Advertisment

மாவலி பதில்கள்!

ss

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜ.க. அரசு முயற்சி எடுப்பதாக தெரிகிறதே?

ஆட்சிசெய்வது பா.ஜ.க.வாக இருந்தாலும், கொள்கை வழிகாட்டுதல் இருக்கையில் அமர்ந்திருப் பது ஆர்.எஸ்.எஸ். ராமர் கோவில் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறித் தாகிவிட்டது. அடுத்த தேர்தலில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? பொது சிவில் சட்டம் வந்துவிட்டால் இந்தியாவில் பாலாறும் தேனாறும் பாயுமென பா.ஜ.க.வினர் முழங்கப்போகிறார்கள். இன்னொரு பக்கம் ஜனநாயகக் குறியீட்டில் இந்தியாவின் இடம் சரிந்துகொண்டே வருகிறது 2021-ல் 100-வது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ல் 108-வது இடத்துக்குச் சரிந்திருக்கிறது. இதையெல்லாம் மக்கள் கண்களிலிருந்து மறைக்க ஏதாவது விஷயம் வேண்டுமல்லவா!

Advertisment

நடேஷ்கன்னா,

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜ.க. அரசு முயற்சி எடுப்பதாக தெரிகிறதே?

ஆட்சிசெய்வது பா.ஜ.க.வாக இருந்தாலும், கொள்கை வழிகாட்டுதல் இருக்கையில் அமர்ந்திருப் பது ஆர்.எஸ்.எஸ். ராமர் கோவில் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறித் தாகிவிட்டது. அடுத்த தேர்தலில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? பொது சிவில் சட்டம் வந்துவிட்டால் இந்தியாவில் பாலாறும் தேனாறும் பாயுமென பா.ஜ.க.வினர் முழங்கப்போகிறார்கள். இன்னொரு பக்கம் ஜனநாயகக் குறியீட்டில் இந்தியாவின் இடம் சரிந்துகொண்டே வருகிறது 2021-ல் 100-வது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ல் 108-வது இடத்துக்குச் சரிந்திருக்கிறது. இதையெல்லாம் மக்கள் கண்களிலிருந்து மறைக்க ஏதாவது விஷயம் வேண்டுமல்லவா!

Advertisment

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

பாட்னா மாநாடு ஆண்டிகள் மடம் கட்டிய கதை என பன்னீர்செல்வம் கூறியிருப்பது பற்றி...?…

Advertisment

பாட்னாவில் கூடிய ஆண்டிகளில் பலர், அவர் களது சொந்த மாநிலங்களில் ஆட்சியிலிருப்பவர்கள். ஒன்றிய அரசின் நெருக்குதலுக்கு எதிராக ஒரு கூட் டணியைத் திரட்ட முயல்பவர்கள். சரி, எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ். எப்போது மடம் கட்டப் போகிறார், அது எப்படி இருக்கிறதெனப் பார்க்கலாம்!

மு.சரவணன், புளியறை

ராகுல்காந்தியை மணிப்பூர் போலீஸ் தடுத்து நிறுத்தியிருக்கிறதே?

mm

வேறென்ன செய்யும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஒருபக்கம் மாதக்கணக்கில் வன்முறை நில வும் இடம். போன இடத்தில் அவருக்கு ஆபத்து நேர்ந்தால் காவல்துறை பதில்சொல்லியாகவேண்டும். மறுபக்கம், தேர்தல் பிரச்சாரத்துக்கு வர வழிதெரிந்த மோடிக்கு, அமைதிக்கு வேண்டுகோள் விடுப்பதற்கு வர வழிதெரியவில்லையா என எதிர்க்கட்சிகள் போட்டு பிய்த் தெடுக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் போய் மக்களைச் சந்தித்தால் பிரதமருக்கு கெட்ட பெயர் இல்லையா? ஆளும்கட்சியின் முட்டுக்கட்டைகளைத் தாண்டியும் சாதித்திருக்கிறார் ராகுல்.

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

இந்திய ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பிய அமெரிக்க பத்திரிகை பெண் நிருபர் சப்ரினா சித்திக்குக்கு ஏராள மான மிரட்டல்கள் வந்தது குறித்து?

ii

வழக்கமாக இந்தியாவில் பா.ஜ.க. தலைவர்களைப் பற்றியும் இந்துத்துவத் தைப் பற்றியும் விமர்சிக்கும் நபர்களைக் குறிவைத்து தாக்குவதற்கெனவே ட்ரோல் எனும் தனி சமூக வலைத்தளப் படையே இருக்கிறது. இவர்கள் அத்தகைய நபர் களை கும்பலாக வந்து மோசமாகவும், நாகரிகக் குறைவாகவும் விமர்சிப்பார்கள். மோடியைக் கேள்வி கேட்டதால், இந்த முறை அமெரிக்க நிருபரை அசிங்கப் படுத்தியிருக்கிறார்கள். வெள்ளை மாளி கையின் ஊடகச் செயலாளர் இதைக் கண்டித்ததுடன், சபரினா சித்திக்குக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். தெற்காசிய பத்திரிகையாளர் கூட்டமைப்பும் இத னைக் கண்டித்துள்ளது. மொத்தத்தில் சபரினாவை அசிங் கப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, சர்வ தேச அரங்கில் இந்தியாவின் மரி யாதையை காற்றில் பறக்க விட்டி ருக்கிறார்கள்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

2021 சட்டமன்றத் தேர்தலில் எட்டப்பர்களால் ஆட்சியை இழந்தோம்... என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?

அரசியலில் இல்லாத எட்டப்பர்களா? அரசியல் தோன்றிய காலந்தொட்டே எட்டப்பர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எடப்பாடிக்கு தோல்விக்கு சொல்வதற்கு ஒரு சாக்கு அவ்வளவுதான்.

மல்லிகா அன்பழகன், சென்னை- 78.

தமிழில் பேசுபவர்களுக்கு வயது குறைந்து இளமை கூடும் என்று தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ஔவை அருள் கூறியது பற்றி?

தமிழணங்கை குறையாத இளமைகொண்டவள் என தமிழ்த்தாய் வாழ்த்தில் மனோன்மணியம் பெ. சுந்தரனார் பதிவுசெய்கிறார். மாறாக, தனது இளமைக் கோலம் தனது கவிப்பணிக்கு இடைஞ்சலாக அமையுமென்று கருதி, இறைவனைப் பாடி ஔவை வயோ திகத்தைப் பெற்றதாக ஒரு கதை உண்டு. இப்படி கதைகளிலும், இலக்கியத் திலும்தான் ஒரு மொழி இளமையை யும் மூப்பையும் அளிக்கமுடியும். மற்றபடி, பிறமொழி மயக்கத்தில் இருக்கும் தமிழர்களை ஈர்க்க, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஒரு யுக்தியாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், தமிழர்களே தமிழைப் பேசாமல், எழுதாமல் போனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் குன்றாத தமிழணங்கின் சீர் இளமை மெல்ல மெல்ல மாறத் தொடங்கிவிடும் என்பது உண்மைதான்.

nkn050723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe