நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
சிறுவனுக்கு முத்தம் கொடுத்த பிரச்சனையில் தலாய்லாமா சிக்கி இருப்பது குறித்து?
மதத் தலைவர்கள் சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. இதில் எந்த மதத் தலைவர் என்ற வேறுபாடும் இல்லை. புத்தமதத் தலைவரான தலாய் லாமா தன்னிடம் ஆசிபெற வந்த சிறுவ னிடம், தனது நாக்கை நீட்டி, சிறுவனுடைய நாக்கால் முத்தமிடச் சொன்ன வீடியோ வைரலாகி சர்ச்சையை உண்டாக்கியது. பல தரப்பிலும் கண்டனம் எழுந்த நிலையில், அந்த சிறு வனிடமும் அவரது பெற்றோரிடமும் நண்பர்கள், உற வினர்கள் உள் ளிட்ட அனைவ ரிடமும் மன்னிப்பு கேட்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருக் கிறார் தலாய் லாமா. அறியாமையினால், பொது இடங்களில் இப்படி விளையாட்டாக நடந்துகொள்வது தனக்கு வழக்கமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார். மதங்கள் தோன்றிய காலத்தில் குற்றம் எனக் கருதப்பட்ட பல விஷயங்கள் இப்போது சட்டப் பூர்வ அங்கீகாரம் பெற்றுவிட்டன. அப்போது இயல்பாகக் கருதப்பட்ட பல விஷயங்கள் இப் போது சட்டப்படி குற்றமாகிவிட்டன. சட்டப்படி யான உலகத்தின் வாழும் மதத்தலைவர்கள் சட்டத்திற்கு மீறியவர்களாகவோ, சட்டத்தை அறியாதவர்களாகவோ இருக்கக்கூடாது. தலாய் லாமா ஒரு பாடம்.
டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
சீரும் சிறப்புமாக தமிழகத்தில் ஆட்சி செய்துவரும் அண்ணன் ஸ்டாலின் என்று எல்.முருகன் பேசியது பற்றி?
அண்ணாமலைக்கும் அவருக்குமான வார் ரூம் சர்ச்சையின் வெளிப்பாடாக இருக்கலாம். எனி னும், அரசு சார்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பொதுமேடையில் மாற்றுக் கட்சியாக இருந்தாலும் பெருமைப்படுத்திப் பேசுவது அரசியல் நாகரிகம். அதே மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலினும், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். தன் பேச்சின் நடுவே, தமிழ் நாட்டின் ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். மாநில அரசுகளின் வலிமையே இந்திய ஒன்றி யத்தின் வலிமை என்பதை குஜராத் மாநில முதல்வராக இருந்த பிரதமர் அறிவார் என்று குத்தியும் காட்டி னார். பொது மேடைகளைப் பக்குவமாகக் கையாள்வது ஒரு கலை.
தே.அண்ணாதுரை, கம்பம் புதுப்பட்டி -தேனி
தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவக்கி வைத்த போது முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளாதது குறித்து?
தொடர்ச்சியாகப் பிரதமரின் நிகழ்ச்சி களைப் புறக்கணிக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ். காரணம், அவரது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது பா.ஜ.க தலைமை. தெலங்கானா அரசியல் களத்தை பி.ஆர். எஸ். கட்சிக்கும் பா.ஜ.க. வுக்குமான போட்டிக்களமாக மாற்றுவதில் தீவிரமாக உள்ளது. அத்துடன், முதல் வரின் மகள் கவிதா மீது அமலாக்கத்துறை விசாரணை ஏவி விடப்பட்டிருக்கிறது. எல்லாமும் சேர்ந்து கோபத்தை அதிகப்படுத்தி, புறக்கணிப்புக்கு உள்ளாக்கி யிருக்கிறது. முதல்வரின் இந்த அணுகுமுறை மாநிலத்திற்கு எந்தவகையில் சாதகம் என்பதைப் போகப் போக கவனிக்க வேண்டும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
காந்தியின் தமிழ்நாட்டு பயணம் என்ற நூலை தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித் தது பற்றி...!?
1919ல் தொடங்கி 1946 வரை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, சிவகங்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் மகாத்மா காந்தி பயணித் திருக்கிறார். அந்தப் பயணங்கள் பற்றிய புத்தகம்தான் அ.ராமசாமி எழுதிய தமிழ்நாட்டில் காந்தி. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான ஏஹய்க்ட்ண்’ள் பழ்ஹஸ்ங்ப்ள் ண்ய் பஹம்ண்ப் சஹக்ன் புத்தகத்தைத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமரிடம் பரிசளித்தார் முதல்வர். 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் தஞ்சாவூருக்கு வந்த காந்தியை நீதிக் கட்சித் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வமும், தமிழறிஞர் உமாமகேசுவரனாரும் சந்தித்து பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்குமான பிரச்சினையில் நீங்கள் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு காந்தி, “இதை என்னிடத்தில் நீண்ட காலத்திற்கு முன்பே ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வந்து சொன்னார். முன் பிருந்த நிலைமை மாறி யிருக்கிறது. முன்பெல் லாம் நான் சென்னையில் (மயிலாப்பூர்) சீனிவாச அய்யங்கார் வீட்டில் வந்து தங்கினால் தாழ்வாரத்தில்தான் உட் கார்ந்திருப்பேன். இப் போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்து பழகிவருகிறேன். என் மனைவி கஸ்தூரியும் அவர்களுடைய அடுப்பங் கரை வரை செல்கிறாள்” என்று சொல்லியிருக் கிறார் காந்தி. அதாவது நீதிக்கட்சிக்கு செல்வாக்கு கிடைத்த பிறகுதான், மயிலாப்பூர் வீட்டின் தாழ்வாரத்தைத் தாண்டி மகாத்மா காந்தி குடும்பமே நுழைய முடிந்திருக்கிறது. இப்படிப் பல விவரங்கள் அந்தப் புத்தகத்தில் உள்ளன.
எஸ். இராமதாஸ், வாணரப்பேட்டை -புதுச்சேரி
"தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் அப்பாவும் டாக்டர் ஆகியிருக்க முடியாது'” என்ற பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் பேச்சு பற்றி...?
உண்மையைத்தான் பேசியிருக்கிறார். இத்தனை காலம் கழித்தும், இப்போது திடீரென்றும் இந்த உண்மையைப் பேசவேண்டிய அரசியல் நிர்பந்தம் என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்.