மாவலி பதில்கள்

mavalianswers

திராதி, துடியலூர், கோவை

13 ஆண்டுகளுக்குப் பின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலேயே உள்ளாட்சித் தேர்தல் நடந்துவிட்டதே, தமிழ்நாட்டில்?

தீவிரவாதிகளாலும் ராணுவ நடவடிக்கைகளாலும் அமைதி குலைந்திருக்கும் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை உயிர்ப்பிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆள்வோருக்கு தைரியம் இல்லாததால் ஜனநாயகப் படுகொலை நடந்துகொண்டிருக்கிறது.

mavalianswers

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பரியேறும் பெருமாள் படத்தை மு.க.ஸ்டாலின் பாராட்டியது குறித்து?

இன்னும் பல பெரியார் -அண்ணா -கலைஞர் தேவைப்படுவதை "பரியேறும் பெருமாள்' நமக்கு உணர்த்துவதாகக் கூறி, பரியனின் கதாபாத்திரத்தையும், படம் வெளிப்படுத்தும் நோக்கத்தையும் பாராட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவரே ஒரு காலத்தில் ‘பரியன்’ஆக சினிமாவில் தோன்றியவர்தான். கலைஞரின் கதை-வசனத்தில் வெளியான ‘"ஒரே ரத்தம்'’ படத்தில் ஆதிதிராவிட இளைஞனாக -ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளுக்கு எத

திராதி, துடியலூர், கோவை

13 ஆண்டுகளுக்குப் பின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலேயே உள்ளாட்சித் தேர்தல் நடந்துவிட்டதே, தமிழ்நாட்டில்?

தீவிரவாதிகளாலும் ராணுவ நடவடிக்கைகளாலும் அமைதி குலைந்திருக்கும் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை உயிர்ப்பிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆள்வோருக்கு தைரியம் இல்லாததால் ஜனநாயகப் படுகொலை நடந்துகொண்டிருக்கிறது.

mavalianswers

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பரியேறும் பெருமாள் படத்தை மு.க.ஸ்டாலின் பாராட்டியது குறித்து?

இன்னும் பல பெரியார் -அண்ணா -கலைஞர் தேவைப்படுவதை "பரியேறும் பெருமாள்' நமக்கு உணர்த்துவதாகக் கூறி, பரியனின் கதாபாத்திரத்தையும், படம் வெளிப்படுத்தும் நோக்கத்தையும் பாராட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவரே ஒரு காலத்தில் ‘பரியன்’ஆக சினிமாவில் தோன்றியவர்தான். கலைஞரின் கதை-வசனத்தில் வெளியான ‘"ஒரே ரத்தம்'’ படத்தில் ஆதிதிராவிட இளைஞனாக -ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவராக -அதன் காரணமாக அநியாயமாகக் கொல்லப்படுபவராக ‘நந்தகுமார்’ என்ற கதாபாத்திரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பே நடித்தவர் மு.க.ஸ்டாலின்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

"அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் உத்தரவாதம் உள்ள எல்.இ.டி. பல்ப்' என்று தம்பிதுரை கூறுகிறாரே?

அந்த எல்.இ.டி. பல்ப் பர்சேஸிங்கிலேயே "ஊழல்' என்று "பல்பு' வாங்கிய கட்சிதான் அ.தி.மு.க. என்பதை தம்பிதுரை சொல்ல மறந்திருப்பார்.

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

"எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயார்' என்று ராகுல்காந்தி பேசியுள்ளாரே?

மம்தா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட ஓட்டு செல்வாக்குமிக்க மாநிலக் கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தொடர்பாகவும், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவும் தயங்குகிறார்கள். மு.க.ஸ்டாலினும் இதில் கவனமான அணுகுமுறையை மேற்கொள்கிறார். காங்கிரசுக்கு எந்தக் கட்சியும் ஆதரவளித்துவிடக்கூடாது என்பது பா.ஜ.க.வின் வியூகம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் வாக்குகள் சிதறாத வகையில் வியூகம் வகுத்தாக வேண்டும். யார் பிரதமராக வேண்டும் என்பதைவிட யார் பிரதமராக நீடிக்கக்கூடாது என்பதுதான் இப்போதைய அரசியல் களமாக இருக்கிறது. அதனைப் புரிந்து கொண்டிருப்பதால்தான், "காங்கிரஸ் விரும்பினால்' என்று சொல்லாமல், "எதிர்க்கட்சிகள் விரும்பினால்...' என்கிறார் ராகுல்காந்தி.

ஏ.சுந்தரம், திருப்பூர்

போலி டாக்டர்கள் இருப்பதுபோல போலி பத்திரிகை ஆசிரியர்கள் இருக்கிறார்களா? அவர்களைக் கண்டறிந்தால் சட்டப்படி என்ன தண்டனை இருக்கிறது?

நானும் ரவுடிதான் என்பதுபோல, நானும் பத்திரிகையாளர்தான் என்று ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பயணிக்கும் ஒருசில போலிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களை உண்மையான பத்திரிகையாளர்கள் ஆதரிப்பதில்லை. போலிகளின் செயல்கள் கண்டறியப்பட்டால் மோசடி வழக்கின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அ.குணசேகரன், புவனகிரி

நக்கீரனின் பலம் எது?

துணிவுமிக்க புலனாய்வுத் தன்மையும், தொடர்ந்து வரவேற்று துணைநிற்கும் வாசகர்களும்.

______________

ஆன்மிக அரசியல்

சே.கார்த்தி, அள்ளூர், சேத்தியாதோப்பு

அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதித்தால் பாலியல் குற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா?

இத்தனை காலமாக இல்லாமல் இனி 10 முதல் 50 வயதுவரை உள்ள பெண்களை அனுமதிப்பதால்தான் பாலியல் குற்றங்கள் நடக்கும் என நினைத்தால் அது தவறு. எல்லா வயது பெண்களும் செல்வதற்கு அனுமதியுள்ள காஞ்சிபுரம் கோவிலில்தான் அர்ச்சகர் தேவநாதன், கடவுள் சிலை உள்ள கருவறையிலேயே பாலியல் குற்றத்தை பலகாலமாக செய்து வந்தார். ஒருநாள் அது அம்பலமானது. ‘"பராசக்தி'’ படத்தில் கோவில் பூசாரி செய்ததை நிஜத்தில் நிரூபிக்கும் தேவநாதன்கள் பல இடங்களிலும் இருக்கிறார்கள். பக்தர்களாக அய்யப்பன் கோவிலுக்கு செல்லக்கூடியவர்களுக்கு இத்தகைய செயல்களில் ஈடுபடும் எண்ணம் ஏற்படாது. பக்தர்கள் என்ற பெயரிலோ, அர்ச்சகர்கள் என்ற தகுதியிலோ மன வக்கிரம் கொண்டவர்கள் உள்ளே நுழைந்துவிட்டால் பாலியல் குற்றம் மட்டுமின்றி பல வகையான குற்றங்கள் நடக்கும். அதனைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பையும் பாதுகாப்பையும் பெருக்க வேண்டியது அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் பொறுப்பு. சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களின் வழிபாட்டு உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு கேரளாவின் பந்தளம் அரச குடும்பம் தொடங்கி, பக்தர்களான பெண்கள் உள்பட பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளிப்படுகின்றன. ஆன்மிகத்தை அரசியலாக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா போன்ற அமைப்புகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கலவரச் சூழலை உருவாக்கி, கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கின்றன. வழிபாட்டு உரிமைகளில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என மனிதநேய மக்கள் கட்சி போன்ற முஸ்லிம் அமைப்புகளும் தீர்மானம் நிறைவேற்றுகின்றன. சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு பல வகைகளில் கவனத்திற்குரியதாகி இருக்கிறது.

nkn191018
இதையும் படியுங்கள்
Subscribe