Advertisment

மாவலி பதில்கள்!

ss

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

புதிய பாராளுமன்ற சுவர்களில் சனாதனம், சமஸ்கிருதம் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டு பா.ஜ.க. கட்சி அலுவலகம்போல இருப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியது பற்றி?

Advertisment

mmm

இந்தியாவையே பா.ஜ.க. கட்சி அலுவலகம் போல மாற்றுவதற்காக மோடியும் அமித்ஷாவும் ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைகளுடன் தீவிர மாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்தியாவின் அர சியல் சட்டத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் பெருமையே அதன் பன்மைத் துவம் வாய்ந்த மதச்சார்பின்மை கொள்கைதான். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்து மதம், இந்தி மொழி இவற்றுக்கு அப்பாற்பட்ட மதத்தினரையும் மொழியினரை யும் அச்சுறுத்தலிலேயே வைத்திருக்கிறது. உணவுப் பழக்கம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தையும், அந்தந்தப் பகுதிகளின் தட்பவெப்பத்தையும் சார்ந்தது. ஆனால், பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்து மாட்டுக்கற

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

புதிய பாராளுமன்ற சுவர்களில் சனாதனம், சமஸ்கிருதம் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டு பா.ஜ.க. கட்சி அலுவலகம்போல இருப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியது பற்றி?

Advertisment

mmm

இந்தியாவையே பா.ஜ.க. கட்சி அலுவலகம் போல மாற்றுவதற்காக மோடியும் அமித்ஷாவும் ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைகளுடன் தீவிர மாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்தியாவின் அர சியல் சட்டத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் பெருமையே அதன் பன்மைத் துவம் வாய்ந்த மதச்சார்பின்மை கொள்கைதான். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்து மதம், இந்தி மொழி இவற்றுக்கு அப்பாற்பட்ட மதத்தினரையும் மொழியினரை யும் அச்சுறுத்தலிலேயே வைத்திருக்கிறது. உணவுப் பழக்கம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தையும், அந்தந்தப் பகுதிகளின் தட்பவெப்பத்தையும் சார்ந்தது. ஆனால், பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்து மாட்டுக்கறி சாப்பிடக்கூடிய மதத்தினரும் சாதியினரும் உயிர் பயத் திற்கு ஆளாகியிருக்கிறார்கள். மாட்டுக்கறி சாப்பிட்டதாக, மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, பா.ஜ.க.வினரால் அடித்துக் கொல்லப்பட்டவர்களும், கை-கால்களை இழந்தவர்களும் உண்டு. அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் செய்யும் பெரும் பணக்காரர்களில் பெரும்பா லானவர்கள் பா.ஜ.கவினர்தான். மதவெறியைத் தூண்டி விட்டு, நாட்டின் அமைதியை சீர்குலைத்துவிட்டு, தாங்கள் மட்டும் வியாபாரம் பார்த்துக் கொழுப்பது என்பதுதான் பா.ஜ.க. ஃபார்முலா. கேரளா, கோவா போன்ற மாட்டுக்கறி சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் உள்ள பா.ஜ.க.வினர் மாட்டுக்கறி எதிர்ப்பு பற்றி வாய் திறக்கமாட்டார்கள். இந்த இரட்டை வேடம்தான் பா.ஜ.க.வின் அடையாளம். காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, கோட்சே படத்திற்கு மாலை போடுவதும், காந்தி கொலை யில் விசாரணைக்குள்ளான சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றத்தைத் திறப்பதும், அதில் சமஸ்கிருத மொழியில் சனாதனத்தைக் காட்சிப்படுத்தி வைத்திருப்பதும் பா.ஜ.க.வின் உண்மை முகத்தைக் காட்டுகிறது.

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

டிஜிட்டல் இந்தியாவில் சிக்னல் மாறாததால் ரயில் விபத்து என்றால் என்ன சொல்வது? ரயில்வே மந்திரி பொறுப்பேற்று ராஜினாமா செய்வாரா?

இந்த நூற்றாண்டில் இந்தியா இப்படி ஒரு ரயில் விபத்தைக் கண்டதில்லை. தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட காலத்தில், சிக்னல் அலட்சியம் பல நூறு உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. இந்தியப் பொதுத் துறை நிறுவனங்களில் ரயில்வேக்கு தனி இடம் உண்டு. இந்தியாவுக்கு எந்த அடிப்படையில் வெளிநாடுகள் கடன் கொடுக்கின்றன என்று கேட்டால், பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால் ரயில்வே தண்டவாள இரும்பை விற்றாவது கடன் பணத்தை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் என கிராமத்து மக்கள் வேடிக்கையாக சொல்வார்கள். அந்தளவுக்கு தனித்துவம் வாய்ந்த ரயில்வே துறைக்கென, தனி பட்ஜெட் போடப்படுவதுதான் நெடுங்கால வழக்கமாக இருந்தது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும், ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் சேர்த்துவிட்டார்கள். புதிய ரயில் தடங்கள் இல்லை. போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை. நிதி ஒதுக்கீடும் குறைவு. எல்லாமும் சேர்ந்து கோர விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில், ரயில்வே நிர்வாகத்தை எப்படி மேம்படுத்துவது என சிந்திப்பதற்கு பதில், ரயில்வேயை தனியாரிடம் கொடுப்பதற்கு இதுதான் சரியான நேரம் என்கிறார் பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன். அவரைப் போலவே பா.ஜ.க.வினர் பலரும் தனியார்மயம் பற்றிப் பேசுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் ஆட்சியில், ரயில்வே மந்திரியாவது, பொறுப்பேற்பதாவது, ராஜினாமா செய்வதாவது

Advertisment

mm

அ. யாழினிபர்வதம், சென்னை. 78

டில்லியில் அன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கும் இன்று மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே நீதிக்கான போராட்டம்தான். இரண்டிலுமே பா.ஜ.க. அரசின் பிடிவாதமே முதன்மையாக இருந்தது. விவசாயிகளுக்கு இறுதி வெற்றி கிடைத்தது போல, மல்யுத்த வீராங்கனைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். பாலியல் சீண்டல் நபர்களுக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுத்து வைத்திருக்கும் பா.ஜ.க.. வின் தன்மை மக்களுக்கும் தெரியவரும்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவி கொண்டுவரப்பட்டிருப்பது?

ஆட்சியின் தொடக்கத்திலேயே செய்திருக்க வேண்டும். காலதாமதம் ஆனாலும் சரியான முடிவு. இதற்கு முன் இருந்த குறைகள் நீங்க வழி காணட்டும்.

nkn100623
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe