Advertisment

மாவலி பதில்கள்

mm

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

புதுடில்லி முதல் சண்டிகார் வரை இரவு லாரியில் ராகுல்காந்தி பயணம் செய்தது பற்றி?

Advertisment

நடைபயணம், லாரி பயணம் என்று இப்போது தான் ராகுல்காந்தியின் அரசியல் பயணம் சரியாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

mm

mm

Advertisment

நமது பிரதமரிடம் அமெரிக்க அதிபர் ஆட்டோ கிராப் வாங்குகிறார். பப்புவா நியூ கினியா பிரதமர் காலில் விழுகிறார். ஆஸ்தி ரேலியா பிரதமர் "மோடிதான் பாஸ்' என்கிறார். இதெல்லாம் இந்தியாவுக்கு பெருமை தரும் விஷயங்கள்தானே! நேரு காலத்திலிருந்தே இந்திய பிரதமர் களுக்கு இத்தகைய மரியாதை உண்டு. அமெரிக்க அதிபர் கென்னடி, நேருவுக்கு அளித்த மரியாதையும், சோவியத் யூனியன் (ரஷ்யா) அதிபர் பிரஷ்னேவ் இந்திராகாந்தியிடம் கொண்டிருந்

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

புதுடில்லி முதல் சண்டிகார் வரை இரவு லாரியில் ராகுல்காந்தி பயணம் செய்தது பற்றி?

Advertisment

நடைபயணம், லாரி பயணம் என்று இப்போது தான் ராகுல்காந்தியின் அரசியல் பயணம் சரியாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

mm

mm

Advertisment

நமது பிரதமரிடம் அமெரிக்க அதிபர் ஆட்டோ கிராப் வாங்குகிறார். பப்புவா நியூ கினியா பிரதமர் காலில் விழுகிறார். ஆஸ்தி ரேலியா பிரதமர் "மோடிதான் பாஸ்' என்கிறார். இதெல்லாம் இந்தியாவுக்கு பெருமை தரும் விஷயங்கள்தானே! நேரு காலத்திலிருந்தே இந்திய பிரதமர் களுக்கு இத்தகைய மரியாதை உண்டு. அமெரிக்க அதிபர் கென்னடி, நேருவுக்கு அளித்த மரியாதையும், சோவியத் யூனியன் (ரஷ்யா) அதிபர் பிரஷ்னேவ் இந்திராகாந்தியிடம் கொண்டிருந்த நம்பிக்கையும், இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர் ராஜீவ்காந்தியிடம் காட்டிய மரியாதையும் வரலாற்றின் பக்கங்களில் உள்ளன. அவர்களெல்லாம் இதை இந்தியாவின் கௌரவமாகக் கருதினார்கள். மோடி இது தனக்காகவே நடப்பதுபோல சித்தரிக்க முயற்சிக்கிறார். அவரைச் சேர்ந்தவர்களும் 2014க்குப் பிறகுதான் இந்தியாவில் பிரதமர் பதவியே உருவானதுபோல பேசித்திரிகிறார்கள். நேரு தொடங்கி வாஜ்பாய், மன்மோகன்சிங் வரை யாரும் இப்படி விளம்பரம் தேடிக்கொண்டதில்லை. மேன்மக்கள் மேன்மக்களே!

தே.மாதவன், கோயமுத்தூர்-45

கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் வெயிலில் சென்ற மக்களுக்கு இலவச குடை வழங்கியது பற்றி?

வெயில், மழை இவையெல்லாம் இயற்கையின் தன்மை. அரசியல்வாதிகளோ, ஆட்சியாளர்களோ, மதகுருமார்களோ அதை மாற்றிவிட முடியாது. ஆனால், வெயில்-மழையால் பாதிக்கப்படுபவர் களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம் என்பதை மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதி கள் தங்கள் செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையைத் தரமுடியும். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நலன்சார்ந்த பலவற்றை முன்னெ டுத்தவர் கவிஞர் கனிமொழி எம்.பி. வெயில் நேரத்தில் குடை தந்திருப்பது, உங்களுக்கு நிழலாக இருக்க வேண்டியது என் கடமை என்பதன் அடையாளம். கவிஞரல்லவா?

நீங்களாவது சொல்லுங்கள் தி.மு.க.வுடன் ஒ.பி.எஸ். மறைமுக கூட்டு வைத்துள்ளாரா?

அரசியலில் நேரடிக் கூட்டணி, மறைமுகக் கூட்டணி என்பதைத் தாண்டி, தொடர்பில்லாக் கூட்டணி என ஒன்று உண்டு. உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அங்குள்ள பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மறுக்கிறது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சிக்கு உள்ள வாக்கு களின் பலம் என்பது காங்கிரஸையும் சமாஜ்வாடி யையும் பாதித்து பா.ஜ.க. வெற்றி பெற வழிய மைத்துவிடுகிறது. ஓவைஸியின் முஸ்லிம் அமைப்பும் இதே திருப்பணியைத்தான் பீகார் தொடங்கி கர்நாடகம் வரை மேற்கொண்டது. இத்தகைய அமைப்புகள் எவ்வித நேரடி -மறைமுகத் தொடர்பு மில்லாமல் ஏதோ ஒரு கட்சிக்கு சாதகமான வேலை களை செய்யக் கூடியவை. ஓ.பி.எஸ். அணியும் அப்படித்தான்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

புதிய பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே தமிழக செங்கோல் இடம் பெற்றிருப்பது குறித்து

சுதந்திரம் பெறுவதற்கு முதல்நாள், நேருவுக்கு பல மதத்தினரும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள். மேடையில் பொன்னாடை அணிவித்தால், உடனே அதைக் கழற்றி உதவி யாளரிடம் கொடுப்பதுபோல, தமிழ்நாட்டிலிருந்து திருவாவடு துறை ஆதீனம் கொடுத்த செங்கோலை அருங்காட்சியகத்துக்கு அனுப்பிவிட்டார் நேரு. அலகபாத் அருங்காட்சியகத்தில், நேருவின் கைத்தடி என்று அது பாதுகாக்கப்பட்டு வந்தது. உம்மிடி பங்காரு செட்டியார் செய்த செங்கோலை சோழர் செங்கோல் என்றும் தமிழர் பெருமை என்றும் புளுகுகிறது பா.ஜ.க அரசு. இதனால், தமிழ்நாட்டில் ஓட்டு வாங்கிவிட லாம் என்பது மோடி-அமித்ஷா கணக்கு.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதுதானே முறையாக இருக்கும்?

அதெல்லாம் ஜனநாயக நாட்டில். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நடப்பது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி.

nkn310523
இதையும் படியுங்கள்
Subscribe