பா.பாபு, அகரம் -சென்னை-82
இந்தியாவில் 74 சதவிகித மக்கள் ஊட்டச்சத்துக் குறைவான உணவை உண்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது உண்மையா?
புதிய தலைமுறை ஜங் புட் எனப்படும் உணவுகளைச் சாப்பிடுவதில் அதிக அக்கறை காட்டுகிறது. இன்னொரு பக்கம் வறுமை காரணமாக சத்தான உணவுகளை வாங்கிச் சாப்பிட முடியா மல் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் தவிக்கிறது. இதைச் சீர்செய்ய, தனி நபர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும். அரசாங்கம் ஏழைகளின் வருவாய் ஆதாரத்துக்கு வழியேற்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவைச் சாப்பிட முடியாத நபர்கள் உலக அளவிலேயே 42.1 சத விகிதம் பேர் இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கும் அ.தி.மு.க.தான் அதற்குப் பலிகடா ஆகப்போகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி யுள்ளாரே?
ச

சேதாரம் அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்தியக் கட்சிகளுக்கும். தேர்தல் வந்தால் ஆதாயம் என யோசிக்காமல் நீண்ட கால நோக்கில் யோசிப்பது தான் ஒரு தலைவராக எடப்பாடி பழனிச் சாமிக்கு அழகு. கூட்டணிக் கட்சி என்பதால் எல்லாவற்றையும் ஆதரித்தாகவேண்டிய நிர்பந்தமில்லை.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
சீமானும் அண்ணாமலை யும் தேர்தலில் போட்டியிட் டால் சீமான் அதிக ஓட்டு வாங்குவார் என எஸ்.வி.சேகர் கூறுகிறாரே...?
அண்ணாமலை மீதான எரிச்சலும் கோபமும் சீமான் மீதான பரிவாக வெளிப்படுகிறது. இந்தப் போட்டியில் எஸ்.வி.சேக ரையும் சேர்த்துக்கொண்டால் அவர் எத்தனை ஓட்டு வாங்குவார் என அவரால் யூகிக்கமுடியுமா?
எஸ். அர்ஷத் , குடியாத்தம்.
பா.ஜ.க.வுடன் தனது கொள்கை ஒத்துப்போகவில்லை என்று கூறி விலகியுள்ளாரே நேதாஜியின் பேரன்.. சந்திரகுமார் போஸ்..?
பா.ஜ.க.வின் கொள்கை என்னவென்பது இந்தியாவில் பெரும்பாலோருக்கும் தெரியும். நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸுக்குத் தெரியாமல் போயி ருக்குமா? பதவி எதையாவது எதிர்பார்த்திருப்பார். அது கிடைக்காமல் போயிருக்கும். குட் பை சொல்வதற்கும் ஒரு காரணம் வேண்டுமல்லவா!
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
"அரசியலில் பொடிப் பையன் உதயநிதி' என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்து இருப்பது பற்றி?
இந்தியப் பிரதமரும் பா.ஜ.க.வின் பெருந்தலையுமான மோடி, ஒரு காலத்தில் ராகுலை பப்பு என்றார். தற்போது முருகன் அமைச்சர் உதயநிதியை பொடிப் பையன் என்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரத்தில் வீசிய குண்டின் பெயர் லிட்டில் பாய். பேச்சுவழக் கில் சொன்னால் பொடிப்பையன். பொடிப்பையன் என்ன விளைவு களை ஏற்படுத்தினான் என ஜப்பானியர்களை கேட்டுப் பாருங் கள் தெரியும்!
தே.மாதவன், கோயம்புத்தூர் 45
இந்தியாவுக்கும், பாரதத் துக்கும் உள்ள வேறுபாடு?
காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கு மான வேறுபாடுதான். திட்டக் குழு நிதி ஆயோக் ஆனது. நேரு அருங் காட்சியகம், பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகமானது. அலகாபாத் பிரக்யாராஜ் ஆனது. இந்தியா -பாரதமாகும் பாதையில் உள்ளது. பத்தாண்டு காலத்தில் என்ன செய்தீர்கள் என யாரும் பா.ஜ.க.வினரை கேட்டால், இப்படி வரிசையாக செய்த பெயர் மாற்றங் களைப் பட்டியலிட்டாலே ஏதோ செய்திருக்கிறார்கள் என பொது மக்களை நம்பச் செய்து விடலாம் அல்லவா!
ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்,
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சினை தி.மு.க. கூட்டணிக் கட்சி களே ஆதரிக்கவில்லை என்று, பா.ஜ.க. மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறாரே?
கூட்டணிக் கட்சிகள் என்றால் என்னவென்பதே வானதி சீனிவாசனுக்குத் தெரியவில்லை. கூட்டணிக் கட்சிகள் என்றால் ஒரு கட்சி பேசுவதையோ, ஏற்றுக்கொள் வதையோ மற்ற எல்லா கட்சி களும் பேசவோ ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ப தில்லை. ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை என்பதுதான் யதார்த்தம். ஆனால் அந்த ஐந்து விரல்களும் ஒரே கையில் இருக்கின்றன என்பதுதான் அதன் பலம். அந்தக் கட்சிகள் எதற்காக ஒன்று கூடியுள்ளன வோ, அதற்கான குறைந்த பட்ச செயல்திட்டத்தை வகுத்து அதில் ஒன்றுபட்டு தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவதுதான் தற் போதைய தேவை. தவிரவும், இந்தியா கூட்டணியில் இருக் கும் பல கட்சிகள் வட இந்தியாவைக் களமாகக் கொண்டவை. அவை உதயநிதி யின் பேச்சு தமக்கு விழப்போ கும் ஓட்டுக்களுக்கு சேதா ரத்தை ஏற்படுத்திவிடக்கூடா தென நினைக்கின்றன. இப் போது பா.ஜ.க. இந்த விவகா ரத்தை இத்தனை அழுத்திக் கூவுவதும் சனாதனத்துக்கு சேதாரம் என்பதால் அல்ல… தங்களின் ஆர்ப்பாட்டம், அலப்பறையால் கூட்டணிக்கு இடைஞ்சல் வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பால்தான்.