வாசுதேவன், பெங்களூரு

நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷிய விண்கலம்?

mmmm

நிலவைக் குறித்து நாம் இப்போதுதான் அக்கறை செலுத்துகிறோம். ஆனால் வல்லரசுப் போட்டியில் இறங்கிய காலத்திலேயே நிலாவை ஆராய்வது குறித்த போட்டி அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடங்கி விட்டது. ரஷ்யாவின் லூனா-2தான் நிலவுக்குச் சென்ற முதல் விண்கலம். அதேபோல விண்கலத்தில் நாயை வைத்து அனுப்பி நிலவுக்கு முதன்முதலாக விலங்கை அனுப்பியதிலும் பெயர் தட்டிச்சென்றது. உத்வேகம் கொண்ட அமெரிக்கா அப்போலா 11 விண்கலத்தை அனுப்ப, அதில் பயணம் செய்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் நிலவில் காலையும் சரித்திரத்தில் தன் புகழையும் பதித்தார். இந்த வரிசையில் வெகுநாட்களுக் குப் பிறகு நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய விண்கலமான லூனா-25 நிலவின் துரு வப் பகுதிகளை ஆய்வு செய்யப்போய், எதிர் பாராதவிதமாக தரை யிறங்கும்போது மோதி நொறுங்கியிருக்கிறது. அதற்காக, ஒரேயொரு தோல்விக்காக ரஷ்யாவை இளக்காரமாகப் பார்க்கவேண்டியதில்லை.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

கோயில் அருகே சர்ச் கட்டினால் மத நல்லிணக்கம் ஏற்படும் என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து பற்றி?

தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே தனியார் ஒருவர் தேவாலயம் கட்டப்போக, ஊர்காத்த சாமி கோவில் அருகே இருக்கிறது. அங்கே தேவாலயம் கட்டக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் அந்த ஊர்க்காரர் ஒருவர். அந்த வழக்கில்தான், இங்கே அனைவருக்கும் அனைத்து உரிமையும் உண்டு. கோவில் அருகே தேவா லயம் கட்டினால் மதநல்லிணக்கமே ஏற்படும். வேறெந்தப் பிரச்சனையும் வராது என நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். முதலில் கோவில் அருகில் தேவாலயம் கட்டக்கூடாது என்பார்கள். பின்பு இந்துக்கள் குடியிருப் புக்கு அருகில் பிற மதத்தவர்கள் வசிக்கக்கூடாது என வருவார்கள். பின்பு உயர்சாதியினருக்கு அருகில் பிற சாதியினர் குடியிருக்கக்கூடாது என்பார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுதான் நம் முன் னோர் கண்ட நீதி. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை மறந்தால்… அப்பனும் பிள்ளைகளும்கூட அடித்துக்கொண்டு நிற்கவேண்டியதுதான்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற 16 தெலுங்கு மாணவர்கள் விசா நடைமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை எனக்கூறி அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளதே அமெரிக்க குடியேற்றப் பிரிவு?

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவு சிறப்பாகவே இருக்கிறது. எனவே அவர்கள் அரசியல் காரணங்களுக்காகத் திருப்பி யனுப்பப்பட்டிருக்க மாட்டார்கள். அமெரிக்க அரசின் குடியேற்ற அதிகாரிகளின் தகவல்படி அந்த மாணவர்களின் விசாவிலும், அங்கே படிப்பதற்காக அளிக்கவேண்டிய ஆவணங்களிலும் முறைகேடுகள் இருப்பதாகத் தெரிகிறது என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை, படிப்பதற்காக அமெரிக்கா அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்த நபர்கள் ஏதாவது தவறுகள் செய்திருக்கவேண்டும். படிப்பதற்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள் சரியான நபர்களை அணுகி, சரியான வழியில் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையென்றால் இதுபோல அதிர்ச்சிகரமான விளைவுகள்தான் ஏற்படும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை

சீன லைட்டர்களுக்கு மத்திய அரசு விதித்த தடையால் தீப்பெட்டித் தொழில் புத்துணர்வு பெற்றுள்ளது என்று அண்ணாமலை பேசியிருப்பது பற்றி?

ஏற்கெனவே தீப்பெட்டித் தொழிலில் இருப்பவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சீன லைட்டர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதற்காக, இங்கே தடைவிதித்த ஒரு மாதத்தில் அவர்கள் வாழ்க்கை புத்துணர்வு பெற்றுள்ளது என்ப தெல்லாம் ஓவரோ ஓவர். ஏற்கெனவே குறைந்த விலை லைட்டரால் ஆதாயம் பார்த்துக்கொண்டி ருந்தவர்கள், இந்தத் தடை யால் திருட்டுத்தனமாக அத்த கைய லைட்டர்களை இந்தியா வுக்குள் கொண்டுவந்து தங்கள் நட்டத்தைத் தடுக்கத்தான் பார்ப்பார்கள். தவிரவும், ஒரு தொழில் நசிகிறதென்றால் அதற்கு வரிவிலக்கு, மானியம், மூலப்பொருள் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்தல் என அத்தொழிலை வளப்படுத்த பல வழிகள் இருக்கிறது. அந்த வழிவகைகளையும் ஒன்றிய அரசு பரிசீலிக்கவேண்டும்.

கோபாலகிருஷ்ணன், ராஜபாளையம்

சாயா,… டீ, தேநீர்… மாவலியாரின் சாய்ஸ் எது?

Advertisment

mm

பெயரில் என்ன இருக் கிறது. கொடுக்கிற திரவம் சூடாய், சுறுசுறுப்பாக்குவ தாய், களைப்பைப் போக்குவ தாய் இருந்தால் சரி!