Advertisment

மாவலி பதில்கள்!

ss

ஆர்.கோவிந்தன், வாடிப்பட்டி

நியூஸ் க்ளிக் ஊடகத்துக்கு சீன நிதி வந்த காரணத்தால் வழக்குப் பதிவு செய்த ஒன்றிய அரசு, பி.எம். கேர்ஸ் நிதிக்கு சீன நிறுவனங்கள் நிதியளித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லையே?

Advertisment

நியூஸ் க்ளிக் நிறுவனம் சீன நிதி பெற்றதான குற்றச் சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஊடகங்கள் போன்ற நான்காவது தூண்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியால் கட்டுப்படுத்தப்பட்டால் நமது கொள்கைகளில் அந்நிய அரசுகள் தலையிடக் கூடுமென்ற எச்சரிக்கை சரிதான். அதற்காக பா.ஜ.க.வை விமர்சிப்பதற்காக தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஊடகங்கள் வேட்டையாடப்படுவது அனு மதிக்கப்படக்கூடாது. பி.எம். கேர்ஸ் அமைப்புக்கு அந்நிய நாட்டு நிறுவனங் களின் நிதி சரியா… தவறா என்பதைவிட, பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக் கும்போது பி.எம்.

ஆர்.கோவிந்தன், வாடிப்பட்டி

நியூஸ் க்ளிக் ஊடகத்துக்கு சீன நிதி வந்த காரணத்தால் வழக்குப் பதிவு செய்த ஒன்றிய அரசு, பி.எம். கேர்ஸ் நிதிக்கு சீன நிறுவனங்கள் நிதியளித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லையே?

Advertisment

நியூஸ் க்ளிக் நிறுவனம் சீன நிதி பெற்றதான குற்றச் சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஊடகங்கள் போன்ற நான்காவது தூண்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியால் கட்டுப்படுத்தப்பட்டால் நமது கொள்கைகளில் அந்நிய அரசுகள் தலையிடக் கூடுமென்ற எச்சரிக்கை சரிதான். அதற்காக பா.ஜ.க.வை விமர்சிப்பதற்காக தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஊடகங்கள் வேட்டையாடப்படுவது அனு மதிக்கப்படக்கூடாது. பி.எம். கேர்ஸ் அமைப்புக்கு அந்நிய நாட்டு நிறுவனங் களின் நிதி சரியா… தவறா என்பதைவிட, பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக் கும்போது பி.எம். கேர்ஸ் எதற்கு என்ற கேள்விதான் சரியானதாக இருக்கும்.

Advertisment

கே.கே. வெங்கடேசன், நெம்மேலி

ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாமே?…

இந்த வருடம் மட்டுமல்ல,…தொடர்ச்சியாக ஒரு பதினைந்து வருடங்களை எடுத்துப் பார்த்தால், பத்து வருடங்கள் வரைக்கும் தமிழகம் ரத்த தானத்தில் முதலிடத்தில்தான் உள் ளது. ரத்த தானம் குறித்த விழிப் புணர்ச்சியும் பிரச்சாரமும் இந்தப் பெருமையை நமக்குக் கொண்டுவந்துள் ளன. தவிரவும், உடலில் தானம் செய்யு மளவுக்கு ரத்தம் இருப்பது, பெரும் பான்மையானவர்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் காட்டுகிறது. உடலுறுப்பு தானத்திலும் தமிழகம் முன்னணியில்தான் இருக்கிறது.

எஸ். கதிரேசன், பேர்ணாம்பட்டு

இந்தியாவில் நாய்க்கடிக்கு வருடத்துக்கு 25000 பேர் மரணமடைகிறார்களே?…

உலகிலேயே அதிக தெருநாய்களைக் கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் 2022-ல் தெரு நாய்க் கடியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000. கடிபட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்துக்கும் நெருக்கம். தெருநாய்களுக்கு ரேபிஸ் ஊசி போடுவதி லும், அவற்றின் பெருக்கத்தை கண்காணிப்பதிலும் ஒன்றிய அரசும் மாநில அரசும் கவனம் செலுத்தவேண் டும் என்பதே இந்த புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை.

மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

பொன்னியின் செல்வன் கதையில் உள்ளதைப் போன்று தற்போதைய காவேரி ஆறு இல்லையென மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கவலைப்பட்டுள் ளாரே?…

காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த மாணவனைப் பற்றிய வழக்கொன்றில் கூறும்போது, காவிரியை பொன்னியின் செல்வன் கதையில் இருந்த ஆறாக நினைத்து பலர் வருகிறார்கள். மணல் கடத்தல், ஆக்கிரமிப்பால் காவிரி மோசமாக உள்ளது என காவிரியைச் சுரண்டுபவர்கள் குறித்தும், அதைப் பாதுகாக்க அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதது குறித்தும் பேசியிருப்பார். எந்த ஆறும் நூற்றாண்டுகள் தாண்டி அப்படியே நீடிக்கமுடியாது. அதேசமயம் கங்கை மாதிரி ஜீவநதிகள் இல்லாத தமிழகம், ஆற்றைப் பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை காட்டவேண்டியதும் அத்தியாவசியதுமானதும்தான்.

mm

த.சத்தியநாராயணன், அயன்புரம்

இந்திய ஆடுகளம் மோசம் என இங்கிலாந்து கேப்டன் கூறுவது பற்றி?

அது தர்மசாலா ஆடுகளத்தைப் பற்றி இங்கி லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியது. புற்களே இல்லாமல் மண் பரப்பாக உள்ள ஆடுகளம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எங்கள் வீரர்கள் இங்கு விளையாடும் போதும், டைவ் அடிக் கும்போதும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். இல்லா விட்டால் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே மோசமான இந்த மைதானத்தில் ரன்னைத் தடுப்பதற்காக டைவ் செய்வதைத் தவிர்க்கலாம். எப்போதும் களத்தின் மோசமான தன்மையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கூறியிருந்தார். ஆனால் பங்களாதேஷ் அணியிடமிருந்து இதே ஆடுகளம் குறித்து எந்தப் புகாரும் வரவில்லை.

ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு

பஸ் ஸ்டாண்டில் ஜேப்படி திருடர்களின் போட்டோக்களை மாட்டியிருப்பதுபோல், அரசு அலு வலகங்களில் லஞ்சம் வாங்கும் ஊழி யர்களின் படங்களை மாட்டலாமே?

அரசு ஊழியர் லஞ்சம் வாங்கி னாலும் மாட்டுவது அரிதுதான். மாட்டினாலும் பணியிடைநீக்கம் அல்லது துறைரீதியான நடவடிக்கைக்குப் பின் பணியில் தொடர்வார். ஜேப்படிக்காரர்களுக்கு சங்கமோ, கூட்டமைப்போ கிடையாது. அரசு ஊழியர்களுக்கு அது உண்டு. அதனால் லஞ்சம் வாங்கியவர்களின் புகைப் படங்களை அலுவலகங்களில் மாட்டுவ தெல்லாம் நம் கற்பனையைத் தவிர வேறெதிலும் நடக்காது.

nkn181023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe