பிள்ளைகளை அதே தொழிலுக்குக் கொண்டுவந்தாலும் அவர்கள் அதற்கான படிப்புகளைப் படித்து அந்தத் தகுதியை அடை கின்றனர். காவல்துறையில் அதற்கான உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வை முடித்துத்தான் அந்த வேலைகளுக்கு வரமுடியும். அரசிய லில் அப்படியா?