க. மணிகண்டன், வேலூர்
பிரதமர் மோடியின் கடுமையான முயற்சியால் ஜி-20-க்கு தலைமையேற்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்ற ஆளுநர் தமிழிசையின் கருத்து?
ஜி-20 குழுவில் 19 நாடுகளும் ஐந்து குழுக்களும் உள்ளன. ஒவ்வொரு உச்சி மாநாட்டுக்கும் தலைவர் பொறுப்பு ஒவ்வொரு குழுவுக்குக் கிடைக்கும். இந்தியா இடம்பெற்றுள்ள குழுவின் முறை வரும்போது மற்ற 3 நாடுகளையும் ஒப்புக்கொள்ளவைத்தால் இந்திய பிரதமருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்கும். இந்தியா இடம்பெற்றுள்ள குழுவிலுள்ள ரஷ்யாவுக்கும், துருக்கிக்கும் ஏற்கெனவே தலைமை வாய்ப்பு கிடைத்துவிட்டது. அதனால் இந்த முறை தென்னாப்பிரிக்காவை சமாதானப்படுத்தி இந்தியா தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றிவிட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு 2025-ல் வாய்ப்புக் கிடைக்குமென யூகிக்கப்படுகிறது. இந்தியாவைத் தவிர மற்ற 17 நாட்டு பிரதமர்களும், அதிபர்களும் ஏற்கெனவே ஜி-20 உச
க. மணிகண்டன், வேலூர்
பிரதமர் மோடியின் கடுமையான முயற்சியால் ஜி-20-க்கு தலைமையேற்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்ற ஆளுநர் தமிழிசையின் கருத்து?
ஜி-20 குழுவில் 19 நாடுகளும் ஐந்து குழுக்களும் உள்ளன. ஒவ்வொரு உச்சி மாநாட்டுக்கும் தலைவர் பொறுப்பு ஒவ்வொரு குழுவுக்குக் கிடைக்கும். இந்தியா இடம்பெற்றுள்ள குழுவின் முறை வரும்போது மற்ற 3 நாடுகளையும் ஒப்புக்கொள்ளவைத்தால் இந்திய பிரதமருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்கும். இந்தியா இடம்பெற்றுள்ள குழுவிலுள்ள ரஷ்யாவுக்கும், துருக்கிக்கும் ஏற்கெனவே தலைமை வாய்ப்பு கிடைத்துவிட்டது. அதனால் இந்த முறை தென்னாப்பிரிக்காவை சமாதானப்படுத்தி இந்தியா தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றிவிட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு 2025-ல் வாய்ப்புக் கிடைக்குமென யூகிக்கப்படுகிறது. இந்தியாவைத் தவிர மற்ற 17 நாட்டு பிரதமர்களும், அதிபர்களும் ஏற்கெனவே ஜி-20 உச்சிமாநாட்டுக்கு தலைமை வகித்துவிட்டார்கள். இயல்பாகவே தலைமை வகிக்காத இந்தியாவுக்கு வாய்ப்பு வந்ததில் என்ன ஆச்சர்யம்? இதில் என்ன கடுமையான முயற்சி தேவையிருக்கிறது?
தா.விநாயகம், ராணிப்பேட்டை.
பா.ஜ.க.வுக்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்றமுடியாது என்று ஸ்டாலின் கூறி யிருப்பதைப் பற்றி?
இதையெல்லாம் தடுக்கத்தானே எதிர்க்கட்சிகள். இந்தியா கூட்டணியின் செயல்திறனையும் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான முதல்வர் ஸ்டாலினின் துடிப்பையும் தேர்தலில் பார்ப்போம்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
தூக்குத் தண்டனைக்கான இறுதி அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் இருக்கக்கூடாது என்ற ராமதாஸின் வலியுறுத்தல்...?
சரிதான், குடியரசுத் தலைவரின் இறுதி அதிகாரம் என்பது பெரும்பாலும் ஆளுங்கட்சியின் அல்லது பிரதமரின் இறுதி அதிகாரமாகத்தான் இருக்கும். குடியரசுத் தலைவரிடம் இருக்கவேண்டும் என்பதைவிட அந்த இறுதி அதிகாரம் நீதிமன்றத்திடம் இருக்கக்கூடாது என்பதுதான் பா.ஜ.க.வின் மறைமுக விருப்பம்.
சுகன்யா, கோவில்பட்டி
ராம ராஜ்ஜியத்தில் அப்படி என்ன சிறப்பு?
அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ராமர் மீதே வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்திருக்கிற விவரம் தெரியும். வட பீகாரைச் சேர்ந்த சிதார்மதி நீதிமன்றத்தில் தாக்கூர் சந்தன்குமார் சிங் எனும் வழக்கறிஞர் கொடுத்துள்ள அந்தப் புகாரில், நான் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவதற்காக இந்த வழக்கைத் தொடுக்கவில்லை. பாம்பும் கொடும் மிருகங்களும் வாழும் காட்டுக்கு, கட்டிய மனைவியை எப்படி வனவாசம் அனுப்பலாம்? புனித நெருப்பின் முன், சாகும் வரை தன் கணவன் ராமனுடன் வாழ்வதாக சீதை சத்தியம் செய்தபிறகும் அனுப்பலாமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். அடுத்த வருடம் பிப்ரவரி 1-ஆம் தேதி வழக்கை எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்திருக்கிறாராம்.
எஸ். இராமதாஸ், வாணரப்பேட்டை, புதுச்சேரி
2024 தேர்த லுக்குப் பிறகு நாம் தமிழர் என்ற கட்சி இருக்காது என்று அண்ணாமலை கூறியிருப்பது பற்றி...?
ஒருவேளை, எதற்கும் இருக்கட்டும்… எதிர்காலத்துக்குப் பயன்படும் என்று அண்ணாமலை ஜோதிடம் பழகுகிறார்போல. ஜோதிடத்தையாவது ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருக்கிறாரா என்று 2024 தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம்.
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி
காங்கிரஸ் அரசு ஏழைகளின் அரசாக இருக்கும்… "அதானியின் அரசாக இருக்காது' என்கிறாரே ராகுல்?
இதற்கு முன்பும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போதும் வறுமைக்கோடும், அதற்குக்கீழும் வாழ்ந்த மக்கள் இருந்தார்கள். தேர்தல் நெருக்கத்தில் வரும்போது தலைவர்கள் ஆயிரத்தி ஒன்றும் பேசுவார்கள். 2014 தேர்தலின் போது ஒரு பிரச்சாரத்தில்தான் கறுப்புப் பணத்தை மீட்டால் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் லட்சங்களைப் போடுவேன் என்று மோடி பேசினார். இப்போது 2014 தேர்தல் அறிக்கையில் அப்படியெல்லாம் குறிப்பிட வில்லையென்று மோடியும் பா.ஜ.க.வினரும் நழுவுகிறார்கள்.
ப. வினோத், வீரவநல்லூர்
லேட்டஸ்ட் நாயகிகளில் மாவலியின் மனங் கவர்ந்தவர்?
சார்பட்டா பரம்பரை துஷாரா விஜயனும், பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா லெட்சுமியும்.
கிறிஸ்டினாபிரபு, சைதாப்பேட்டை மேற்கு.
பொய்யை எந்த அளவுக்கு அனுமதிக்க லாம்?…எந்த அளவுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது?
இதற்கெல்லாம் கமிட்டி போட்டு ஆராயவா முடியும்? வள்ளுவர் சொன்னதுபோல் குற்றமில்லாத நன்மை பயக்குமெனில் அனுமதியுங்கள். "உனக்கு விடைதெரிந்தும் பதில் சொல்லாவிட்டால் தலை சுக்குநூறாக உடைந்துவிடும்' என வேதாளம், விக்ரமாதித்யனிடம் சொல்வதுபோல், உண்மை சொல்ல வாய்ப்பிருந்தும் பொய்சொன்னால் உங்கள் தலை சுக்குநூறாக உடைந்துவிடும் என யாராவது சாபம்விட்டால்தான் நம்மில் பலர் பொய் சொல்லப் பயப்படுவோம்!