எஸ்.இராமதாஸ், வாணரப்பேட்டை, -புதுச்சேரி

"தமிழ்ப் புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி இருக்கும்' என்று அண்ணாமலை கூறியுள்ளாரே...

புதுசா வீடியோ, ஆடியோ என்று சொந்தக் கட்சிக்காரரை குறிவைக்கப் போகிறாரா!

மஞ்சு வாசுதேவன், பெங்களூரு

Advertisment

பாடகர் டி.எம்.எஸ் வாழ்ந்த தெருவிற்கு டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்று பெயர் வைத்து இருப்பது பற்றி!

தமிழ்நாட்டில் ஒரு தலைமுறையைக் கட்டி ஆண்ட குரல், டி.எம். சௌந்தரராஜனின் குரல். இரு பெரும் திரை நட்சத்திரங்களான எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் டி.எம்.எஸ்.ஸின் பின்னணி குரல் அத்தனை பொருத்த மாக அமைந்ததால் அந்த நடிகர்களே பாட்டுப் பாடுவது போன்ற உணர்வை ரசிகர்கள் பெற்றார்கள். டி.எம்.எஸ். பாடிய பாடல்கள் எம்.ஜி.ஆர். பாட்டு, சிவாஜி பாட்டு எனப் பெயர்பெற்று நிலைத்தன. அதிலும், எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் இருந்தபோதும், அ.தி.மு.க.வை ஆரம்பித்த போதும், திரைப்படங்களில் அதற்கேற்ப பரப்புரை செய்தபோது டி.எம். எஸ்.ஸின் குரல் அவருக் குப் பெருந்துணை செய்தது. இன்றுவரை அ.தி.மு.க. மேடை களில் டி.எம்.எஸ் பாடியதுதான் எம்.ஜி.ஆர். பாட்டாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பின்னணியில் முன்னணி பெற்ற பாடகரான டி.எம். எஸ்.ஸின் பக்திப் பாடல்கள் தனித் துவமானவை. மனதை உருக்குபவை. முருகனைப் பற்றி அவர் பாடிய பாடல்கள் அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கக் கூடியவை. பாட்டும் நானே.. பாவமும் நானே.. எனப் பாடிய டி.எம்.எஸ்., தன் வாழ்க்கையையும் இசைக்காகவே அர்ப்பணித்தவர். சென்னையில் அவர் வாழ்ந்த தெருவுக்கு அவருடைய நூற் றாண்டில் அவர் பெயரைச் சூட்டி யிருக்கிறார் முதல்வர். ஒரு கலைஞனை அடுத்த தலைமுறையினருக்கு நினைவு படுத்தும் பங்களிப்பைச் செய்திருக்கிறார் கலைஞரின் பிள்ளை.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு எதிராக கருத்து கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என அரசு ஊழியர்களுக்கு துணைநிலை ஆளுநர் எச்சரிக்கை விடுத்து இருப்பது பற்றி?

Advertisment

ஜம்மு-காஷ்மீரை சில ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்தவர் முதலமைச்சர். அப்போது அது மாநிலம். இப்போது அது யூனியன் பிரதேசமாக அதிகாரம் குறைக்கப்பட்டு, துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பதென்பது ஜனநாயகப் படுகொலை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்ற மாநிலத்தில், நியமன கவர்னரின் ஆட்சி முறை கொண்டு வரப்பட்டிருப்பது பற்றித்தான் எச்சரிக்க வேண்டுமே தவிர, மக்களாட்சியைக் குலைத்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள துணைநிலை ஆளுநர் எச்சரிக்கை விடுவதென்பது ஜனநாயக விரோதம், ஜனநாயக விநோதம்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற மகத்தான கலைஞர்களின் நடிப்புத் திறமைக்கு ஏற்றவாறு கதை எழுதவும் இயக்கவும் தற்போது ஆட்கள் இருக்கிறார்களா?

mm

Advertisment

நடிகர் திலகம் இன்று இல்லை. திரையுலகமும் அவர் காலத்தில் இருந்ததுபோல் இப்போது இல்லை. கிருஷ்ணன்-பஞ்சு எனும் இரட்டை இயக்குநர்கள் தொடங்கி பீம்சிங், ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன், ஏ.சி.திருலோகச் சந்தர், கே.விஜயன் என, பல ஜாம்பவான்களின் இயக்கத்தில் தன் திறமையை வெளிப்படுத்தியவர் சிவாஜி. அவரே அறியாத அவரது மற்றொரு கோணத்தை "முதல் மரியாதை' படத்தின் மூலம் திரையில் வெளிக்கொண்டு வந்தவர் பாரதிராஜா. இதுதான் காலத்திற்கேற்ற மாற்றம். நடிகர் திலகம் இன்று இருந்தால், இன்றுள்ள இளம் இயக்குநர்களுக்கு ஏற்ப அவர் தன் திறமையை வெளிப்படுத்துவார். நடிகர் திலகத்திற்கு ஏற்ப இளம் இயக்குநர்களும் அற்புதமான கதாபாத்திரங்களை உருவாக்குவார்கள். உண்மையான கலைஞர்கள் எல்லா காலத்திலும் தங்களை வெளிப்படுத்துவார்கள்.

தே.அண்ணாதுரை, கம்பம் புதுப்பட்டி -தேனி

முடிந்தால் கைது செய்து பார் என்கிறாரே பிரியங்கா?

mm

இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேரு குடும்பத்திற்கு பெரும் பங்கு உண்டு. விடுதலை பெற்ற இந்தியாவில் ஜனநாயகத்தை நெருக்கடிக் குள்ளாக்கியதிலும் அந்தக் குடும்பத்திற்கு பங்கு உண்டு. இருளும்-ஒளியும் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். இந்தியாவை இருள் சூழ்ந்திருப்பதால், ஒளியைத் தேடும் ஜனநாயகப் போராட்டம் முன் னெடுக்கப்படுகிறது. அதில் முன் னின்றபடி, கைது செய்து பார் என்று உரிமைக் குரல் எழுப்புகிறார் நேருவின் கொள்ளுப் பேத்தி.