Advertisment

மாவலி பதில்கள்!

mm

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு துப்பாக்கி வேண்டும் என்று கேட்டு இருப்பது குறித்து!

Advertisment

தலைமைச் செயலாளர் ஒரு மாநில அளவிலான நிர்வாகத்தைக் கவனிக்கக்கூடியவர். கலெக்டர் ஒரு மாவட்ட அளவிலான நிர்வாகத் தைக் கவனிக்க வேண்டியவர். கோட்டாட்சியர், வட்டாட்சியர் என அவரவருக்கான பொறுப்புகள் உண்டு. அதில் நேரடியாக மக்களை சந்திக்கக்கூடிய இடத்திலும், அவர்களுக் குரிய சான்றிதழ்களுக்கு ஒப்புதல் வழங்கும் இடத்திலும் இருப்பவர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள். ஒரு காலத்தில் இது சாதிரீதி யான மணியக்காரர், கணக்கப் பிள்ளை போன்ற பதவிகளாக இருந்தன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத் தில் அத்தகைய பரம்பரை பதவிகளுக்குப் பதில், எந்த சாதிக்காரராக இருந்தாலும், உரிய தேர்வு மூலம் கிராம நிர்வாக அதிகாரி எனும் வி.ஏ.ஓ. ஆகலாம் என்ற நிலைமை உருவானது. 2006-2011 கலைஞர் ஆட்சிக

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு துப்பாக்கி வேண்டும் என்று கேட்டு இருப்பது குறித்து!

Advertisment

தலைமைச் செயலாளர் ஒரு மாநில அளவிலான நிர்வாகத்தைக் கவனிக்கக்கூடியவர். கலெக்டர் ஒரு மாவட்ட அளவிலான நிர்வாகத் தைக் கவனிக்க வேண்டியவர். கோட்டாட்சியர், வட்டாட்சியர் என அவரவருக்கான பொறுப்புகள் உண்டு. அதில் நேரடியாக மக்களை சந்திக்கக்கூடிய இடத்திலும், அவர்களுக் குரிய சான்றிதழ்களுக்கு ஒப்புதல் வழங்கும் இடத்திலும் இருப்பவர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள். ஒரு காலத்தில் இது சாதிரீதி யான மணியக்காரர், கணக்கப் பிள்ளை போன்ற பதவிகளாக இருந்தன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத் தில் அத்தகைய பரம்பரை பதவிகளுக்குப் பதில், எந்த சாதிக்காரராக இருந்தாலும், உரிய தேர்வு மூலம் கிராம நிர்வாக அதிகாரி எனும் வி.ஏ.ஓ. ஆகலாம் என்ற நிலைமை உருவானது. 2006-2011 கலைஞர் ஆட்சிக்காலத்தில் முறைப்படி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பைசா லஞ்சமின்றி வி.ஏ.ஓ.க்களாக நியமிக்கப்பட்டார்கள். கலெக்டர் போன்ற பெரிய பதவி இல்லையென்றாலும், இது பொறுப்புமிக்க பணி. அப்படிப்பட்ட பணியில் இருந்த ஒருவரை, மணல் கடத்தல் கும்பல் கொலை செய்தது என்பது கொடூரமானது. முதலமைச்சர் உட னடியாக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்து, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளித்த நிலையிலும், மற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அச்சம் ஏற்படுவது இயல்புதான். கொலை செய்யப் பட்ட வி.ஏ.ஓ. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது தான் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சட்டத்தை மீறும் குற்றவாளிகள் எல்லாப் பக்கமும் இருக்கிறார் கள். மணல் கடத்தல் தொடங்கி பல நிலைகளிலும் உள்ள இவர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் ஏற்படும்போது, பாதுகாப்புக்குத் துப்பாக்கி வேண்டும் எனக் கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். துப்பாக்கி பாதுகாக்கும். அதைவிட பாதுகாப்பாக இருக்க வேண்டியது ஆட்சி நிர்வாகம்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

"கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை வருடம் 1,840 கோடி வருமானம் பெறுவது வருத் தம் அளிக்கிறது' என்று ஊழியர்கள் கூறியுள்ளது பற்றி...!?

கார்ப்பரேட் உலகத்தில் ஊதியம் என்பது பந்தயக் குதிரைகள்மீது கட்டப்படுகின்ற ரேஸ் பணம் போன் றது. குதிரை ஜெயிக்கும் என்றால் எல்லாரும் அள்ளிக் கொட்டுவார்கள். குதிரையால் ஜெயிக்க முடியாது என்றால், குதிரையையே முடித்து விடுவார்கள். ஊழி யர்கள் மாத ஊதியக்காரர்கள். அவர்களுக்கு இன் சென்ட்டிவ், சம்பள உயர்வு, போனஸ் போன்றவை பெரிய பரிசு. நிறுவனத்திற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதில் தனக்குரிய பங்கினை சதவீதக் கணக்கில் பெறக்கூடியவர்கள் சி.இ.ஓ. அந்தஸ்தில் இருப்பவர்கள். அதனால், சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் எவ்வளவாக இருந்தாலும், அந்த நிறுவனத்தின் லாபத்திற்கு காரணமாக உழைக்கும் ஊழியர்களுக்கு வருத்தமும் ஏக்கமும் இருக்கத்தான் செய்யும்.

ஜெ. கிருஷ்ணதேவு, எல்.ஆர்.பாளையம்

Advertisment

"டாஸ்மாக் வருமானத்தில் அரசை நடத்தவேண் டிய அவசியம் தி.மு.க. அரசுக்கு இல்லை' என்று அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியிருக்கிறாரே...

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானத்தால்தான் பட்ஜெட்டே போடப்படுகிறது என்ற விமர்சனம் உண்டு. உண்மையில், டாஸ்மாக்கை விட பத்திரப் பதிவுத் துறை, வணிவரித்துறை போன்றவற்றில் அதிக வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. புதிய தொழிலகங்கள் உருவாகும்போதும் வருவாய் அதிகரிக்கும். அதனால், டாஸ்மாக் வருமானத்தில் மட்டுமே அரசு நடக்கவில்லை. அதே நேரத்தில், டாஸ்மாக் வருமானத்தை விடுவதற்கும் அரசு தயாராக இல்லை.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

தி.மு.க.வின் இரண்டாண்டு கால ஆட்சி யில், சாதனை என எதைக் கருதுகிறீர்கள்..?

கவர்னர், எதிர்க்கட்சியினர் ஆகியோரின் தாக்குதல்கள், கூட்டணிக் கட்சியினர்-ஊடகங்கள் ஆகியவற்றின் விமர்சனம் எதுவாக இருந்தாலும், தனது அரசின் மீதான குற்றச்சாட்டுகளைத் தயங்கா மல் எதிர்கொண்டு, அவை உண்மையாக இருந்தால் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதலமைச்சரின் செயல்பாடு. ஆட்சியில் நடப்பவற்றுக் குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் முதல்வரின் தன்மைதான் இரண்டாண்டுகால ஆட்சியின் சிறப்பு.

ff

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

தன் மகன் விஜய்யை நடிக்க வைக்க மறுத்துவிட்டதாக இயக்குனர் பாரதிராஜாவை விமர்சனம் செய்கிறாரே எஸ்.ஏ.சந்திரசேகர்?

தன்னுடைய மகனையே வெற்றிகரமான ஹீரோ வாக்க முடியாமல் போனவர் பாரதிராஜா. விஜய்யை நினைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் நிம்மதி அடையவேண் டுமே தவிர, விமர்சனம் செய்யக் கூடாது.

nkn130523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe