சி. கார்த்திகேயன், சாத்தூர்
மகாத்மா காந்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற முடிய வில்லையே?
ஐந்து முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தி யின் பெயர் பரிந்துரைக் கப்பட்டது. ஆனால் இறுதிப் பட்டியலில் ஒருமுறைகூட காந்தியின் பெயர் இடம் பெற வில்லை. இதுகுறித்து பின்னாளில் நோபல் கமிட்டியின் செயலாளர் கெயர் லுண்டஸ்தாடு வருத்தம் தெரிவித்தார். காந்திக்குக் கிடைத்திருந் தால் நோபல் பரிசுக்கு பெயர் கிடைத்திருக்குமே தவிர, நோபல் பரிசு வந்து காந்திக்குப் பெருமை சேர்க்க வேண்டியதில்லை. அந்த வாய்ப்பை நோபல் இழந்துவிட்டது.
செந்தில்குமார். எம், சென்னை - 78
தியேட்டர், ஓ.டி.டி. இரண்டின் பலம், பலவீனம் என்ன?
தங்கள் ஆதர்ச நடிகரின் படத்தை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் தியேட்டரில் பார்ப்பதுபோல் ஓ.டி.டி.யில் பார்க்கமுடியாது. தியேட்டரில் அதிக நாட்கள் படம் ஓட ஓட, 25-ஆவது நாள், 50-வது ந
சி. கார்த்திகேயன், சாத்தூர்
மகாத்மா காந்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற முடிய வில்லையே?
ஐந்து முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தி யின் பெயர் பரிந்துரைக் கப்பட்டது. ஆனால் இறுதிப் பட்டியலில் ஒருமுறைகூட காந்தியின் பெயர் இடம் பெற வில்லை. இதுகுறித்து பின்னாளில் நோபல் கமிட்டியின் செயலாளர் கெயர் லுண்டஸ்தாடு வருத்தம் தெரிவித்தார். காந்திக்குக் கிடைத்திருந் தால் நோபல் பரிசுக்கு பெயர் கிடைத்திருக்குமே தவிர, நோபல் பரிசு வந்து காந்திக்குப் பெருமை சேர்க்க வேண்டியதில்லை. அந்த வாய்ப்பை நோபல் இழந்துவிட்டது.
செந்தில்குமார். எம், சென்னை - 78
தியேட்டர், ஓ.டி.டி. இரண்டின் பலம், பலவீனம் என்ன?
தங்கள் ஆதர்ச நடிகரின் படத்தை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் தியேட்டரில் பார்ப்பதுபோல் ஓ.டி.டி.யில் பார்க்கமுடியாது. தியேட்டரில் அதிக நாட்கள் படம் ஓட ஓட, 25-ஆவது நாள், 50-வது நாள் என விளம்பரப்படுத்திக்கொள்ள முடியும். அது ஓ.டி.டி.யில் முடியாது. ஒருமுறை டாப்-அப் செய்துவிட்டு ஆறு மாதம், ஒரு வருடமென ஓ.டி.டி.யில் கவலையில்லாமல் படம் பார்க்கலாம். தியேட்டரில் ஒருமுறை குடும்பத்துடன் படம் பார்க்க வேண்டுமென்றாலே ஆயிரங்களை எண்ணி வைக்கவேண்டும். எத்தனை சுவாரஸ்யமான படமானாலும் இரண்டரை அல்லது மூன்றுமணி நேரத்தில் எடுத்தாகவேண்டும் அல்லது இரண்டாம் பாகத்துக்குப் போகவேண்டும். ஆனால் ஓ.டி.டி.யில் எபிசோடு எபிசோடாக எடுத்து ரசிகர்களைப் பார்க்க வைக்கலாம். தியேட்டர், ஓ.டி.டி. இரண்டுக்குமே வில்லன், திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு, வலைத்தளங்களில் வெளியாகும் படங்களே.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
கூட்டணி முறிவுக்குப் பழிவாங்கலாக அ.தி.மு.க.வையும் பா.ஜ.க உடைக்குமா?
கடந்த ஒன்பதாண்டுகளில் குஜராத், கோவா இன்னும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. வளைத்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும், தேசிய காங்கிரஸுக்கும் என்னவானது என்பதும் நமக்குத் தெரியும். பீகாரில், நிதிஷ்குமார் ஏன் பா.ஜ.க. கூட்டணியைவிட்டு வெளியேறினார் என்பதையெல்லாம் இணைத்துக் கோடிட்டால், அ.தி.மு.க. உடையுமா… உடையாதா என்பது விளங்கும். ஒருபக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. மறுபக்கம் கட்சி மாறுபவர்களுக்கு சகாயம் செய்ய பா.ஜ.க.வின் வசம் தாராளமான கட்சி நிதி. பயந்தவர்களுக்கு வழக்குகள், பேராசைக்காரர்களுக்குப் பெட்டிகள். இரண்டையும் எப்படி சமாளிப்பது என்பதை அறிந்திருந்தால் இலை தளைப்படாமல் எடப்பாடி காப்பாற்றலாம்.
ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு
ராகுல்காந்தியையும் மோடியையும் எதிர்த்துப் போட்டியிடத் தயார் என சீமான் கூறியுள்ளாரே?
அதற்கு எதற்கு சீமான்? டெபாஸிட் தொகை கையிலுள்ள யார் வேண்டுமானாலும் இவர்கள் இருவரில் எவரை வேண்டு மானாலும் எதிர்த்துப் போட்டியிட்டுவிடலாமே! இருவரையும் தோற்கடிப்பேன் என சீமான் சவால்விட்டு செய்துகாட்டினால் அதில் பொருளிருக்கும்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
மாநிலங்களுக்கு நிதியை நிறுத்தி 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு கருணைக் கொலை செய்கிறது என்று காங்கிரஸ் கட்சி சொல்கிறதே?
ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கட்சியின் திட்டமென்பதால் 100 நாள் வேலைத் திட்டத்தை பா.ஜ.க. விரும்பவில்லை. நிதியைக் குறைத்தது, எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்றன. பின், பட்ஜெட்டில் நிதியை ஒதுக்கிவிட்டு அதனை அனுப்புவதற்கு காலதாமதம் செய்தது. நாளொன் றுக்கான சம்பளத் தொகையைக் குறைத் தது. இப்போது வேலைசெய்வதை உறுதிசெய்ய வேலைக்கு வரும் ஆட்களை படம்பிடித்து அனுப்பச் சொல்கிறது. சம்பளம் போட ஆதார் கட்டாயம் என்கிறது. பா.ஜ.க.வின் செயல், நோயாளியை மருத்துவ மனையில் அனுமதித்துவிட்டு, ஆக்ஸிஜன் குழாயை உருவி விட்டு வேடிக்கை பார்ப்பதுபோல் இருக்கிறது.
வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு
பா.ஜ.க., இந்தியா கூட் டணியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறோம் எனும் மாயாவதியின் அறிவிப்பு?
அது அவரது கட்சி. எனவே முடிவெடுக்கும் சுதந்திரமும் அவ ருடையதே. ஆனால் கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்களின் முடிவை எடுத்துவைத்து கட்சி வளர்கிறதா… தேய்கிறதா என்பதை மாயாவதி ஆராயவேண்டும். அதுதான் கட்சிக்கும், அவருக்கும், கட்சியைச் சார்ந்திருக்கும் தலித் சமூகத்தினருக்கும் நல்லது. மாயாவதியின் பி.எஸ்.பி. கட்சி வெல்லும் இடங்கள் மட்டுமல்ல,…அதன் வாக்கு சதவிகிதமும் தொடர்ந்து சரிவில் இருக்கிறது என்பதுதான் தேர்தல் ஆணையமும் ஊடகங்களும் காட்டும் சேதி. கட்சியை வெற்றிப் பாதைக்குத் திருப்ப என்ன செய்வதென்று சிந்திப்பதுதான் ஒரு பொறுப்பான தலைவியாக மாயாவதி செய்ய வேண்டிய வேலை.