தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
ஜூலை 28-ல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாத யாத்திரையை அமித்ஷா துவக்கி வைக்கிறாராமே?
பா.ஜ.க. பொதுவெளியில் பிரதான கட்சியாக வளர்ந்ததன் பின்னணியில் யாத்திரைகளுக்கு முக்கிய இடம் உண்டு. ராமர் கோவில் கட்டுவதற்காக ரத யாத்திரை நடத்தியதன் மூலமே அத்வானியின் பிம்பம் பெரிய அளவுக்கு வளர்ச்சியடைந்தது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்பெஷாலிட்டியே மிகப்பெரிய ஊர்வலங்கள், யாத்திரைகளை குஜராத்தில் நூற்றுக்கணக்கில் நடத்தியதுதான். இயல்பாகவே பேரணியும், ஊர்வலங்களும் பொதுஜனங்களை திரும்பிப் பார்க்கவைப்பது. ஏற்கெனவே வேலை வைத்து அன்றைய பா.ஜ.க. தலைவர் முருகன் யாத்திரை தொடங்கி, தமிழக மக்களை ஈர்க்க நினைத்து ஏமாந்தார். இப்போது அண்ணாமலை பாதயாத்திரை வலையை விரித்துள்ளார்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
ரூ. 15 இலட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
ஜூலை 28-ல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாத யாத்திரையை அமித்ஷா துவக்கி வைக்கிறாராமே?
பா.ஜ.க. பொதுவெளியில் பிரதான கட்சியாக வளர்ந்ததன் பின்னணியில் யாத்திரைகளுக்கு முக்கிய இடம் உண்டு. ராமர் கோவில் கட்டுவதற்காக ரத யாத்திரை நடத்தியதன் மூலமே அத்வானியின் பிம்பம் பெரிய அளவுக்கு வளர்ச்சியடைந்தது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்பெஷாலிட்டியே மிகப்பெரிய ஊர்வலங்கள், யாத்திரைகளை குஜராத்தில் நூற்றுக்கணக்கில் நடத்தியதுதான். இயல்பாகவே பேரணியும், ஊர்வலங்களும் பொதுஜனங்களை திரும்பிப் பார்க்கவைப்பது. ஏற்கெனவே வேலை வைத்து அன்றைய பா.ஜ.க. தலைவர் முருகன் யாத்திரை தொடங்கி, தமிழக மக்களை ஈர்க்க நினைத்து ஏமாந்தார். இப்போது அண்ணாமலை பாதயாத்திரை வலையை விரித்துள்ளார்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
ரூ. 15 இலட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடவேண்டும்; இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறாரே வானதி சீனிவாசன்..?
மோடியோ, பா.ஜ.க.வோ மக்களுக்கு ரூ.15 லட்சம் தருவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வில்லை. ஆனால் 2013-ல், சத்தீஷ்கர் மாநிலம் கான்கரில் மோடி உரையாற்றியபோது, “என் உயிரினும் மேலான சகோதர- சகோதரிகளே, நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கறுப்புப் பணம் திரும்ப வரணுமா இல்லையா? அயல்நாட்டு வங்கிகளில் நம்மிடமிருந்து கொள்ளையடித்து பதுக்கப்பட்டிருக்கும் பணம் திரும்பக் கொண்டு வரப்பட்டால், இந்தியாவின் ஏழை மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சுலபமா 15--ருந்து 20 லட்சம் பணம் கிடைக்கும்” எனப் பேசினார். போதாததற்கு டிசம்பர் 18, 2018-ல் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "அந்த பதினைந்து இலட்சம் மக்களுக்குக் கிடைக்கும். ஆனால் ஒரே முறையில் அல்ல. மெதுவாக. அரசிடம் அவ்வளவு பணம் இல்லை. ரிசர்வ் வங்கியிடம் அரசு கேட்டிருக்கிறது'’என விவரமில்லாமல் லூஸ்டாக் விட்டுவிட்டார். பணமதிப்பிழப்பின் பிரதான நோக்கமாக பிரதமர் குறிப்பிட்டது கறுப்புப் பணத்தைக் வெளிக்கொண்டுவருவதுதான். தவிரவும் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டுவராததாக காங்கிரஸைக் குற்றம்சாட்டியவரே பிரதமராகி எட்டாண்டுகள் கடந்துவிட்டது. அதைக் கொண்டுவருவதும் மோடியின் கடப் பாடுதான். ஆக, இந்த மூன்றையும் இணைத்து கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவந்து, மக்களின் கணக்கில் 15 லட்சத்தைச் சேர்ப்பதுதானே பிரதமரின் சரியான அணுகுமுறையாயிருக்கும். அல்லது அன்றைய பேச்சு ஓட்டுக்காக பேசியதே தவிர.. உளப் பூர்வமாக பேசியதல்ல என மோடி தெளிவுபடுத்தவேண்டும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"ரஷ்யாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு சீனாவின் நாணயமான "யுவானில்' ஒன்றிய அரசு வழங்குவது ஏன் என்று காங். செய்தித் தொடர்பாளர் கேட்டுள்ளது பற்றி...!?
ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருப்ப தால் ரஷ்யாவால் டாலரை வாங்க முடியாது. அதனைப் பயன்படுத்திக்கொண்டு ரஷ்யாவிலிருந்து இறக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாயை ரஷ்யா தலையில் கட்ட நினைத்தார்கள். ரஷ்யாவோ, இந்தியா ரூபாய்க்கு மதிப்பில்லை யென்பதால் சுதாரித்து, சீனாவின் யுவானில் பில்லைக் கட்டி விட்டு கச்சா எண்ணெயை வாங்கிக்கொண்டு போ என்று கறா ராகச் சொல்லிவிட்டது. அதைத்தான் காங். செய்தித்தொடர் பாளர் குத்திக்காட்டுகிறார்.
ரா.ராஜ்மோகன், சிங்கனூர்.
தி.மு.க. ஆட்சி முடியும்வரை காலையில் டீ, காபிக்கு பதிலாக விஸ்கி, பிராந்தி மட்டுமே குடிக்கமுடியும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரித்துள்ளாரே?
ஒரு எதிர்க்கட்சி பிரமுகர் வேறெப்படிப் பேசுவார் என எதிர்பார்க்கிறீர்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்ததையோ, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததையோ, மெரினா போராட்டத்தில் மக்கள் காயமடைந்ததையோ செல்லூர் ராஜுவோ, எடப்பாடியோ ஏன் பேசப்போகிறார்கள். மாறாக, ஸ்ரீமதி விவகாரத்தில் கள்ளக் குறிச்சியில் நடந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சனை பற்றியும் கள்ளச்சாராய பலிகளைப் பற்றியும்தான் பேசுவார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும் டாஸ்மாக்கில் அமுதா ஓடிக்கொண்டிருந்தது? இன்னும் சில ஆண்டுகளுக்கு எடப்பாடியும் அவர் கட்சிக் காரர்களும் மதுவிலக்கு, கள்ளுக்கு அனுமதி, பழைய ஓய்வூதியம், ஊதிய உயர்வு குறித்த எல்லா வாக்குறுதிகளையும் வழங்குவார்கள். ஆட்சிக்கு வந்தபின் என்ன செய்கிறார்கள் என்பதில்தான் அவர்களது சிறப்பும் பெருமையும் இருக்கிறது.