Advertisment

மாவலி பதில்கள்

dd

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

தமிழகத்திற்கு கர்நாடகாவிலிருந்து தண்ணீர் தரவில்லை, ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டார் என்கிறாரே அண்ணாமலை?

Advertisment

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தபிறகும் தமிழகத்துக்கு வருடம்தோறும் தர வேண்டிய நீரை கர்நாடகம் முழுமையாகத் தரவில்லை. தீர்ப்பின்படி வருடத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தரவேண்டும். காங்கிரஸ், பாரதிய ஜனதா யார் ஆட்சியமைத் தாலும் ஏய்த்துக் காலந்தள்ளும் நடைமுறைகளையே அங்குள்ள அரசு கடைப்பிடிக்கிறது. இதைக் கண்டிக்கவும், கண்காணிக்கவும்வேண்டிய பொறுப்பு மேலாண்மை ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் இருக்கிறது. மழை வரும்போது, வெள்ளத்தால் கர்நாடகத்துக்கு ஆபத்துவராமல் உபரி நீரை அனுப்பிவைக்கும் இடமாக மட்டுமே தமிழகத்தைப் பார்க்கிறது கர்நாடகா. கர்நாடகாவில் இத்தனை நாள் பா.ஜ.க. ஆட

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

தமிழகத்திற்கு கர்நாடகாவிலிருந்து தண்ணீர் தரவில்லை, ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டார் என்கிறாரே அண்ணாமலை?

Advertisment

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தபிறகும் தமிழகத்துக்கு வருடம்தோறும் தர வேண்டிய நீரை கர்நாடகம் முழுமையாகத் தரவில்லை. தீர்ப்பின்படி வருடத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தரவேண்டும். காங்கிரஸ், பாரதிய ஜனதா யார் ஆட்சியமைத் தாலும் ஏய்த்துக் காலந்தள்ளும் நடைமுறைகளையே அங்குள்ள அரசு கடைப்பிடிக்கிறது. இதைக் கண்டிக்கவும், கண்காணிக்கவும்வேண்டிய பொறுப்பு மேலாண்மை ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் இருக்கிறது. மழை வரும்போது, வெள்ளத்தால் கர்நாடகத்துக்கு ஆபத்துவராமல் உபரி நீரை அனுப்பிவைக்கும் இடமாக மட்டுமே தமிழகத்தைப் பார்க்கிறது கர்நாடகா. கர்நாடகாவில் இத்தனை நாள் பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தவரை காவிரி நீரைப் பற்றிப் பேசாத அண்ணாமலை, அங்கே ஆட்சி மாறியதும் ஆளும் மாறிவிட்டார்.

Advertisment

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

சமூக நீதிக்காகத்தான் பொது சிவில் சட்டம் என தமிழிசை கூறியிருக்கிறாரே?

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அடிப்படை யாகக் கொண்டு, அதன் சட்டங் களை வரையறை செய்தது. குற்றத்துக்கான சட்டம் அனை வருக்கும் ஒன்றுதான். ஆனால் குடிமை பழக்கவழக்கங்கள் என வரும்போது இந்துக்கள், பழங் குடிகள், முஸ்லிம்கள், கிறித் தவர்கள், பிற மதத்தவர் களுக்கு வெவ்வேறு பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள் இருக்கிறது. அதை மனதில் கொண்டுதான் சில விதி விலக்குகளை அனுமதித்தார் கள். சட்ட வரைவை பா.ஜ.க. கொண்டுவரட்டும். அதற்குமுன் அதிலுள்ள குறை-நிறைகளைப் பேசுவது சாத்தியப்படாது. ஒரு கையில் ஐந்து விரல் என்பது பொது. யாருக்காவது கையில் ஆறாவது விரல் இருந்தால் வெட்டிவிடவேண்டும் எனப் பேசுவதுதான் சமூக நீதியா?

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

தாத்தா சமூகநீதி பேசிய (பராசக்தி) படத்திற்கும், பேரன் சமூகநீதி பேசிய (மாமன்னன்) படத்திற்கும் என்ன வித்தியாசம்?

கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு வித்தியாசம். பராசக்தி படத்தில் பேசிய சமூக நீதி கலைஞரின் பேனா முனை யில் பிறந்தது. படத்தின் இயக்கு நர் கிருஷ்ணன் பஞ்சுவை விட வும் திரைக்கதையும் வசனமும் பங்களித்த கலைஞரின் திறமை இன்றுவரை பேசப்பட்டு வரு கிறது. மாமன்னன் படத்தின் சமூக நீதி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது. கலைஞரின் பேரன் அத்தகைய படத்தில் நடித்து தன் பங் களிப்பை அளித்திருக்கிறார். தலைமுறைகள் தோறும் சமூக நீதி குறித்த அக்கறை தொடர் வது பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே!

எஸ்.மோகன், கோவில்பட்டி

வாடகைத் தாய் மூலம் வேறு பிரபலங்கள் குழந்தை பெற முயற்சி செய்யவில்லையா?

இன்றைக்கு செயற்கை முறை கருத்தரிப்புகள் இயல்பான ஒரு விஷயமாக மாறிக்கொண்டிருக் கின்றன. கருப்பை பிரச்சினை காரணமாக கருத்தரிக்க முடியாத வர்கள் வாடகைத்தாய் முறையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வாடகைத் தாயாய் வருபவரின் மனப்பூர்வமான சம்மதம் பெறப் பட்டதா, அவர் சுரண்டப்படாமல் இருந்தாரா என்பது தான் முக்கியம். குழந்தை இல்லை என்றால் வாழ்க் கையே முடிந்தது போல் முடங்கிப் போவதைவிட, நயன்தாரா போல வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் அறி வியலின் வாய்ப்பு களைப் பயன்படுத்திக்கொள் வதுதான் முக்கியம். அதுசரி, மாவலியார் என்ன வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு உரிமமா வழங்கிக்கொண்டிருக்கிறார்? என்னைப் பார்த்து ஏன் சார் இந்தக் கேள்வியைக் கேட்டீர்கள்?

mm

த.சத்தியநாராயணன், அயன்புரம்

தமிழ்நாட்டில் நடப்பது தி.மு.க. ஆட்சியா? கவர்னர் ஆட்சியா?

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களான கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னர்கள் தொடர்ச்சியாகக் குடைச்சலைக் கொடுத்துக்கொண்டிருப்பதும், பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கோவா, ஹரியானா, மகாராஷ்டிரம், அஸ்ஸாம் மாநிலங்களின் கவர்னர்கள் இருக்கிற இடமே தெரியாமல் இருப்பதையும் கவனித்திருக்கலாம். செல்போன், கணினிகளில் மால்வேர் புகுந்துவிட்டால் இல்லாத குடைச்சலைக் கொடுப்பதுடன், நமது தகவல்களை மால்வேரை நிறுவியவர்களுக்கு உளவுசொல்லும். எதிர்க்கட்சி ஆட்சிசெய்யும் மாநிலங்களில் நியமிக்கப்படும் கவர்னர்களும் ஒருவகையில் மால்வேர்கள்தான்!

nkn120723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe