Advertisment

மாவலி பதில்கள்

mm

க.ஐயப்பன், புளியரை

இந்தியா என்ற சொல் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டது... எனும் ஆளுநரின் கருத்து குறித்து?

Advertisment

ஐரோப்பியர்களான ஆங்கிலேயர் நமக்கு அளித்ததையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் நமது அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவின் இருப்புப் பாதைகள், பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கான சாலை வசதிகள், கட்டுக்கோப்பான ராணுவ அமைப்பு என பலவற்றையும் கைவிடவேண்டியிருக்கும். அதுபோக ஐரோப்பியக் கண்டுபிடிப்புகளையும் புறக்கணித்தால் தொழிற்புரட்சிக்கு முந்தைய இருள் யுகத்தில் உட்காரவேண்டியிருக்கும். ஏனெனில் மின்சாரமும் ஒரு ஐரோப்பியக் கண்டுபிடிப்புதான். கிழக்கிந்திய கம்பெனியின்கீழ் வருவ தற்கு முன் ஆயிரத்தொரு சிற்றரசு களாக இந்தியா பிரிந்து கிடந்தது. ஒருங் கிணைந்த இந்தியா வே ஒரு ஐரோப்பியப் பரிசுதான்.

Advertisment

த.சத்தியநா

க.ஐயப்பன், புளியரை

இந்தியா என்ற சொல் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டது... எனும் ஆளுநரின் கருத்து குறித்து?

Advertisment

ஐரோப்பியர்களான ஆங்கிலேயர் நமக்கு அளித்ததையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் நமது அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவின் இருப்புப் பாதைகள், பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கான சாலை வசதிகள், கட்டுக்கோப்பான ராணுவ அமைப்பு என பலவற்றையும் கைவிடவேண்டியிருக்கும். அதுபோக ஐரோப்பியக் கண்டுபிடிப்புகளையும் புறக்கணித்தால் தொழிற்புரட்சிக்கு முந்தைய இருள் யுகத்தில் உட்காரவேண்டியிருக்கும். ஏனெனில் மின்சாரமும் ஒரு ஐரோப்பியக் கண்டுபிடிப்புதான். கிழக்கிந்திய கம்பெனியின்கீழ் வருவ தற்கு முன் ஆயிரத்தொரு சிற்றரசு களாக இந்தியா பிரிந்து கிடந்தது. ஒருங் கிணைந்த இந்தியா வே ஒரு ஐரோப்பியப் பரிசுதான்.

Advertisment

த.சத்தியநாராயணன், அயன்புரம்

ஜுஜுபி என்றால் என்னா அர்த்தம் வாத்யாரே...

ஒரு சிறிய வட்டமான இலந்தை வகைப் பழம்தான் ஜுஜுபி என்கிறது ஆங்கில அகராதி. 'ஜுஜுபி... இதென்ன பெரிய விஷயம்' என ஜம்பமாகப் பேசுவதை வைத்து முடிவெடுத் தால், ரொம்ப எளிதாகச் செய்து முடிக்கக்கூடிய விஷயம் எனப் பொருள். உலகமெங்கும் பகட்டு அரசியல் செய்யக்கூடிய அரசியல் வாதிகள் உடல்மொழியில் வெளிப்படக்கூடிய அலட்டல் இருக்கிறதே, அதுதான் ஜுஜுபி.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்வதற்கு "பெண் பாருங்கள்' என்று சோனியா காந்தி ஹரியானா விவசாயப் பெண்களிடம் கோரிக்கை வைத்துள்ளது பற்றி..?

mm

இனி ராகுல் திருமணம் செய்வாரா... மாட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், ராகுலுக்குப் பெண் பாருங்கள் என விவசாயப் பெண்களை அழைக்கும்போது, என்னவோ ராகுல் அவர்களுக்கு மகன்போல வும், அந்த ஏழை விவசாயப் பெண்கள் அவருக்குத் தாய்போல வும் ஆகிவிடுகிறார்கள் அல்லவா! அந்த நெகிழ்வே தேர்தல் வரும்போது காங்கிரஸுக்கு வாக்களிக்க உத்தரவாதமளிக்கும் என்ற நம்பிக்கைதான்.

க.செந்தில்வேலவன், கடையநல்லூர்

பாகிஸ்தானின் பக்துன்வா மாகாணத்தில் அரசியல் கட்சிக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழந் திருப்பது பற்றி?…

இந்த குண்டுவெடிப்புக் கான பொறுப்பை ஐ.எஸ். அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இறந்த 54 பேரில் 20 பேர் வரை சிறுவர்களும் குழந்தைகளும். இன்னும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப் பவர்கள் பலர். பாகிஸ்தானில் மட்டும் 44 தீவிரவாத அமைப்பு கள் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஒரு பட்டியல் கூறுகிறது. வழிபாட்டுத் தலங் களைத் தாண்டி, அரசியலிலும் வாழ்க்கையிலும் மதம் நுழையும் போது ஒரு நாட்டுக்கு என்ன வாகும் என்பதற்கு பாகிஸ்தானும் ஒரு உதாரணம்!

த.குணா, திருப்பூர்.

ஜெய்ப்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸில் நான்கு பேரை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படைவீரர் சேத்தன்சிங், தான் சுட்டுக்கொன்றவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னாராமே?…

அதுமட்டுமா சொன்னார், இந்தியாவில் வாழவிரும்புபவர் கள் மோடி, யோகிக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் என்றும் பேசியுள்ளார். சேத்தன்சிங் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களைத் தான் ரயில்வே பயணிகளின் பாது காப்புக்கு அனுப்புகிறதா அரசு? அல்லது சம்பவம் நிகழ்ந்துவிட் டது மோடி, யோகி பெயரைச் சொல்லிவிட்டு, அப்படியே பைத்தியக்கார வேஷம் கட்டி னால் தப்பித்துவிடலாம் என திட்டமிட்டுச் செயல்பட்டாரா சேத்தன்சிங் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

ப. அஜீத், ஈரோடு.

சர்ப்ரைஸான ஒரு நியூஸ் சொல்லுங்களேன்?

mm

வட இந்தியாவைச் சேர்ந்த தக்சீன்கான் நல்ல அழகி. மிஸ் இந்தியாவாக ஆவது என்ற லட்சியத்தில் இருந்தார். மிஸ் டேராடூன், மிஸ் உத்தரகாண்ட் பட்டங்கள் எல்லாம் அவருக்கு வாய்த்தன. சினிமா கனவில் இருந் தவரிடம், அவரது இன்ஸ்டா கிராம் பாலோயர் ஒருவர் ஐ.ஏ.எஸ். ஆர்வத்தை ஏற்படுத்தி னார். நாம் ஏன் இந்திய சேவைப் பணித் துறையில் ஒரு வேலைக்கு முயலக்கூடாது என. அழகி ஆசையை ஓரம் கட்டிவிட்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு ஆயத்த மானார். படிப்பில் ஆவரேஜான தக்சீன் எடுத்த எடுப்பிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. மூன்றாவது முயற்சியில் இந்திய அளவில் 736-வது இடம்பிடித்து இந்திய ஆட்சிப் பணியாளராக வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு அழகி ஐ.ஏ.எஸ்.ஸான கதை ஆச்சர்யமூட்டக்கூடியதுதான் இல்லையா!

nkn050823
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe