Advertisment

மாவலி பதில்கள்!

dd

வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு

இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாகியும் தனிநபர் வருமானம் உயராதது ஏன் என்ற ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கருத்து?

Advertisment

இது முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்க ராஜன் பேசியது. பொரு ளாதார வளர்ச்சியின் பலன் தனிநபர் கை களைச் சென்றடைய, ஆட்சியில் இருக்கும் கட்சிதான் கொள்கைகள், திட்டங்களை வகுக்கவேண்டும். மாறாக, மக்களின் பையிலிருக்கும் பணம் கார்ப்பரேட்டுகளைச் சென்றடையும் விதத்தில் அல்லவா ஆட்சியிலிருப்பவர்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்கிறார்கள். ஒரு கணக்கின்படி இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1,31,000. இன்னும் ஐந்தாண்டுகளில் அதன் எண்ணிக்கை இருமடங்காக உயரும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. மாறாக, அந்த சில லட்சம் பேர் தவிர்த்து மற்றவர்கள் அதலபாதாளத்தை நோக்கி நகர்வதுதான் இந்த

வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு

இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாகியும் தனிநபர் வருமானம் உயராதது ஏன் என்ற ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கருத்து?

Advertisment

இது முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்க ராஜன் பேசியது. பொரு ளாதார வளர்ச்சியின் பலன் தனிநபர் கை களைச் சென்றடைய, ஆட்சியில் இருக்கும் கட்சிதான் கொள்கைகள், திட்டங்களை வகுக்கவேண்டும். மாறாக, மக்களின் பையிலிருக்கும் பணம் கார்ப்பரேட்டுகளைச் சென்றடையும் விதத்தில் அல்லவா ஆட்சியிலிருப்பவர்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்கிறார்கள். ஒரு கணக்கின்படி இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1,31,000. இன்னும் ஐந்தாண்டுகளில் அதன் எண்ணிக்கை இருமடங்காக உயரும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. மாறாக, அந்த சில லட்சம் பேர் தவிர்த்து மற்றவர்கள் அதலபாதாளத்தை நோக்கி நகர்வதுதான் இந்தியா முன்னிருக்கும் ஆபத்து.

தே.மாதவராஜ், கோயம்புத்தூர்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுக்குச் சொந்தம் என்கிறாரே சோனியா?

எப்போதும் ஒரு திட்டத் தையோ, சாதனையையோ மற்ற கட்சிகளும் சொந்தம் கொண்டாடு வது வாடிக்கைதான். அதற்கேற்ப மகளிர் இடஒதுக்கீட்டில் சில முயற்சிகளை காங்கிரஸ் செய்திருப்பது உண்மைதான். ஆனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றிய கட்சியென நாளைய வரலாறு பா.ஜ.க.வைத்தான் சுட்டிக்காட்டும். ஆனால், இந்தத் திட்டத்தை அடுத்த ஐந்தாண்டு களுக்குப் பிறகுதான் நடைமுறைப் படுத்துவோம் என பா.ஜ.க. நழுவுவதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

த. ராஜ்மோகன், சிங்கனூர் அஞ்சல், விழுப்புரம்

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை; 2024 நாடாளு மன்றத் தேர்தலில் மீண்டும் மோடியே பிரதமராக விரும்புகிறோம். என்கிறாரே.... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு?

Advertisment

அவரும் அரசியல்வாதிதானே. முதல்நாள் மன்னர் கத்தரிக்காயைப் புகழ்ந்ததால், கத்தரிக் காயைப்போல சிறந்த காய் இல்லை என்று பேசி னான் தெனாலிராமன். மறுநாள் கத்தரிக்காய் சலித்து விட அதனை இலையிலிருந்து மன்னர் ஓரம்கட்ட, தெனாலிராமனும், “சீச்சீ… இதெல்லாம் ஒரு காயா” என மட்டம்தட்டினான். இன்றைக்கு காணுமிட மெல்லாம் தெனாலிராமன்கள். அதில் ஒருவர் செல் லூர் ராஜூ. எந்தக் கட்சியானாலும் முதுகெலும் புள்ள அரசியல்வாதிகள் தற்போது குறைவுதான்.

mm

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

நாடாளுமன்ற புதிய அலுவலகத்திற்கு நடிகைகளுக்கு அழைப்புவிடுத்த மத்திய அரசு "குடியரசுத் தலைவரை' அழைக்காமல் புறக்கணித்தது ஏன்?

மேனாமினுக்கிகளுக்கு இருக்கும் சலுகை முதல் குடிமகளாகிய மேடத்துக்கு இல்லையா என எத்தனையோ பேர் கேட்டாகிவிட்டது. பா.ஜ.க. முகாமில் சாக்குபோக்குகளைப் பேசுகிறார்களே தவிர, சத்தியத்தைப் பேசமாட்டேன் என்கிறார்கள்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

பெண்கள் ஹிஜாப் அணியாவிட்டால் பத்து ஆண்டுகள் சிறை என ஈரான் அரசின் அறிவிப்பு குறித்து?

ஆரம்பத்திலிருந்தே ஈரான் மதவாதம் ஓங்கிய நாடாகத்தான் இருக்கிறது. மாஷா அமினி ஹிஜாப் அணியாததற்காக அரசால் கொல்லப் பட்டது முதல், ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தபிறகும் பெண்களைப் பூட்டிவைக்கும் பண்டமாகத்தான் அந்த அரசு பார்க்கிறது. மாதக்கணக்கில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகும் முல்லாக்களின் சொல்லுக்குத்தான் அங்கே செல்வாக்கு. வெகுபின்னாலிருந்தாலும் இந்தியா வும் மெல்ல அந்தப் பாதையை நோக்கித்தான் போகிறதோ என்பதுதான் மாவலியின் சந்தேகம்.

எஸ். அர்ஷத்ஃபயாஸ், குடியாத்தம்

இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு படித்த 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 42 சதவீதம் அதிகரித் துள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு கூறியுள்ளதே..?

ஆமாம், இந்தியாவிலுள்ள படித்த இளைஞர் களில் 25 வயதுக்கு உட்பட்டவர்களில் 42.3 சதவிகிதம் பேர் வேலை கிடைக்காமல் உள்ளனர். அதிலும் அட்டவணை ஜாதியினர், அட்டவணைப் பழங்குடியினர் என வரும்போது இந்த சதவிகிதம் இன்னும் அதிகமாக உள்ளது என்கிறது இந்த ஆய்வு. குறைந்த வருவாய் கிடைத்தாலும் பரவாயில்லை, எந்த வேலையாயிருந்தாலும் பரவாயில்லை என தேர்வுசெய்பவர்களுக்கு வேலையிருக்கிறது. ஆனால், நினைத்த வேலைதான் வேண்டும், எதிர்பார்ப்புக் கேற்ற வேலை வேண்டும் என நினைப்பவர்களுக் கான வேலைகளில் பற்றாக்குறை நிலவுவதாகவும், அத்தகைய வேலைகள் இந்தியச் சந்தையில் உருவாக்கப்படவேண்டும் என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ரோசா ஆப்ரகாம்.

nkn270923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe