Advertisment

மாவலி பதில்கள்

ff

எம்.பிரவீண், கடலூர்

மனிதாபிமானம் குறையும்போது என்ன நடக்கும்?

மத்தியப்பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு நடந்ததே நடக்கும். வேற்று மாநிலத்தைச் சேர்ந்த இந்த சிறுமி உஜ்ஜைன் நகரில் மர்ம நபர்களால், சிறுமி என்றும் பார்க்காமல் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளார். நினைவுதிரும்பிய நிலையில் அச்சிறுமி, பலாத்காரத்தால் ஏற்பட்ட ரத்தக் கறைபடிந்த ஆடையுடன் தட்டுத் தடுமாறி நடந்து வழியிலிருந்த வீடுகளில் உதவி கேட்டுள்ளார். துளியளவு மனிதாபிமானம் இருக்கிறவர்கள்கூட, அவளை வீட்டுக்குள் அழைத்து ஆடை, உணவு தந்து காவல் துறைக்கு தகவல் தந்திருப்பார்கள். மாறாக, அந்தச் சிறுமியை அனைவரும் புறக்கணித்து விரட்டியுள்ளனர். பல கிலோமீட்டர் நடந்து சென்று ஆசிரமம் ஒன்றை அடைந்தபின்பே அவளுக்கு உதவி கிடைத்துள்ளது. பலாத் காரம் செய்தவர்கள் மிருகங்கள் எனில், உதவ மறுத்தவர்கள், இதயம் உறைந்த ஜென்மங்கள்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் தேசியமயமாக்கி அணைக்கட்டுகளை இராணு வக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் என்ன?

Advertisment

பல பத்தாண்டுகளாக வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் எல்லாம் ராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அங்கே அமைதி திரும்பிவிட்டதா? வன்முறை முடிவுக்கு வந்துவிட்டதா? இராணுவம் அனைத்துக்கும் தீர்வாகமுடியாது. காவிரி ஆணையமும் உச்சநீதிமன்றமும் உறுதியான முடிவுகள் எடுத்தாலே தீர்வுகள் கிடைத்துவிடும்.

mm

தே.மாதவராஜ், இராமநாதபுரம்

நாட்டில் கோடிக்கணக்கான பிச்சைக் காரர்கள் இருப்பதை மறந்து இந்தியா விரைவில் உலக பொருளாதார சக்தியாக உருவாகும் என மோடி சொல்கிறாரே?

பொருளாதார வலிமைமிக்க நாடாக இருப்பதற்கும் பிச்சைக்காரர்களுக்கும் தொடர்பு கிடையாது. பொருளாதார வலிமை மிக்க அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலுமே பிச்சைக்காரர்கள் உண்டு. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி- இறக்குமதி என பல அம்சங்கள் பொருளாதாரத்தில் உண்டு. அப்படி உயரும் பொருளாதாரம், 140 கோடி மக்களையும் சென்ற டையும்விதத்தில் மக்கள்நலக் கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கவேண்டும். பொருளாதார வலிமைமிக்க நாடாகி செல்வம் அதானி, அம்பானிகளிடம் மட்டும் தங்கினால், அதனால் எந்தப் பலனும் இல்லை.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

சனாதன தர்மம் நம் டி.என்.ஏ.விலேயே உள்ளது. அதை அழிக்கமுடியாது என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறியது பற்றி?

கவர்னர் ஆர்.என். ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியர்களின் டி.என்.ஏ.வில் சனாதன தர்மம் இருப் பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தால் நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆர். ராஜ்மோகன், முட்டியூர்

இரட்டை இலை மட்டும் இல்லையென்றால் மூட்டையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட நெல்லிக்காய் போல பழனிச்சாமியின் அ.தி.மு.க. சிதறும் என்கிறாரே தினகரன்?

எடப்பாடி ஒன்றும் இல்லை என சுட்டிக்காட்டு கிறார். அந்த ஒன்றுமில்லாத எடப்பாடியால், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வரமுடிந்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க. வில் ஜெ.வுக்கு அடுத்தபடியாக இருந்த சசிகலா, சசிகலா வின் அக்காள் மகனான டி.டி.வி. தினகரனால் அதை ஏன் சாதிக்கமுடியவில்லை என்பதை யோசிக்கவேண்டும். அடுத்து, மூட்டை தானாக அவிழ்கிறதா இல்லை பின்னிருந்து அவிழ்க்கும் கைகள் யாருடையது என்ற கேள்வியும் இருக்கிறது.

ஸாதியா சையத், குடியாத்தம்.

இஸ்க்கான் அமைப்பு பசுக்களை இறைச்சிக்காக விற்கிறது என்கிறாரே.. மேனகா காந்தி..?

dd

சீரியசான குற்றச்சாட்டுதான். "நாட்டின் மிகப் பெரிய ஏமாற்று நிறுவன மாக இஸ்கான் உள்ளது. பசு மாடுகளை வளர்க்கும் கோசாலைகளை நடத்துவதன் மூலம் இந்த அமைப்பு, பெரிய அளவு நிலங் கள் உட்பட அரசாங்கத்திடமிருந்து பல்வேறு பலன்களைப் பெறுகிறது. ஆந்திரப் பிரதேசத் தின் அனந்தபூரிலுள்ள இஸ்கானின் கோசா லைக்கு நான் சென்றிருந்தேன். பால் தராத பசு மாடு ஒன்றுகூட அங்கு இல்லை. அதேபோல், ஒரு கன்றுக் குட்டிகூட இல்லை. அனைத்தையும் அவர்கள் விற்றுவிட்டார்கள் என்பது தான் இதற்கு அர்த்தம். இஸ்கான் தனது மாடுகளை யெல்லாம் கறிக் கடைக்காரர்களுக்கு விற்கிறது. அவர்கள் செய்யும் அளவுக்கு வேறு யாரும் இவ்வாறு செய்வதில்லை. இஸ்கான் அமைப்பினர், சாலைகளில் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்று பாடிக்கொண்டே செல்கிறார்கள். அதோடு, தங்கள் வாழ்நாள் முழுவ தும் பாலை நம்பியிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்த அளவுக்கு கால்நடைகளை கசாப்புக் கடைக்காரர்களுக்கு யாரும் விற்கவில்லை'' என்றிருக்கிறார் மேனகா. ஒரு பக்கம் மாட்டிறைச்சி யின் பெயரில் படுகொலைகள். மறுபக்கம் மாட்டிறைச் சியை விற்று பிஸினஸ். இது நல்ல அரசியலாக இருக் கிறதே!

nkn041023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe