மு.முஹம்மதுரபீக், ரஷாதீ, விழுப்புரம்
"2024-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறோம். பா.ஜ.க.வினருடைய மேஜையில் வகுப்புவாத வன்முறை, வெறுப்பு பேச்சுக்கள், சிறுபான்மை யினரைத் தூண்டிவிடுதல், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., தேர்தல் ஆணையத்தை வைத்து எதிர்க்கட்சிகளை குறிவைத்தல்... மேற்கு வங்கம் பற்றி எரிவதும், கர்நாடகா, குஜராத்தில் கலவரம் புகைவிடத் தொடங்கி இருப்பதும் அதற்கான முன்னோட்டமே'' என்று கூறியுள்ளாரே கபில் சிபல்.
கபில்சிபல் புரிந்துகொண்டதை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்களும் புரிந்துகொள்ளவேண்டும். காங்கிரஸ் தலைமை அதற்கேற்ப செயல் வியூகம் வகுக்க வேண்டும். இல்லையென்றால் 2029-ஐ நெருங்கும்போதும் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
ராகுல் விவகாரத்தில், வெளிநாடுகள் கருத்து தெரிவித்து இருப்பது பற்றி...?
உலகில் இந்தியா மிகப்பெரி
மு.முஹம்மதுரபீக், ரஷாதீ, விழுப்புரம்
"2024-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறோம். பா.ஜ.க.வினருடைய மேஜையில் வகுப்புவாத வன்முறை, வெறுப்பு பேச்சுக்கள், சிறுபான்மை யினரைத் தூண்டிவிடுதல், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., தேர்தல் ஆணையத்தை வைத்து எதிர்க்கட்சிகளை குறிவைத்தல்... மேற்கு வங்கம் பற்றி எரிவதும், கர்நாடகா, குஜராத்தில் கலவரம் புகைவிடத் தொடங்கி இருப்பதும் அதற்கான முன்னோட்டமே'' என்று கூறியுள்ளாரே கபில் சிபல்.
கபில்சிபல் புரிந்துகொண்டதை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்களும் புரிந்துகொள்ளவேண்டும். காங்கிரஸ் தலைமை அதற்கேற்ப செயல் வியூகம் வகுக்க வேண்டும். இல்லையென்றால் 2029-ஐ நெருங்கும்போதும் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
ராகுல் விவகாரத்தில், வெளிநாடுகள் கருத்து தெரிவித்து இருப்பது பற்றி...?
உலகில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. 100 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை செலுத்தி ஓர் அரசை தேர்ந்தெடுக்கும் நிலைமை உலகில் வேறெந்த நாட்டிலும் கிடையாது. அதனால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளாக இருந்தாலும், ஜனநாயகத்தின் தொட்டில் எனப்படும் இங்கிலாந்தாக இருந்தாலும் இந்தியாவின் ஜனநாயக ஆட்சிமுறையைக் கவனிப்பது வழக்கம். அண்மைக்காலமாக இந்தியாவில் ஜனநாயக நெறியிலான ஆட்சிதான் நடக்கிறதா என்ற கேள்வி இந்தியாவில் உள்ளவர்களுக்கே ஏற்படும்போது, வெளிநாட்டுக்காரர்களுக்கும் ஏற்படுவது இயல்புதான். அதிலும், நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் மீது கவனம் திரும்புவது இயற்கை. கேரளா வில் வயநாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட ராகுல் காந்திக்கு, குஜராத்தின் சூரத்தில் உள்ள மாஜிஸ்ட்ரேட் அளித்த தீர்ப்பால், டெல்லியில் உடனடியாகப் பதவிப் பறிக்கப்படுகிறது என் றால் அதன் பின்னணி என்ன என்பதை அறிந்துகொள் ளும் ஆர்வமும், தேவையும் எல்லா நாடுகளிலும் இருக்கும். நம் நாட்டவர்களால் பேசமுடியாத சிலவற்றை, வெளிநாடு கள்தான் இப்போது வெளிப்படையாகப் பேசுகின்றன.
வாசுதேவன், பெங்களூரு
செல்போன் வடிவமைத்து 50 வருடங்கள் ஆகிவிட்டனவாமே!
வயர்லெஸ் போன்களைத் தொடர்ந்து செல்போன் உருவாக்கும் முயற்சி பல நாடுகளிலும் மேற்கொள்ளப் பட்டது. மேற்கத்திய நாடுகளில் செல்போன் உருவாக்கப் பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. நம் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன் அது நடைமுறைக்கு வந்தது. ஒரு சின்ன செங்கல் போல வடிவமும் எடையும் இருந்தது காலம் அது. பணக்காரர்களும் மிக அவசரத் தேவையுள்ள வர்களுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. பின்னர் ரிலையன்ஸ் சிம்முடன் 500 ரூபாய் செல்போன் வந்தது. அதைத் தொடர்ந்து எளிய மக்களை நோக்கி செல்போன் வியாபாரம் பெருகி இப்போது ஆன்ட்ராய்டு, ஐ-போன் எல்லாமும் சர்வசாதாரணமாகிவிட்டது. பேசுவதைத் தாண்டி, காட்சி வடிவில் எல்லாவற்றையும் வெளிப்படுத்த செல்போனே சிறந்த சாதனமாக உள்ளது. கை இல்லாமல்கூட வாழ்ந்துவிட முடியும். கைப்பேசி இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைமைக்கு இந்த 50 ஆண்டுகளில் வந்திருக்கிறது உலகம்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள் தமிழ்நாடு அரசு உருவாக்க உத்தேசித்திருப்பது ஆரோக்யமான விஷயமா..?
ஒரு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரப்பளவில் மிகப் பெரிய மாவட்டம். ஆனால், அதன் தலைநகரம் மதுரை. அந்த நிலையை எம்.ஜி.ஆர். ஆட்சியில் மாற்றி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என மூன்று மாவட்டங்களாகின. திருச்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டு பிறகு நான்கானது. தஞ்சாவூரும் மூன்றானது. கோவையிலிருந்து ஈரோடு பிரிந்து பிறகு திருப்பூர் மாவட்டமும் பிரிந்தது. மதுரையிலிருந்து திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் பழனி மாவட்டம் உருவாகிறது. இப்படிப் பல மாவட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்படும் போது மாவட்டங்கள் பலவும் வட்டங்கள் அளவுக்கு ஆகிவிடுகின்றன. பிரிக்கின்ற அளவுக்கு கட்டமைப்பு களையும் உருவாக்கினால் அதுதான் பயன் தரும்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77
பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வாக உள்ள நயினார் நாகேந்திரன், இப்போது பா.ஜ.க.வில் பயணித்தாலும், "அ.தி.மு.க.விலிருந்து விலகியது எனக்கு நெருடல் அளிக்கிறது' என்கிறாரே?
மனசாட்சிக்குப் பயந்தால் அரசியல் செய்ய முடியாது என்பதும் அவருக்குத் தெரியும்.
தே.மாதவன், கோயமுத்தூர்-45
"பீகாரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கலவரக்காரர்களை தலைகீழாக தொங்கவிடுவேன்' என்கிறாரே அமித்ஷா?
உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் என பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதற்கு முன் நடந்த கலவரங்களின்போது அமித்ஷாவின் கண்கள் கட்டப்பட்டிருந்ததோ!