நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

தாராவி பகுதியைப் புதுப்பிக்க மகாராஷ்டிர அரசு அதானியுடன் 6500 கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருப்பது பற்றி?

Advertisment

இந்தியாவில் மிகப்பெரிய திட்டங்களுக்கு நாலைந்து நிறுவனங்களுக்கு மட்டும்தான் தகுதி யிருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. அதில் பிர தான இடம் அதானி நிறுவனத்துக்கு. இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஏற்கெனவே மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டேவுக்கும் துணை முதல்வர் பட்னாவிஸுக்கும் கருத்து வேறுபாடு நிலவியது. ஏற்கெனவே வேறு ஒரு நிறுவனத்துக்கு தாராவி புனர்நிர்மாணத் திட்டம் ஒதுக்கப்பட்டது. பின் இவர்களுக்கு இடையிலான சண்டையால் அது ரத்து செய்யப்பட்டு உனக்கும் வேண்டாம்.... அவருக்கும் வேண்டாம்... பிரதமரின் நண்பரான அதானிக்குக் கொடுங்க என மத்தியஸ் தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

mm

தே.மாதவன், கோயமுத்தூர்-45

எதிர்க்கட்சிகள் கூட்டணியில் தெலுங்கானா, ஆந்திர முதல்வர்கள் சேராதது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறதே?

ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கெனவே பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இல்லாதபோதும் பா.ஜ.க.வுக்கு முக்கிய விஷயங்களில் ஆதர வளித்தவர். அவரது கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உருவாவதற்கு முன் காங்கிரஸில் இருந்தவர். எனவே காங்கிரஸ் இருக்கும் பக்கம் மாற தயக்கமிருக்கலாம். தெலுங் கானாவின் சந்திரசேகரராவும் பா.ஜ.க.வுடன் கூட் டணியில் இருந்தவர்தான். தன் கட்சியை அகில இந்தியக் கட்சியாக பெயர் மாற்றி தேசியத் தலைவராகும் கனவில் இருக்கிறார். உண்மையில் பா.ஜ., தனது கட்சியைத் தவிர வேறு கட்சிகளே இந்தியாவுக்குத் தேவையில்லை என நினைக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்து எதிர்க்கட்சி கள் ஒன்றுதிரண்டிருக்கின்றன. புரியாத கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணியிலும், தனித்தும் நிற்கின்றன.

வாசுதேவன், பெங்களூரு

சமீபத்திய சலிப்பு?

தமிழ்நாட்டில் 35 மருத்துவமனைகளில் இணையதளம் மற்றும் செல்போனுக்கு அடிமை யானவர்களுக்கான மீட்பு மையம் தொடங் கப்பட்டுள்ளதாம். இதில் 20,000 குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு 5000 குழந்தைகள் குணமாகி வீடு திரும்பியுள்ள னர். மது மறுவாழ்வு மையம்போல எதிர்காலத்தில், செல்போன் மறுவாழ்வு மையங்கள் அதிகளவில் தொடங்கவேண்டி வரும்போல. செல்போனைக் கண்டறிந்தவரான மார்ட்டின் கூப்பர், "தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என பார்க்காமல் செல்போனைப் பார்த்தபடியே நடப்பவர்களைப் பார்த்து வேதனை அடைந்துள்ளேன்' என்று கூறியுள்ளார். குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகும் நாடுகளின் ஒரு பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் முதல் இடத்தில் பிலிப் பைன்ஸும், 16-வது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. எது வரமோ... அதுவே சாபமும் என்பதை நினைத்தபோது ஒரு இனம்தெரியாத சலிப்பு ஏற்பட்டது.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

ரஜினி போல, விஜய்யும் தன் படம் வெளியாகும் போது அரசியல் பேச்சைக் கையிலெடுக்கிறாரே...

ரஜினி போல அரசியலுக்கு வருவதாக போக்குக் காட்டியே தன் படங்களை ஓடவைத்துவிட்டு, ரசிகர்களை அம்போ என விட்டுவிடுவாரா என கேட்க வருகிறீர்களா!

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"எங்கள் மடியில் கனமில்லை... வழியில் பயமில்லை. நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டியது இல்லை" என்கிறாரே எடப்பாடி?

மடியில் கனமிருக்கிறதா... இல்லையா என்பதை எடப்பாடி வசமே விட்டுவிடலாம். தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. எதிர்க்கட்சி யாகச் செயல்பட்டு ஸ்கோர் செய்துகொண்டிருப்பது அ.தி.மு.க.வா... பா.ஜ.க.வா? முதல்வர் பதவி எடப்பாடி கையில் வந்துசேர்ந்தது அதிர்ஷ்டம். உரிய முறையில் அரசியல் செய்து இன்னொரு முறை தேர்தல் களத்தில் வெற்றிபெற்றால்தான் அது எடப்பாடியின் வெற்றி! அதைச் செய்யவிடாமல் அச்சுறுத்துவது எது என்பதுதான் தமிழக வாக்காளர்களின் கேள்வி.

பா. சங்கர், உளுந்தூர்பேட்டை

ஒரு அரசியல் ஜோக் ப்ளீஸ்?

ஒரு கூட்டமொன்றின்போது ட்ரம்பின் அருகிலிருந்த போப், அவரது காதில் ஒரு பந்த யத்துக்கு அழைப்புவிடுத்தார். “நான் கையை ஒருமுறை அசைத்தால் இந்தக் கூட்டத்தை தாங்கமுடியாத சந்தோஷத்துக்கும் அதிர்ச்சிக் கும் உட்படுத்த முடியும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் 100 டாலர் பந்தயம் கட்டுங்கள்” கையை ஒருமுறை அசைத்து, இந்தக் கூட்டத்தை சந்தோஷத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்க முடியுமா? பந்தயத்துக்கு நான் தயார். எங்கே செய்துகாட்டுங்கள்.” போப், ட்ரம்பின் கன்னத்தில் பளாரென அறைந்தார். அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி யில் கத்த, எதிரணியினர் சந்தோஷத்தில் கூச்சலிட்டனர்.