சி. கார்த்திகேயன், சாத்தூர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படமாவது "யு' சான்றிதழ் பெற்று வன்முறை இல்லாத குடும்பப்பாங்கான படமாக இருக்குமா?
உங்கள் நண்பர் யாராவது முனியாண்டி விலாஸ், பிரியாணிக் கடைகள், பரோட்டாக் கடைகளில் போய் உட்கார்ந்துகொண்டு சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் கேட்டால் என்ன சொல்வீர்கள்! அதேதான் உங்களுக்கும். லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்திலிருந்தே போதைப் பொருள் கேங், ஆயுதங்களின் அணிவகுப்பு இல்லாமல் படம் எடுப்பதில்லை என்கிற முடிவில் இருக்கிறார். அவரிடம் எதற்கு விக்ரமன், விசு டைப் கதைகளை எதிர்பார்க்கிறீர்கள்.
ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்.
"ஒடைச்சுப் பார்க்கலாமா' என்ற விளம்பர வசனம் இப்போது எந்த கட்சிக்கு பொருந்தும்?
பொதுவாக வலுவான அரசியல் கட்சிகள் அனைத்துக்குமே பொருந்தும். குறிப்பாக இந்த
சி. கார்த்திகேயன், சாத்தூர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படமாவது "யு' சான்றிதழ் பெற்று வன்முறை இல்லாத குடும்பப்பாங்கான படமாக இருக்குமா?
உங்கள் நண்பர் யாராவது முனியாண்டி விலாஸ், பிரியாணிக் கடைகள், பரோட்டாக் கடைகளில் போய் உட்கார்ந்துகொண்டு சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் கேட்டால் என்ன சொல்வீர்கள்! அதேதான் உங்களுக்கும். லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்திலிருந்தே போதைப் பொருள் கேங், ஆயுதங்களின் அணிவகுப்பு இல்லாமல் படம் எடுப்பதில்லை என்கிற முடிவில் இருக்கிறார். அவரிடம் எதற்கு விக்ரமன், விசு டைப் கதைகளை எதிர்பார்க்கிறீர்கள்.
ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்.
"ஒடைச்சுப் பார்க்கலாமா' என்ற விளம்பர வசனம் இப்போது எந்த கட்சிக்கு பொருந்தும்?
பொதுவாக வலுவான அரசியல் கட்சிகள் அனைத்துக்குமே பொருந்தும். குறிப்பாக இந்த பத்தாண்டுக் காலத்தில் பா.ஜ.க.வுக்கு கச்சிதமாகப் பொருந்தும். மாநில, தேசிய கட்சிகள் என பேதம் பார்க்காமல் பதவி, பணம் ஆசைகாட்டி கட்சிகளை உடைத்து கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தும், ஆட்சிகளைக் கலைத்தும், மசோதாக்களை நிறைவேற்ற அணி மாறி வாக்களிக்கவைத்தும் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது பா.ஜ.க.
ராஜ்மோகன், முட்டியூர்
தமிழக முதல்வரின் காலைச் சிற்றுண்டி திட்டத்தில் சமைக்கப்படும் உணவுக்காக எந்த குழந்தைகளும் ஏங்கிக் கிடப்ப தில்லை என்று அடித்துக் கூறுகிறாரே அ.தி.மு.க. தொண்டர் ஒருவர்?
அது தொண்டர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்ட மல்ல,… வெறும் வயிற் றோடு பள்ளிகளுக்கு வந்து அரை மயக் கத்திலே பாடத்தைக் கவனிக்கும் ஆயி ரக்கணக்கான குழந்தைகளுக் காக ஆரம்பிக் கப்பட்டது. எனவே அதைக் குறித்து பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளும், அவர்களது பெற்றோரும் கருத்துச் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். வேண்டுமானால், கட்சிகள் கூட்டத்துக்கும் மாநாடுகளுக்கும் அழைக்கும்போது கொடுக்கும் குவார்ட்டர் பாட்டில்களுக்கும், புளியோதரைகளுக்கும் ஏங்கிக் கிடப்ப தில்லை என்று தொண்டர் என்ற முறையில் கருத்துச் சொன்னால் அதை நாம் பரிசீலிக்கலாம்.
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி
"தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்கிறாரே அமைச்சர் முத்துசாமி?
எத்தனை படியில் எனக் கேளுங்கள். இந்த படிப்படியாக என்கிற உறுதிமொழியை ஜெ. இறப்பதற்கு முன்பு ஜெயித்து வந்த தேர்தலிலேயே சொல்லிவிட்டார். இப்போது தி.மு.க. கோடிகளில் வருமானத்தை அள்ளிக் குவிக்கும் டாஸ்மாக்குக்கு மாற்றாக ஒரு வருமானத்தைக் கண்டறியாத வரை சில நூறு கடைகளை மூடுவதும், படிப்படியாக என வார்த்தை ஜாலம் காட்டுவதும் தொடரவே செய்யும்
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் அனுமதி வழங்க மறுத்திருப்பது குறித்து?
சங்கரய்யா என்ன ஆர்.எஸ்.எஸ்.ஸில் உறுப்பினராக இருந்திருக்கிறாரா?… ஆங்கில அரசிடம் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறாரா?… ராமர் கோவில் கட்டவேண்டும் என்றாவது கோரிக்கை வைத்திருக்கிறாரா என்ன?… மிகக் குறைந்தபட்சம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறாரா?…அவருக்கு ஆதரவாக எதற்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் அனுமதி வழங்கவேண்டும்? ஹெச்.ராஜாவுக்கு டாக்டர் பட்டம் என்று கடிதம் போயிருந்தால்... அடுத்தநாளே அனுமதிக் கடிதம் ஓ.கே. ஆயிருக்கும்.
எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு
திருச்செங்கோடு அருகே 6 பெண் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு பெண் டாக்டர் அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் எதைக் காட்டுகிறது?
குழந்தைகளை விற்பனை செய்யும் தரகர்களு டன், கூட்டு வைத்துக்கொண்டு குழந்தை விற்பனை யில் அரசு மருத்துவரே தொடர்புவைத்திருப்பது ஒட்டுமொத்த மருத்துவர்களுக்குமே அவமானம். அவரை வெறுமனே சஸ்பெண்ட் மட்டும் செய் யாமல் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவத் தில் ஈடுபடுவதிலிருந்து தடைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால்தான் மனிதரிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்கிறார்கள். அவர்கள் கடவுள் நிலைக்கு உயராவிட்டாலும் பரவா யில்லை.... மனிதர் என்ற நிலையிலிருந்து கீழே இறங்கக் கூடாது.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
பா.ஜ.க.விலிருந்து விலகி விட்டாரே கவுதமி..?
சொந்தக் கட்சி யைச் சேர்ந்தவரிட மிருந்தே நில அபகரிப்பு தொல்லை. புகார் கொடுத் தும் நடவடிக்கை இல்லை என்பதால் கட்சி கசந்துவிட்டது. கவுதமி போனால் கட்சிக்கு பெரிய இழப்பில்லை என தலைமை நினைத்த தால் மௌனமாகக் கடந்துவிட்டது.