Advertisment

மாவலி பதில்கள்

ss

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

ரூ 1,200 கோடியில் கட்டப்பட்டு மே மாதம் திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்திற்கு, டைல்ஸ்களை மாற்றவும், நாற்காலிகளைச் சரிசெய்யவும் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதே?

Advertisment

இதை இரண்டு விதத்தில் எடுத்துக்கொள்ளலாம். அவசர அவசரமாக நாடாளுமன்றத்தை திறந்து வைப்பதற்காக, சில பணிகளை அவசர கோலத்தில் செய்து, அவை சரியான விதத்தில் அமையாமல் போய், இப்போது சரிபண்ணுவதற்காக டெண்டர் விட்டிருக்கலாம். நாடாளுமன்றத்தின் பணிகளை எடுத்துச் செய்தவர்கள், கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்தது போக எஞ்சிய பணத்தில் இவ்வளவு தரமாகத்தான் செய்யமுடியும் என சிலவற்றை மேலோட்டமாகச் செய்திருக்கலாம். அதனை இப்போது சரி செய்ய டெண்டர் விட்டிருக்கலாம். ஆறு மாதத்திலேயே 30 கோடிக்கும் அதிகமாகச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தால், ஆறு வருடங்கள் செல்லும்போது எத்த

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

ரூ 1,200 கோடியில் கட்டப்பட்டு மே மாதம் திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்திற்கு, டைல்ஸ்களை மாற்றவும், நாற்காலிகளைச் சரிசெய்யவும் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதே?

Advertisment

இதை இரண்டு விதத்தில் எடுத்துக்கொள்ளலாம். அவசர அவசரமாக நாடாளுமன்றத்தை திறந்து வைப்பதற்காக, சில பணிகளை அவசர கோலத்தில் செய்து, அவை சரியான விதத்தில் அமையாமல் போய், இப்போது சரிபண்ணுவதற்காக டெண்டர் விட்டிருக்கலாம். நாடாளுமன்றத்தின் பணிகளை எடுத்துச் செய்தவர்கள், கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்தது போக எஞ்சிய பணத்தில் இவ்வளவு தரமாகத்தான் செய்யமுடியும் என சிலவற்றை மேலோட்டமாகச் செய்திருக்கலாம். அதனை இப்போது சரி செய்ய டெண்டர் விட்டிருக்கலாம். ஆறு மாதத்திலேயே 30 கோடிக்கும் அதிகமாகச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தால், ஆறு வருடங்கள் செல்லும்போது எத்தனை கோடி செலவழித்து சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டியிருக்குமோ?

Advertisment

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

"பா.ஜ.க. மற்றும் ஆளுநரைச் சுற்றியே முதலமைச்சரின் கவனம் உள்ளது' என்று குற்றம்சாட்டுகிறாரே வானதி சீனிவாசன்?

புகாராகச் சொல்கிறாரா… பெருமிதமாகச் சொல்கிறாரா? ஆட்சியிலிருப்பவர்கள், மாநில நிர்வாகத்தைக் கவனிக்க விடாமல், பா.ஜ.க.வும், ஆளுநரும் இடைஞ்சல் செய்கிறார்கள் என்று தி.மு.க.வினரும் குற்றம்சாட்டலாம் அல்லவா!

பி. அருண், வேலூர்

யாயிர் நெதன்யாகு, கடற்கரையில் ஓய்வெடுப்பது ஒரு பிரச்சனையா?

dd

பிரச்சனைதான். ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்குமான போர் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் போருக்காக விடுமுறையில் சென்ற இஸ்ரேலிய வீரர்கள் எல்லாம் நாடு திரும்பி போர்முனையில் இருக்கிறார்கள். ஏற்கெனவே பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் எல்லாம் கொடூரமாகக் கொன்று குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், இஸ்ரேல் அதிபரின் மகன் யாயிர் நெதன்யாகு, அமெரிக்காவின் கடற்கரையொன்றுக்குச் சென்று கொண்டாட்டமாக இருப்பதுடன், அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவிடுவது பிரச்சனை இல்லையா? “நாங்களெல்லாம் எங்கள் குடும்பத்தை விட்டு, போர்க்களத்தில் உயிரைக் கொடுத்துப் போரிட்டுக் கொண் டிருக்கையில் அதிபரின் மகன் உல்லாசமாக இருக்கிறார்’என்ற எண்ணம் போர் வீரர்களின் உத்வேகத்தைக் குறைக்காதா? இதையடுத்து இஸ்ரேலிய ஊடகங்கள் "வேர் இஸ் யாயிர்' என வைரலாக செய்தி வெளியிட்டு விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றன. பிள்ளைகள் தந்தைக்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் தருவதுபோல் நடந்துகொள்ளக் கூடாது.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

பெட்ரோல், டீசல் விலையை தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு குறைக்கும் வரையில் மாட்டுவண்டியில் பயணிக்கப்போவதாக கூறியிருக்கிறாரே... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக அறிவித்திருந்ததால், ஆட்சிக்கு வந்ததும் 3 ரூபாய் விலைக் குறைப்பை தி.மு.க. அரசு மேற்கொண்டது. ஒன்றிய அரசு விலையுயர்த்தியபோதெல் லாம் அ.தி.மு.க. ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையை எத்தனை முறை விலை குறைத்தார்கள் என்ற பட்டியலை ஜெயக்குமார் மக்களிடம் காட்டினால் நல்லது. மற்றபடி மாட்டுவண்டியில் பயணிப்பது, சைக்கிளில் பயணிப்பது, கால்நடையாகச் செல்வதெல்லாம் ஜெயக்குமாரின் சௌகர்யம். எந்த மெத்தட், நிறைய அரசியல் மைலேஜ் தருமோ அந்த விதத்தில் அவர் பயணிக்கலாம்.

மஞ்சுவாசுதேவன், பெங்களூரு

ஸ்டார் வேல்யூ என்றால்.. ?

எந்த ஒரு நடிகர் கால்ஷீட் கொடுக்கிறாரென்றால் முன்னணி பட நிறுவனங்கள் எல்லாம் படம் பண்ண ஆவலாக இருக்கிறதோ, படம் வெளியாவதற்கு முன்பே நான்கைந்து நாட்களுக்கு திரையரங்குகளில் டிக்கெட் விற்றுத் தீர்கிறதோ, ஓ.டி.டி., தொலைக்காட்சி நிறுவனங்கள் யார் படங்களை யெல்லாம் வாங்க ஆவலாக இருக்கிறதோ, நினைத்த நாயகி களையோ, டெக்னீசியன்களையோ தன் படத்தில் இடம்பெறச் செய்யவும் நீக்கவும் முடிகிறதோ… அத்தகையவர்களெல்லாம் நட்சத்திர மதிப்புமிக்கவர்கள். அதாவது, திரைப் பந்தயத்தில் ஓடும் ஜெயிக் கிற குதிரைகள். நடிகருக்கு மட்டுமில்லை, இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கும் இந்த ஸ்டார் வேல்யூ உண்டு. ஆனாலும் முதன்மையாக நாயகன், நாயகிகளுக்குத்தான் இது மிகப்பொருத்தமானது.

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு.

"நான் ராகு காலத்தில்தான் பிறந்தேன், கல்யாணம் செய்தேன். சிங்கக் குட்டிகள் போல இரண்டு குழந்தைகள் உள்ளது' என்று திருமண நிகழ்வொன்றில் அமைச்சர் எ.வ. வேலு பேசியிருக்கிறாரே?

ஒருவேளை சனாதனத்துக்கு எதிரான இந்தப் பேச்சுக்காகத்தான் எ.வ.வேலுவுக்கு எதிராக வருமானவரிச் சோதனைகள் நடத்துகிறார்களோ!

nkn111123
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe