Advertisment

மாவலி பதில்கள்!

mm

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த குட்கா ஊழல் புகார்களை தி.மு.க. ஆட்சி முழுமையாக விசாரித்து தவறிழைத்தோரை கம்பி எண்ணச் செய்திடுமா?

Advertisment

எந்த ஆட்சியாக இருந்தாலும் வழக்கு விசாரணை என்பது இழுத்தடிப்புதான். தி.மு.க. மீது எம்.ஜி.ஆர். கொடுத்த ஊழல் பட்டியலும், சர்க்காரியா கமிஷன் விசாரணையும் என்னாயிற்று? எம்.ஜி.ஆர். மீது இந்திராகாந்தி ஆட்சியில் போடப் பட்ட ரே கமிஷன் விசாரணை என்ன ஆயிற்று? 2ஜி ஊழல் வழக்கில் ஒரு ஆதாரமும் சமர்ப்பிக்கப் படவில்லை என்று விடுதலை செய்தார் நீதிபதி. போபர்ஸ் ஊழல் வழக்கின் கதி என்ன? வாஜ்பாய் ஆட்சிக் காலத்து சவப்பெட்டி ஊழல் சவக் குழிக்குத்தான் போனது. தி.மு.க.வினர் மீது ஜெய லலிதா போட்ட நில அபகரிப்பு வழக்கு என்னாயிற்று? ஜெயலலிதா மீதும் கலர் டி.வி. ஊழல் உள்பட பல வழக்குகள் போடப் பட்டு அவற்றை விசாரிக்க சிறப்

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த குட்கா ஊழல் புகார்களை தி.மு.க. ஆட்சி முழுமையாக விசாரித்து தவறிழைத்தோரை கம்பி எண்ணச் செய்திடுமா?

Advertisment

எந்த ஆட்சியாக இருந்தாலும் வழக்கு விசாரணை என்பது இழுத்தடிப்புதான். தி.மு.க. மீது எம்.ஜி.ஆர். கொடுத்த ஊழல் பட்டியலும், சர்க்காரியா கமிஷன் விசாரணையும் என்னாயிற்று? எம்.ஜி.ஆர். மீது இந்திராகாந்தி ஆட்சியில் போடப் பட்ட ரே கமிஷன் விசாரணை என்ன ஆயிற்று? 2ஜி ஊழல் வழக்கில் ஒரு ஆதாரமும் சமர்ப்பிக்கப் படவில்லை என்று விடுதலை செய்தார் நீதிபதி. போபர்ஸ் ஊழல் வழக்கின் கதி என்ன? வாஜ்பாய் ஆட்சிக் காலத்து சவப்பெட்டி ஊழல் சவக் குழிக்குத்தான் போனது. தி.மு.க.வினர் மீது ஜெய லலிதா போட்ட நில அபகரிப்பு வழக்கு என்னாயிற்று? ஜெயலலிதா மீதும் கலர் டி.வி. ஊழல் உள்பட பல வழக்குகள் போடப் பட்டு அவற்றை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டன. சொத்து குவிப்பு வழக்கில்தான் அவர் ஜெயிலுக்குப் போனார். அதுவும், மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியவருக்கு, 64 கோடி ரூபாய்க்கு (அன்றைய மதிப்பில்) சொத்து வாங்கி சிக்கினார். ஜெயலலிதாவைப் போல சிக்கிக்கொள்ளக் கூடியவர்கள் அல்ல... அவர் கட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள்.

Advertisment

வாசுதேவன், பெங்களூரு. !

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழுஉருவச் சிலை!

mm

மன்டா ஜமீனின் ராஜா, உத்தபிர தேசத்து முன் னாள் முதல்வர், மத்திய அரசில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்று பல பொறுப்புகளை வகித்த வி.பி.சிங் பிரதமரானதற்கு காரணம்... அவரது தேசிய முன்னணி வெற்றி பெற்றதால்தான். அந்த தேசிய முன்னணி 1988ஆம் ஆண்டு சென்னையில்தான் மிகப்பெரிய பேரணியுடன் தொடங்கப்பட்டது. அந்தப் பேரணியை வெற்றிகரமாக நடத்திக்காட்டி யவர் தி.மு.க. தலைவர் கலைஞர். பிரதமரானதும் தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண நடுவர் மன்றம் அமைத் தார். இத்தனைக்கும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடமாட்டேன் என்று அடம்பிடித்த கர்நாடகத்தில் வி.பி.சிங்கின் கட்சிக்கு தனி செல்வாக்கு இருந்தது. தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சி தயவில்தான் இருந்தது. சென்னை விமான நிலைய விரிவாக்க விழாவில் கலைஞர் வைத்த கோரிக்கையை ஏற்று, விழா மேடையிலேயே "அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜ் உள் நாட்டு முனையம்' என பெயர் சூட்டினார் வி.பி.சிங். மத்திய-மாநில உறவுகளுக்கான ஆணையத்தை அமைத்தார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை அங்குள்ள தமிழர்களை அழிக்கிறது என்று இங்குள்ள தமிழர்கள் கொடுத்த குரலுக்கு செவி சாய்த்து, அமைதிப்படையை உடனே திரும்ப வரச் செய்தவரும் வி.பி.சிங்தான். தமிழ்நாட்டு தலைவர்களான கலைஞர், கி.வீரமணி ஆகியோரின் அன்புக் கோரிக்கையை ஏற்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாட் டின் சமூக நீதிக் கொள்கையை இந்தியாவின் அரசியல் கொள்கையாக நிலைநிறுத்தினார். அதனால், 11 மாதங்களிலேயே அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. ஆனாலும், சமூகநீதிப் பாதையில் பய ணித்தார். வி.பி.சிங்கிற்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட போது, தமிழ்நாட் டில் உள்ள திராவிட இயக்கத்தினர் தங்களுடைய சிறுநீரகத்தைத் தர முன்வந்தனர். வாழவேண்டிய இளைஞர்களின் சிறுநீரகம் தனக்கு வேண்டாம் என அன்புடன் மறுத்த வி.பி.சிங், "தனக்கு இன்னொரு பிறவி இருக்குமானால் தமிழ னாகப் பிறக்க ஆசை' என்று சொன்னார். அத னால்தான் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் அவருக்கு சிலை இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் வி.பி.சிங்கிற்கு முழுஉருவ கம்பீர சிலை அமைக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

எஸ்.எஸ்.சி., எம்.டி.எஸ். தேர்வு களை இனி பிராந்திய மொழிகளில் எழுதலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு குறித்து...?

சி.ஆர்.பி.எஃப். கான்ஸ்டபிள் தேர்வு உள்ளிட்ட ஒன்றிய அரசின் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதவேண்டும் என தமிழ்நாட்டிலிருந்து குரல் எழுந்த பிறகு இந்த உத்தரவு வந்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் மாநிலங்கள் மீது கரிசனம் பிறந்துள்ளது என்றாலும், இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.

எஸ். இராமதாஸ், வாணரப்பேட்டை, புதுச்சேரி

"புதிய சட்டமன்றக் கட்டடத்தை ராஜ்பவனில் கூட கட்டலாம்' என்ற துரைமுருகனின் பேச்சு பற்றி...

mm

கட்டுவதாகச் சொல்லி ஆளுநரின் மனதை கடப்பாரையால் இடித்திருக்கிறார் துரை முருகன்.

nkn260423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe