Advertisment

மாவலி பதில்கள்!

mm

மஞ்சுவாசுதேவன், பெங்களூரு

பனிப் பாறையில் மோதி மூழ்கிய டைட்டானிக் கப்பலை காணச் சென்ற கோஷ்டி ஒன்றைக் காணவில்லையாமே?

Advertisment

கனடா அருகே அட்லாண்டிக் கட-ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்வையிட, ஆராய ஓஸோன் கேட் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், பில்லியனர் ஹாமிஷ், செஷானா தாவூத், அவரது மகன் சுலைமான், டைட்டா னிக் நிபுணர் பால் ஹென்ரி உட்பட ஐவர் நீர்மூழ்கிக் கப்பலில் சுற்றுலா சென்றிருந்தனர். அதில் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருந்தது. கிளம் பிய ஒரு மணி நேரத்திலேயே ஸ்டேஷனுடான அதன் தொடர்பு அறுந்துபோக, பதட்டம் அதிகரித்தது. உலக நாடுகள் எல்லாம் இதில் அக்கறைகாட்டின. தேடுதல் பணி மும்முரமாகியது. இந்த நிலையில் ஆழ் கடலில் தேடும் ரோபோட் ஒன்று தேடலில் இறக்கப்பட்டது. 1600 அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந

மஞ்சுவாசுதேவன், பெங்களூரு

பனிப் பாறையில் மோதி மூழ்கிய டைட்டானிக் கப்பலை காணச் சென்ற கோஷ்டி ஒன்றைக் காணவில்லையாமே?

Advertisment

கனடா அருகே அட்லாண்டிக் கட-ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்வையிட, ஆராய ஓஸோன் கேட் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், பில்லியனர் ஹாமிஷ், செஷானா தாவூத், அவரது மகன் சுலைமான், டைட்டா னிக் நிபுணர் பால் ஹென்ரி உட்பட ஐவர் நீர்மூழ்கிக் கப்பலில் சுற்றுலா சென்றிருந்தனர். அதில் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருந்தது. கிளம் பிய ஒரு மணி நேரத்திலேயே ஸ்டேஷனுடான அதன் தொடர்பு அறுந்துபோக, பதட்டம் அதிகரித்தது. உலக நாடுகள் எல்லாம் இதில் அக்கறைகாட்டின. தேடுதல் பணி மும்முரமாகியது. இந்த நிலையில் ஆழ் கடலில் தேடும் ரோபோட் ஒன்று தேடலில் இறக்கப்பட்டது. 1600 அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட, அதில் பயணித்த ஐவரும் மரணமடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டைட்டானிக்கின் துரதிர்ஷ்டம் அதைப் பார்க்கச் சென்றவர்களையும் துரத்துவதாக பேச்செழுந் திருக்கிறது. ஆனால் மூழ்கிய டைட்டானிக்கை 46 பயணிகள் பார்த்து மீண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45

மோடி அமெரிக்கா சென்று யோகாவில் கின்னஸ் சாதனை படைத்துவிட்டாரே?

mm

2014-ல் ஐ.நா.வில் உரையாற்றும் போது ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார் மோடி. அதனை ஐ.நா. ஏற்றுக் கொண்டதையடுத்து 2015 முதல் சர்வதேச யோகா தினம் கொண் டாடப்பட்டுவருகிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், பிரதம ராக மோடியும் இருப்பதாலும் இந்திய ஊட கங்கள் இதில் பிரத்யேகக் கவனம் செலுத்துவதாலும், சமூக ஊடகங்களின் வீச்சாலும் ஒவ் வொருவரின் கவனத்தையும் எட்டியுள் ளது. யோகாவை தோற்றுவித்தவராகக் கருதப்படும் பதஞ்சலியைவிடவும், யோகா தினத்தால் மோடி கவனம் பெற்றுவிட் டார்தான். மோடி தலைமையில் 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் யோகா செய்ததால், கின்னஸ் சாதனைப் பட்டியலில் அந்நிகழ்வு இடம்பெற்றிருக் கிறதே தவிர, மோடி யோகாவில் எந்த கின்னஸ் சாதனையும் செய்யவில்லை.

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

பாகிஸ்தானில் இம்ரான்கான் மீது 140 வழக்குகள் இருக்கிறதாமே?

Advertisment

பாகிஸ்தான் போன்ற நாட்டில் ஆளுங்கட்சியையும், ராணுவத் தையும் பகைத்துக்கொள்ளும்போது வேறென்ன நடக்குமென எதிர்பார்க்கிறீர்கள். அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்பு களை எதிர்க்கட்சிகளை முடக்கப் பயன்படுத்துவதாகத்தானே மோடி அரசு மீதும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

சக்திகாந்த தாஸ் உலக அளவில் சிறந்த வங்கி கவர்னராக தேர்வுசெய்யப்பட்டிருப்பது குறித்து?

லண்டனில் உள்ள சென்ட்ரல் பாங்கிங் என்ற பொருளா தார ஆராய்ச்சி இதழ், சக்தி காந்ததாஸை உலக அளவில் சிறந்த வங்கி கவர்னராகத் தேர்வுசெய்துள்ளது. கோவிட் தொற்று நோய்ச் சூழலில், பணவீக்கம் உள்ளிட்ட நெருக்கடியில் ரிசர்வ் வங்கித் தலைவராக இருந்து வங்கி அமைப்புகளைத் திறமையாக நிர்வகித்ததற்கு இந்த விருது தரப்பட்டுள்ளது. ஆனால் அவரது காலத்தில்தான் முன்பு எப்போதுமில்லாத அளவான 12.94% இந்திய பணவீக்கம் சென்றதும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்துக்குப் பாய்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

கே. அந்தோணி, இடைகால்

சமீபத்தில் மாவலியாரைக் கவர்ந்த செய்தி?

mm

இந்தியாவில் காந்தி தேசத்தந்தை என அழைக்கப்படுவது போல, மியான்மரில் சூயியின் தந்தை ஆங் சன் தான் தேசத்தந்தை. மியான்மர் தேர்தலில் தோற்ற ராணுவம். அதை ஒப்புக்கொள்ளாமல் வெற்றிபெற்ற ஆங்சன் சூயி மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி 2021-ல் சிறையில் தள்ளியது. கிட்டத்தட்ட 5000 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 1000 பேர் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருந்த போதும் ஆங் சன் சூயியின் பிறந்த தினமான ஜூன் 19 அன்று, அவரைப் போலவே தலையில் ரோஜாப் பூ சூடி அவருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஆதரவு தெரிவித்த நூற்றுக்கணக்கான வர்களை ராணுவம் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது. இன்னும் நூற்றுக்கணக்கானவர்களை தடியடி நடத்திக் கலைத்திருக்கிறது. ஆதரவு தெரிவித்தால் சிறை, தடியடி, உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழல் என்ற நிலையிலும் தைரியமாக மலரையே போராட்ட ஆயுதமாகப் பயன்படுத்திய மியான்மர் மக்களின் தைரியம் மனதைக் கவர்ந்தது.

nkn280623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe