Advertisment

மாவலி பதில்கள்

ss

வாசுதேவன், பெங்களூரு

சீனாவில் இரண்டு மணி நேரம் மட்டுமே சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தலாமாமே?

Advertisment

இளம் தலைமுறையினர் இணையத்துக்கு அடிமையாவதிலிருந்து காக்க சீனாவின் சைபர்பேஸ் அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கி யுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்த முடியாது. பகலிலும் 16 முதல் 18 வயது வரையிலானவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பயன்படுத்தலாம். அதற்கும் குறைவான வயதுடையவர்கள் 1 மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தமுடியும். ஏற்கெனவே அமெரிக்காவில் சிறுவர்கள் இணையம் பயன்படுத்த கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. இப்போது சீனாவில். இந்தியாவிலும்கூட இளைய தலைமுறையினரின் நலனைக் கருத்தில்கொண்டு சில வரன்முறைப்படுத்தல்களை அரசோ, பெற்றோரோ மேற்கொள்ளலாம். சிறுவயதிலேயே மொபைல்போன

வாசுதேவன், பெங்களூரு

சீனாவில் இரண்டு மணி நேரம் மட்டுமே சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தலாமாமே?

Advertisment

இளம் தலைமுறையினர் இணையத்துக்கு அடிமையாவதிலிருந்து காக்க சீனாவின் சைபர்பேஸ் அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கி யுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்த முடியாது. பகலிலும் 16 முதல் 18 வயது வரையிலானவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பயன்படுத்தலாம். அதற்கும் குறைவான வயதுடையவர்கள் 1 மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தமுடியும். ஏற்கெனவே அமெரிக்காவில் சிறுவர்கள் இணையம் பயன்படுத்த கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. இப்போது சீனாவில். இந்தியாவிலும்கூட இளைய தலைமுறையினரின் நலனைக் கருத்தில்கொண்டு சில வரன்முறைப்படுத்தல்களை அரசோ, பெற்றோரோ மேற்கொள்ளலாம். சிறுவயதிலேயே மொபைல்போனுக்கு அடிமையானவர்களின் மூளைவளர்ச்சி பாதிக்கப்படுகிறது என சில ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

Advertisment

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் , தேனி

"கண்ணியத்துடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்துகொள்ளும் வரை லோக்சபாவுக்குள் வரமாட்டேன்'' என்று சபாநாயகர் ஓம்பிர்லா சபதம் செய்துள்ளது பற்றி?

நாடாளுமன்றம் மக்களின் பிரச்சனைகளை விவாதிக்கும் இடம். சமீபகாலமாக, நாடாளு மன்றத்தில் மசோதாக்களே சரிவர விவாதிக் கப்படாமல் நிறைவேற்றப்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுகின்றன. எதிர்க்கட்சிகளின் முறையீடுகளை, கோரிக்கைகளை ஆளும் கட்சி கண்ணியத்துடன் அனுமதித்தால் எதிர்க்கட்சி யினரும் கண்ணியத்துடன் அமர்ந்து விவாதிக்கப்போகிறார்கள். நிர்தாட்சண்யமாக எல்லாவற்றையும் மறுக்கும்போது குரல்கள் உயரத்தான் செய்யும். அமளி நடக்கும். எதிர்ப்புகள் எழத்தான் செய்யும்.

தே.மாதவராஜ், இராமநாதபுரம்

உ.பி. ஞானவாபி யில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பயமாக இருக்கிறதே?

சிறு பொறியையும் ஊதிப் பெருந்தழலாக்க லாம். ஊரையே எரிக்கிற நெருப்பையும் அடக்கி அணைக்கலாம். அது நெருப்பைக் கையாள்கிற இடத்தில் இருப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது. இந்தத் தேர்தலுக்கு கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழா வைபவம் போதுமென்பதால், புதிய நெருப்புகளைக் கொளுத்தமாட்டார்கள் என எதிர்பார்க்கலாம்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

"நாடாளுமன்றத்தில் அமைதியாக இருங்கள், இல்லையேல் உங்கள் வீட்டிற்கு ரெய்டு வரும்...' என்று எம்.பி. ஒருவரை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி எச்சரித்துள்ளாரே..?

ஜோக்கடிப்பதாக நினைத்து உண்மையைப் பேசினாரா… அல்லது ஜோக்கடிக்கும் தொனியில் எதிர்க்கட்சியினரை மிரட்டினாரா என்பது மீனாட்சி லேகிக்கே வெளிச்சம். ஆனால் ஏற்கெனவே பெயர் கெட்டுப்போயிருக்கும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மேல் சேற்றை வாரித் தெளித்திருக்கிறார் மீனாட்சி லேகி.

ஜே. ஜான்டேவிட், மடிப்பாக்கம்

ராகுல்காந்திக்கு குஜராத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித் திருப்பது குறித்து?

பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கக்கூடியதாக அமைந்திருந்தாலும், ஆதார் உள்ளிட்ட வழக்குகளில் ஏமாற்றமளித்ததும் உண்டு. தவிரவும், உச்சநீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடைதான் விதித்திருக்கிறது. வழக்கை விசாரித்து அது தீர்ப்பை அளிக்கும்போது மட்டுமே ராகுலும், அவர் ஆதரவாளர்களும் வெற்றிப்பெருமிதம் கொள்ளமுடியும். அதுவரை அடக்கிவாசிப்பதே நல்லது.

mm

பிரமிளாஜவஹர், திருச்சி

ஆங் சான் சூகியின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது பற்றி?

இது தண்டனைக் குறைப்பில்லை... பரிகாசம். தேர்தலில் வெற்றிபெற்ற ஆங்சான் சூகியின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல், அவர் மேல் ராணு வத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். அவ ருக்கு ராணுவம் விதித்த தண்டனை 33 ஆண்டுகள். ஆங் சான் சூகியின் தற்போதைய வயது 78. புத்தர் மியான்மரில் போதனை செய்த தினம் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும். அப்போது குற்றவாளிகளுக்கு தண்டனைக் குறைப்புகள் செய்யப்படும். அப்படி ஆங் சான் சூகியை ஒரு குற்றவாளியைப் போலக் கருதி, ராணுவ கவுன்சிலின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் அவரது தண்டனையில் ஆறு ஆண்டுகள் குறைத்துள்ளார். அதாவது 33-லிருந்து 27 ஆண்டுகளாக. இதில் இரண்டாண்டுகள் ஏற்கெனவே கழிந்ததாக வைத்துக்கொண்டா லும் இன்னும் 25 ஆண்டுகள், அதாவது ஆங் சான் சூகி அவரது 103 வயது வரை சிறையிலிருக்கவேண்டும்.

nkn090823
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe