Advertisment

மாவலி பதில்கள்!

mm

அ. யாழினிபர்வதம், சென்னை-78.

தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடி யாதென உச்சநீதிமன்றம் கூறிவிட்டதே?

Advertisment

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் எடுக்கும்போதே, பாராளுமன்றம் இதுகுறித்து சட்டமியற்ற இருக்கிறது. எனவே வழக்கை எடுக்கவேண்டாம் என ஒன்றிய அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. அதையும் தாண்டி வழக்கை எடுத்த நிலையில் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த வில்லை. 34 நாடுகளில் தன் பாலினத் திரு மணம் அனுமதிக்கப் பட்டிருக்கிறது. சட்டரீதியாக ஒரு விஷயத்தை மறுத்தால், சட்ட மீறலாக அந்த விஷயம் கருதப்படும். தன் பாலின திருமணத்தை அங்கீகரித்தால், அது பரவலாகிவிடும் என்பது கற்பனைதான். அங்கீகரிக்கப்பட்ட 34 நாடுகளில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது முடிவுக்கு வந்துவிட்டதா என்ன?

Advertisment

mm

செந்தில்குமார் எம்., சென்னை-78

விட

அ. யாழினிபர்வதம், சென்னை-78.

தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடி யாதென உச்சநீதிமன்றம் கூறிவிட்டதே?

Advertisment

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் எடுக்கும்போதே, பாராளுமன்றம் இதுகுறித்து சட்டமியற்ற இருக்கிறது. எனவே வழக்கை எடுக்கவேண்டாம் என ஒன்றிய அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. அதையும் தாண்டி வழக்கை எடுத்த நிலையில் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த வில்லை. 34 நாடுகளில் தன் பாலினத் திரு மணம் அனுமதிக்கப் பட்டிருக்கிறது. சட்டரீதியாக ஒரு விஷயத்தை மறுத்தால், சட்ட மீறலாக அந்த விஷயம் கருதப்படும். தன் பாலின திருமணத்தை அங்கீகரித்தால், அது பரவலாகிவிடும் என்பது கற்பனைதான். அங்கீகரிக்கப்பட்ட 34 நாடுகளில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது முடிவுக்கு வந்துவிட்டதா என்ன?

Advertisment

mm

செந்தில்குமார் எம்., சென்னை-78

விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு இருக் கிறது, அதிர்ஷ்டம் இல்லையே?

நீங்கள் சொன்ன மேற்கண்ட மூன்றும் இருந்தாலே போதுமானது. தனியாக அதிர்ஷ்டம் தேவையில்லை. இந்த மூன்றும் இல்லாதவர்களுக் குத்தான் அதிர்ஷ்டத்தைக் குறித்த எதிர்பார்ப்பு இருக்கும். அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு மதியச் சாப்பாடு நிச்சயமில்லை என்பது பழமொழி.

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சியமைந்தால் ஊழல்வாதிகளிடமிருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்டெடுப்போம் என்கிறாரே அமித்ஷா?

சத்தீஸ்கரை விடுங்கள், இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சிதான். அத்தனை ஊழல்வாதிகளிடமிருந்தும் கடைசிப் பைசாவரை பா.ஜ.க. மீட்டெடுத்துவிட்டதா? அல்லது எதிர்க்கட்சிகளிடமிருந்து ஒரு பைசாவிடாமல் மீட்டெடுப்பது மட்டும்தான் பா.ஜ.க. லட்சியமா?

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

பிரதமர் மோடி பொய் சொல்லமாட்டார் என்கிறாரே அண்ணாமலை?

அரசியலில் பொய்சொல்லாத நாக்குகள் அபூர்வம். அது பிரதமர் மோடியானாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவானாலும் சரிதான். ஆனால் சொல்லிவிட்டு, பின் தங்களை அரிச்சந்திரர்போல் காட்டிக்கொள்வார்கள். எப்படி கூசாமல் இருபதாயிரம் புத்தகங்கள் படித்ததாக அண்ணாமலை அடித்துவிட்டாரோ…. அப்படித் தான். தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஒன்றை நிறைவேற்றவில்லையென்றாலே அது பொய் சொன்னதாகத்தான் கணக்கு. அப்படிப் பார்த்தால் பொய் சொல்லாத அரசியல்வாதிகள் இருக்க வாய்ப்பிருக்கிறதா என்ன?

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

படிப்பறிவு இல்லாத பிள்ளை ராகுல் என அசாம் முதல்வர் கூறியிருக்கிறாரே?

வாரிசு அரசியல் குறித்துப் பேசுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக ஜெய் ஷா இருப்பது குறித்தும், பா.ஜ.க.வில் தலைவர்களின் வாரிசுகள் தொடர்வது குறித்தும் கேள்வியெழுப்பி யிருந்தார் ராகுல். பா.ஜ.க.வை நியாயப்படுத்தி ராகுலை அவமானப்படுத்துவதற்காக அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வா சர்மா, ராகுலை படிப்பறிவு இல்லாத பிள்ளை எனச் சீண்டியதுடன், தாத்தா, அப்பா, அம்மா, சகோதரி என எல்லோரும் அரசியலில் இருந்துகொண்டு, கட்சியைக் கட்டுப்படுத்துவதற்கும், தந்தையும் மகனும் அரசியலில் இருப்பதற்கும் ஒப்பிடமுடியுமா என கேள்வியெழுப்பினார். மற்றபடி படிப்பறிவு எனப் பார்த்தால் ராகுல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வரை போய் படித்துவந்தவர். ஹிமந்தாவும் சட்டக் கல்லூரி, கௌகாத்தி பல்கலைக்கழகம் வரை போய் படித்து வந்தவர்தான். ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் பா.ஜ.க. மூன்றோ, நான்கோ முறைதான் மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அதற்குள் பலரின் அடுத்த தலைமுறை அரசியலுக்குள் வந்துவிட்டனர். வேத்பிரகாஷ் கோயல்- அவரது மகன் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான்- மகன் தேபேந்திர பிரதான், டோர்ஜி காண்டுவின் மகன் பேமாகாண்டு, கங்காதர் பட்னாவிஸ் மகன் தேவேந்திர பட்னாவிஸ் என நீள்கிறது. ஒரு அரசியல் ஆய்வொன்று இந்தியா வில் அனைத்துக் கட்சியிலுமே வாரிசு அரசியல் இருப்பதை உறுதிசெய்கிறது. காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்குமான வாரிசு அரசியல் சதவிகிதம் ஓரிரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில்தான் இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

எஸ். கதிரேசன், பேர்ணாம்பட்டு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மக்கள் மீது திணிக்கக்கூடாது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுவது குறித்து மாவலி கருத்தென்ன?

தேர்தல் ஆணையராக இருந்தவர் என்ற முறையில் குரேஷியின் கருத்து முக்கியமானதுதான். ஆனால் அது மட்டுமே ஒரு திட்டத்தைத் தடுத்து நிறுத்திவிடுமா என்ன!

nkn251023
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe